எல்லோரும் ஏழைகள்தான்...


ஒரு நாள் மிகவும் செல்வந்தரான ஒருவர் தனது மகனிற்கு வறுமை என்றால் என்ன ஏழ்மை என்றால் என்ன என்பதை விளங்கப்படுத்த விரும்பினார்...தனது மகனை அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் அந்த ஏழை எளியவர்களுடன் சில நாட்கள் தங்கி அவர்களுடனேயே வாழ்ந்து..அவர்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொண்டனர்...அங்கு தங்கி இருந்த நாட்கள் முழுவதும் பகல் இரவாக அவர்களுடனேயே தங்கி இருந்தனர்.
சில நாட்கள் அங்கு தங்கி இருந்த பின் தமது ஊரிற்கு திரும்பி வரும் வழியில், செல்வந்தரான அப்பா தனது மகனிடம் கேட்கிறார்... பிரயாணமும் அங்கு தங்கி இருந்த நாட்களும் எப்படி இருந்தது...?
மகன் பதிலளிக்கிறான்... பிரமாதம் அப்பா...அது ஒரு வித்தியாசமான அனுபவம்..

ஏழை மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டாயா... அப்பா கேட்கிறார்..

ஆம்...மிகவும்...நன்றாக அறிந்துகொண்டேன்... மகன் பதிலளிக்கிறான்..

அப்படியா...மிக்க மகிழ்ச்சி...சரி அவர்களிடமிருந்து நீ என்ன விடயங்களை கற்றுக்கொண்டாய்... அப்பா வினவுகிறார்...

மகன் சரமாரியாக பதிலளிக்கிறான்...இப்படியாக...

எங்களிடம் இருப்பதோ ஒரே ஒரு நாய்க்குட்டி..அவர்களிடம் நான்கு உள்ளது..

எங்களிடம் உள்ளதோ எமது தோட்டத்தின் மத்தி வரை பரந்துள்ள ஒரு நீச்சல் குளம்... அவர்களிடம் உள்ளதோ எல்லையற்ற நீர் அருவி...

எங்கள் தோட்டத்தை இரவில் ஒளியூட்ட இறக்குமதி செய்யப்பட்ட மின் விளக்குகள்...அவர்களின் இடத்தை ஒளியூட்ட பிரகாசமான நட்சத்திரங்களும் நிலாவும்...

எங்கள் விறாந்தை எங்கள் கேட் வரையே உள்ளது அவர்களதோ...எல்லையற்றது...

எங்களிடம் உள்ளதோ ஒரு சிறிய நிலத்துண்டு அதில் தான் நாம் வாழ்கிறோம்...அவர்களிடம் உள்ளதோ எமது கண்ணுக்கெட்டா தூரம் வரையுள்ள தோட்டமும் தோப்பும்...

எங்களிற்கு சேவை செய்ய வேலையாட்கள் உள்ளனர்...அவர்களோ மற்றவர்களிற்கு சேவை செய்கிறார்கள்...

நாம் எமக்கு தேவையான உணவினை கடைகளில் வாங்குகிறோம்...அவர்களோ தேவையானதை உற்பத்தி செய்கிறார்கள்...

எங்களையும் எமது உடைமைகளையும் பாதுகாக்க எம்மை சுற்றி மதில் உள்ளது...அவர்களிட்கோ...சுற்றி நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர்...

செல்வந்தரான அப்பவோ பேச்சிழந்து நின்றார்... மகன் தொடர்ந்தான்...

நாம் எவ்வளவு வறியவர்களாக உள்ளோம் என்பதை உணர்த்தியதற்கு மிக்க நன்றி அப்பா...

எங்களிடம் உள்ளதை மட்டுமே பெருமையாகவும் பெரிதாகவும் பார்ப்பதால்... எங்களிடம் இருக்கவேண்டிய நிறைய விடயங்களை இழந்தவர்களாக இருக்கிறோம்...

எங்களிற்கு கிடைக்கும் ஒவ்வொரு சிறிய விடயங்களையும்... நன்றியுடன் பார்ப்போம்...பார்ப்போமா...???

"Life is too short and friends are too few”

இராமாயணமும் .... முகாமைத்துவமும் ... PART III

இராமயணத்தில் இராவணன் தனது இராச்சியத்தினை இழப்பதற்கு முக்கிய காரணம் நல்ல முகாமைத்துவப்பண்புகள் அவனிடம் காணப்படாமையே ஆகும்.

இராவணன் ஆரம்பத்திலிருந்தே தனது முகாமையாளர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்தாது செயல்பட்டதால் இராமனுடன் போர் புரிந்து தனது நாட்டை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

மேலும் நிறுவனம் ஓன்று இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் தருவாயில் அதனது முகாமையாளர்களே அந்நிறுவனத்தை பிணையில் எடுக்கும் திறமையை கொண்டிருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல முகாமையாளர் தனது கீழ் நிலை உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளை செவி மடுப்பதோடு, நிறுவனத்தின் நலன் கருதி அனைவரையும் ஓன்று சேர்த்தே செயல்படுவார்.
இராவணனது தவறான முகாமைத்துவப் பண்புகள் விபீஷணனின் பிரிவிற்கு காரணமாக அமைந்தது. இராவணன் நெருக்கடியான கால கட்டத்தில் நல்ல முகாமயாளனாக திகழ்ந்த விபீஷணனை இழந்து போரில் தோல்வியை தழுவிக்கொண்டான்.

நிறுவனங்கள் செயல்படுவது உறவுகளிலேயே... ஊழியகளுடனும், வாடிக்கையாளர்களுடனும் நல்ல உறவை பேணி வளர்க்கும் ஒரு முகாமையாளன் நிறுவனத்தின் ஒரு தூணாக காணப்படுவான், இராமனிடம் இந்த பண்பு நன்கே காணப்பட்டது, உறவுகளை பேணி வளர்ப்பதில் இராமன் கைதேர்ந்தவனாக காணப்பட்டார்.

இந்த பண்பினை விளக்க ஒரு சம்பவம் ... இராவணன் சண்டையில் காயமுற்று இறக்கும் இறுதி கட்டத்தில் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கின்றான்.. அந்த இடத்தில் இராமன் அவன் பக்கத்தில் அமர்ந்து தனது வாழ்வில் தான் பெற்ற சில அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறான். அதே இராவணன் ராமனால் அனுப்பப்பட்ட லக்ஷ்மணிடம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இராமனுடன் தனது அனுபவங்களை சந்தோசமாக பகிர்ந்து கொண்டான், இந்த நிகழ்வு இராமனின் உறவினை வளர்க்கும் பண்பினை தெளிவு படுத்துகின்றது.

இது போன்ற சில உதாரணங்களும் இன்னும் பல சம்பவங்களும் முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துகூறுகின்றன. முகாமையாளர்கள் எமது காவியங்களிலிருந்து கற்றுக்கொள்ள இன்னும் பல விடயங்கள் உள்ளன. இராமாயணம் மட்டுமல்ல, கீதை, மகாபாரதம் போன்ற காவியங்களிலும் முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தும் சம்பவங்கள் பல காணப்படுகின்றன...

மீண்டும் ...இராமாயணமும் .... முகாமைத்துவமும் ... PART IV... இல் சிந்திப்போம்...

பிரச்சனைகளை தீர்ப்பது எவ்வாறு...ஒரு சின்ன ஆராய்ச்சி...

இலகுவாக பிரச்சனைகளை தீர்க்க ஏழு வழிமுறைகள்....

1. பிரச்சனையை அடையாளம் காணுதல் : மிக முக்கியமான படிமுறை...என்ன பிரச்சனை, எங்கு பிரச்சனை என்று தெளிவாக தெரியாவிடின் எவ்வாறு பிரச்சனையை தீர்ப்பது.


2. அனைவரினதும் பங்களிப்பு: கலந்துரையாடலில் வெறுமனே தீர்மானம் எடுப்பவர்கள் மட்டும் இல்லாமல் பிரச்சனையுடன் தொடர்பு பட்டவர்கள் அல்லது பாதிக்கப்படக்கூடியவர்களையும் இணைத்தல்.

3. அனைவரினதும் இலகு பங்களிப்பிற்கான சூழலை உருவாக்குதல்: அனைவரையும், விசேடமாக கலகலப்பாக பேசாதவர்களையும் கலந்துகொள்ள உக்கப்படுத்துதல், கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் இடமளித்தல். Brain Stroming முறை மூலம் அனைவரினதும் பங்களிப்புக்கு வழி கோலால், இவ்வாறான செயல்பாடு மூலம் அனைவரினதும் பங்களிப்பினை ஊக்கப்படுத்த முடியும், கருத்துக்கள் அனைத்தும் ஆரம்பத்திலேயே ஆராயப்படவேண்டியதில்லை.

4. நடைமுறைக்கு சாத்தியமான ஆலோசனைகளை குழுவாக தெரிவு செய்தல்: இது ஒரு முக்கியமான செயல்பாடாகும், அந்தந்த நிறுவனத்திற்கோ அல்லது குடும்பத்திற்கு மட்டுமே எது எப்படி வேலை செய்யும் என தெரியும். நடைமுறைபடுத்தும் விடயமானது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க கூடியதாக அமைதல் அவசியம்.

5. இறுதி முடிவு: கை வசம் உள்ள மாற்றுவழிகளில் மிகப்பொருத்தமான ஒன்றினை தெரிவு செய்தல். யார் என்ன செய்வது , எப்படி செய்வது, யார் பொறுப்பினை ஏற்பது எவ்வாறு முகாமைத்துவம் செய்வது போன்ற விடயங்களை தெளிவு படுத்திய பின் திட்டத்தை அமுல் படுத்துதல்.

6. வளர்ச்சியை / அபிவிருத்தியை கண்காணித்தல்

7. வெற்றியினை கொண்டாடுதல்....

வழிபாட்டில் உங்களிற்கு நம்பிக்கை உண்டா....? வாழ்வின் கடினமான சூழ்நிலைகளில் வழிபட்ட அனுபவம் உண்டா....?

எது எப்படியோ படிமுறையின் ஆரம்பத்திலேயே நன்றாக வளிபட்டுக்கொள்வது சாலச்சிறந்தது...

அப்படியும் இல்லையெனில்... பிரச்சனைகளை தீர்க்கும் படிமுறையில் கடினமான சூல்நிலைகளிலாவது வழிபடுங்கள்....

Happy Problem Solving .....

நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... Time Waits For None ...


ஒரு சகோதரியின் அருமையை அறிய வேண்டுமா...? சகோதரி யாரும் இல்லாதவனிடம் கேட்டுப்பாருங்கள் ...

பத்து வருடங்களின் பெறுமதி தெரிய வேண்டுமா...? புதிதாக விவாகரத்து ஆனா தம்பதிகளிடம் கேட்டுப்பாருங்கள்...

ஒரு வருடத்தின் அருமையை உணர வேண்டுமா...? இறுதி சோதனையை தவறவிட்ட ஒரு மாணவனிடம் கேட்டுப்பாருங்கள்...

ஒன்பது மாதங்களின் பெறுமதியை உணர... சற்று முன் குழந்தையை பெற்றெடுத்த தாயிடம் கேட்டுப்பாருங்கள்...

ஒரு மாதத்தின் பெறுமதியை உணர வேண்டுமா...? உரிய காலத்திற்கு முன் குழந்தையை பெற்றெடுத்த தாயிடம் கேட்டுப்பாருங்கள்...

ஒரு கிழமையின் பெறுமதியை தெரிந்துகொள்ள... வாராந்த பத்திரிகை ஒன்றின் ஆசிரியரை கேட்டுப்பாருங்கள்...

ஒரு மணித்தியாலத்தின் அருமையை அறிய... பார்க்கத்துடிக்கும் காதலர்களை கேட்டுப்பாருங்கள்...

ஒரு நிமிடத்தின் அருமையை அறிய... பஸ்ஸையோ, புகையிரதத்தை அல்லது விமானத்தை தவறவிட்ட ஒரு பிரயாணியிடம் கேளுங்கள்...


ஒரு வினாடியின் பெறுமதியை தெரிந்துகொள்ள... பாரிய விபத்து ஒன்றிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய ஒருவரை கேட்டுப்பாருங்கள்...

ஒரு நொடியின் அருமையை தெரிய... ஒலிம்பிக் ஓட்டப்போடியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற ஒரு வீரனை கேட்டுப்பாருங்கள்...

நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... Time Waits For None ...


உங்களின் ஒவ்வொரு காணப்பொழுதையும் பெறுமதியாகப்பாருங்கள்...


உங்களிற்கு பிடித்தவர்களுடன் பகிரும்போது ஒவ்வொரு காணப்பொழுதும் பன்மடங்கு பெறுமதியாக படும் உங்களிற்கு...

இராமாயணமும் .... முகாமைத்துவமும் ... PART II

தற்கால முகாமைத்துவத்தில் SWOT (strength, weakness, opportunities and threats) ஆய்வு மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது.

இராமாயணத்தில் ஹனுமன்தான் இலங்காபுரிக்கு செல்லவேண்டும் என முடிவு செய்தது நல்ல ஒரு முகாமையாளனின் பண்பினை எடுத்துக்கட்டுகிறது. நல்ல ஒரு முகாமையாளன் ஆனவன் தன் கீழ் பணிபுரியும் ஆட்களின் ஒளிந்திருக்கும் திறமைகளையும், நல்ல பண்புகளையும் வெளிக்கொண்டுவரும் வகையில் செயல்படவேண்டும்.



இராமாயணத்தில் அறிய வேண்டிய இன்னுமொரு நல்ல படிப்பினை நல்ல மற்றும் கெட்ட முகாமையாளருக்குரிய பண்புகளாகும்.



பல்வேறுபட்ட இயல்புகளை கொண்ட மனித வளங்களை சரியாக ஒன்றிணைப்பதன் மூலம் குறிப்பிட்ட இலக்கையோ அல்லது நோக்கத்தையோ அடையும் நோக்கில் செய்யட்படுபவனே நல்ல ஒரு முகாமயாளன் ஆகமுடியும்.



இந்த வகையில் இராமாயணத்தில் சுக்கிரீவன் ராமனின் துணையுடன் தன்னை விட பல மடங்கு ஆற்றல் கொண்ட தன சகோதரனிடமிருந்து ராட்சியத்தை கைப்பற்றியது நல்ல ஒரு முகாமையாளனின் பண்பினை வெளிப்படுத்துகின்றது. குறிப்பிட்ட நோக்கத்தினை அடையும் நோக்கில் தந்திரோபாய உறவுகளை (strategic alliance ) வளர்த்துக்கொள்வது நல்ல முகாமையாளனின் ஒரு பண்பு, அது சுக்க்ரீவனிடம் காணப்படுகின்றது.



சுக்ரீவன் தன்னிடமிருந்த முகாமைத்துவ ஆற்றலை பயப்படுத்தி அங்கதனையும் தனது நோக்கத்தினை அடையும் நோக்கில் செயல்பட்டது நல்ல முகாமையாளனின் பண்பினை காடுகின்றது.

பகைவர்களை வெல்லவல்ல தோள் வலிமையையும், குற்றமற்ற தூய்மை நிலையையும் கொண்ட அங்கதான் தன்னிடம் அடைக்கலப்படுத்தப்பட்ட பின் இராமன் தன் உடைவாளை அளித்து ஏற்றுக் கொண்டான். இத்தகைய அடைக்கலச் சிறப்பால் இராமனது உடைவாளை ஏந்தும் சிறப்புப் பெற்றவன் அங்கதன் ஒருவனே - this is called Strategic Alliance


மீண்டும் பகுதி III இல் சந்திப்போம்...

இராமாயணமும் .... முகாமைத்துவமும் ... PART I

முகாமைத்துவம் என்றல் என்ன....???

எளிய முறையில் முகாமைத்துவத்தை கூறுவதாயின்... ஒரு நிறுவனத்தினதோ... அல்லது தனிப்பட்ட ஒருவரினது குறிப்பிட்ட இலக்கை அடையும் நோக்கில் மனித வலுவையும் ஏனைய காரணிகளையும் ஒன்றிணைத்து செயல்படுவதே முகாமைத்துவம் ஆகும்.

இன்னும் எளிய முறையில் சொல்வதேயானால் ஒரு இலக்கை அடையும் நோக்கில் செயல்படுதல் முகாமைத்துவம் ஆகும்.

பரந்தளவில் முகாமைத்துவத்தை நோக்கும் போது முகாமைத்துவமானது பின் வரும் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக காணப்படும்.


  1. திட்டமிடல் - Planning
  2. ஒழுங்கமைத்தல் - Organizing / Coordination
  3. வழிநடத்தல் - Leading
  4. கட்டுப்படுத்தல் - Controling

என நான்கு படிமுறைகளை / செயற்பாடுகளை கொண்டதாக அமையும் .

முகாமைத்துவ எண்ணக்கருக்களையும், அடிப்படி கோட்பாடுகளையும் விளக்க பல நூற்றுக்கணக்கான புத்தகங்களும், ஆக்கங்களும், வெளியீடுகளும், ஆராய்ச்சிகளும் காணப்படுகின்றன இவை அனைத்தும் முகமைதுவத்தில் காணப்படும் கோட்பாடுகளையும், எண்ணக்கருக்களையும் விளங்கப்படுதுவதுடன் அவற்றை நாளந்த செயட்படுகளில் பயன்படுத்துவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகளையும் விளக்குகின்றன.

இவை அனைத்தும் முகாமைத்துவத்தை ஒரு விஞ்ஞானமாக மட்டும் பார்க்காமல் அதை ஒரு கலையாகவே கருதுகின்றன .

இந்த முகாமைதுவக்கொள்கைகளை பயன்படுத்தி எவ்வாறு ஒரு நிறுவனத்தை கட்டி எழுப்புவது என பல ஆராய்ச்சி கட்டுரைகளிலும், பல சமகால சம்பவங்களை மேற்கோள் காட்டியும், உண்மை சம்பவங்கள், அனுபவங்களையும் மேற்கோள் காட்டி சொல்லப்படுகின்றது.

தற்கால மேற்குலக முகாமைத்துவ குருக்களின் தோன்றுதலுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இவ்வாறான முகாமைத்துவ கோட்பாடுகளின் நடைமுறைகளை எம்மவர்கள் மிக அழகாக விளக்கி சொல்லும் வகையில் பல இதிகாசங்களை புனைந்துள்ளனர். பழம்பெரும் எழுத்தாளர்களான வால்மீகி, துளசிதாஸ் போன்றோர் தமது இந்து இதிகாசங்கள் மூலம் இந்த முகாமைத்துவ கோட்பாடுகளை அழகாக விளக்கியுள்ளனர்.

எமது பலம் பெரும் இதிகாசங்களை படிப்பதன் மூலம் இந்த முகாமைத்துவ கோட்பாடுகள் அதில் எவ்வாறு விளக்கப்படுள்ளன என விரிவாக அறிந்துகொள்ள முடியும். இந்த இதிகாசங்களின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் எங்களுக்கு ஒவ்வொரு புதிய பாடங்களை புகட்டுவதோடு, எவ்வாறு முகாமைத்துவ கொள்கைகள் சூட்சுமமாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அழகாக விளக்கி கூறுகின்றன.

இரமாயனதிலிருந்து சில உதாரணங்கள்...

ஹனுமான் இலங்காபுரிக்கு செல்லும் பகுதியில் வால்மீகி தனது முகாமைத்துவ பாண்டித்தியத்தை அழகாக காடியுள்ளார்.

ஹனுமான் இலங்காபுரிக்கு செல்வதன் முக்கிய நோக்கம்
இலங்காபுரியில் சீதாதேவியை எங்கே சிறை வைத்துள்ளார்கள் என்று கண்டறிய வேண்டும் இராமபிரானின் செய்தியை சீதபிராட்டியிடம் சேர்க்கவேண்டும்

சீதாபிராட்டி இலங்காபுரியில் சிறை வைக்கப்பட்ட விடயம் ஊர்ஜிதப்படுத்தபட்டபின் ஹனுமான்

இலங்காபுரி செல்ல பணிக்கப்படுகின்றார். இதன் மூலம் ஹனுமானின் உண்மயான திறமை, பலம் வெளிக்காட்டப்படுகின்றது. எதிரியின் பாசறையினுள் செல்லும் தைரியமும் , பலமும் ஹனுமனுக்கே உள்ளது என்ற திறமையை அடையாளம் கண்டு அந்த பணியினை அவருக்கு ஒதுக்குகின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்ப்டட்ட பின் இலங்காபுரி வந்த ஹனுமான் முதலில் செய்த வேலை இலங்காபுரியின் நிலைமையை முற்றாக அலசி ஆராய்ந்தது. (Situation Analysis)

ஹனுமான் சகல சந்தர்ப்பங்களிலும் ஒரு சிறந்த முகாமையாளரகவே செயற்பட்டார்.

எதிரியின் பாசறையில் காணப்படும் பலம் (Strength), பலவீனம் (Weakness) என்பவற்றை ஆராய்ந்ததோடு. இலங்காபுரியில் காணப்படும் சாதக (Opportunities), பாதக (Threats) நிலைமைகளையும் ஆராய்ந்து செயற்பட்டார். (SWOT Analysis).

  1. இதுவே முகாமைத்துவத்தின் முக்கிய பண்புகளாக காணப்படுகின்றன;
  2. அடையவேண்டிய இலக்கை அடையாளம் கானல்...
  3. மனதளவில் தயார் நிலைக்கு உள்ளாதல்...
  4. சரியான திட்டமிடல்...
  5. எதிரியின் பலம், பலவீனத்தையும், தங்களின் சாதக, பாதகங்களையும் இனம்காணுதல்....
  6. செயற்பாட்டில் இறங்குதல்...

அப்புறம் என்ன வெற்றி உங்கள் பக்கம் தான்...

பகுதி II இல் மீண்டும் சிந்திப்போம் .......

எப்படி குழந்தை பிறக்கும் ????

இரு திருமணமான பெண்கள் பேசியதை ஒட்டுகேட்ட போது ....... மாட்டிய சில தகவல்கள்.....

முதலாமவள் :"ஏண்டி குழந்தை பிறக்கவில்லையே என்று டாக்டரிடம் போனியே என்னாச்சு?

இரண்டாமவள் :"நிறைய மருந்துகள் தந்தார்-ஆனால் பலனளிப்பதாகஇல்லை"

முதலாமவள் :"அப்படியானால் உனது கணவர் என்ன சொல்கிறார்"

இரண்டாமவள் :"டாக்டரை மாற்று என்கிறார்"

முதலாமவள் :"ஐய்யோ.. அப்ப டாக்டர் என்ன சொன்னார்?"

இரண்டாமவள் :"டாக்டர் புருசனை மாற்று என்கிறார்..நான் என்ன செய்ய???

சயனைடுக்கே (Cyanide) ஒரு prescription .....

ஒரு மாலை வேளை... நகரின் மத்தியில் உள்ள ஒரு பிரபலமான மருந்தகம்... கொஞ்சம் பர பரப்பு குறைந்து காணப்பட்டது... அவசர அவசரமாக ஒரு பெண்மணி கடையினுள் நுழைகிறாள்...

கொஞ்சம் தணிந்த குரலில்..எனக்கு இங்கு கொஞ்சம் சயனைட் கிடைக்குமா...???

கடைக்காரருக்கு தூக்கி வாரிப்போட்டது... இருப்பினும் தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பெண்மணியிடம் வினவினார்... ஏன் உங்களிற்கு சயனைட் தேவைப்படுகிறது...???

எனது கணவனை உடனடியாக கொல்லவேண்டும்...!!!! படாரென பதில் வந்தது அந்த பெண்மணியிடமிருந்து...

கடைக்காரருக்கு மீண்டும் ஒரு தர்மசங்கடமான நிலை... பணத்திற்காக இந்த பெண்ணுக்கு சயனைட் கொடுத்தால்... அவள் அதை தனது கணவனுக்கு கொடுத்து சாகடிப்பாள்... பின்னால் போலீஸ் விசாரணை வரும் போது கொலை குற்றத்துக்கு உதவி செய்ததற்கு தானும் உள்ளே போய் கம்பி என்ன வேண்டி வரும்... என யோசனை செய்துகொண்டிருக்கையில்... அந்த பெண்மணி குறுக்கறுத்து... நான் கேட்டது இங்கு கிடைக்குமா ...... ??? என கொஞ்சம் அதட்டலாகவே கேட்டால்....!!!

சட்டென யோசனையிலிருந்து மீண்ட கடைக்காரர்... சற்றே கடினமான குரலில் சொன்னார்... இங்க பாருங்க அம்மணி நாங்க சயனைட் எல்லாம் இங்க விக்கிறதில்லை... அது சரி ஏன் உங்கள் கணவரை கொலை செய்ய திட்டம் போடுகிறீர்கள்....???

இதை கேட்ட பெண்மணி...மெதுவாக தனது கைப்பையிலிருந்து ஒரு போட்டோவை வெளியே எடுத்து கடைக்காரரின் முன் போடுகிறாள்....

கண்கள் இருட்ட அந்த போட்டோவை பார்த்த கடைக்காரர்.....அப்படியா சங்கதி உங்களிடம் சயனைடுக்கான prescription இருப்பதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை ... என கேட்டபின் அமைதியாக ஒரு வில்லை சயனைட்டை எடுத்து பெண்மணியின் கைகளில் திணித்தார்...

அது சரி அந்த photoவில் இருந்தது என்ன....அந்த photo prescriptionஆகா மாறிய அதிசயம் என்ன.....

அந்த photoவில் குறிப்பிட்ட (மருந்தாக) கடைக்காரரின் மனைவி.... கடைக்கு வந்த பெண்மணியின் கணவனுடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மிக நெருக்கமாக அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது....

கோபம் அவசியமாக தேவைதானா???

கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை மற்றும் பதிலி செய்கைகள் காரணமாக உண்டாகிறது.
கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் விர்ரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

நீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றொன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.

கோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ-

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.
2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்
3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்
5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.
7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.
8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்
9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.
11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.
13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.
14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.
15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.
16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

கோபத்தை எப்படி அடக்குவது எப்படி என்பதை விளக்க ஒரு சின்ன கதை....

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் ஏறியிருந்த பெட்டியில் இரண்டு ஆங்கிலேயரும் ஏறியிருந்தனர்.
இரண்டு பேரும் விவேகானந்தரை வெறுப்போடு பார்த்தார்கள். இந்தியர்கள் என்றாலே அவர்களுக்கு இளக்காரம், ஏளனம்தான். அதுவும் துறவி என்றால் கேட்கவா வேண்டும். விவேகானந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என நினைத்து அவரைக்குறித்து அவர் காதுபடவே இழிவாகப் பேசினர்.

விவேகானந்தர் ஒரு வார்த்தையும் பதில் பேசவில்லை. சண்டையிடவில்லை. மௌனமாக அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தார்.
அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றது. விவேகானந்தர் ஸ்டேஷன் மாஸ்டரை அருகில் அழைத்து “குடிப்பதற்கு நல்ல நீர் கிடைக்குமா? என்ற ஆங்கிலத்தில் அழகாகக் கேட்டார்.
அவர் ஆங்கிலம் பேசியதைக் கேட்ட, இரண்டு ஆங்கிலேயர்களும் திடுக்கிட்டனர்.
“உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?” ஒருவர் வேகமாக விவேகானந்தரிடம் கேட்டார்.
“நன்கு எழுதவும் பேசவும் தெரியம்” ஆங்கிலத்திலேயே பதில் கூறினார் விவேகானந்தர்.
“அப்படியானால் நாங்கள் கடந்த அரைமணி நேரமாக உங்களைத் திட்டிக் கொண்டிருந்தோமே.. நீங்கள் ஏன் எங்களோடு சண்டையிடவில்லை?” என்றனர்.
அதற்கு விவேகானந்தர் பொறுமையாக விடை கூறினார். “நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல்முறையல்ல”
புத்திசாலித்தனமான பேச்சு சுவையாக இருக்கும்.

பிஸ்தா ஜோனும் பஸ் டிரைவர் மணியமும்...

பாடம் புகட்ட ஒரு கற்பனை கதை...


எங்கட மணியம் அண்ணன் சண்டை சச்சரவு எண்டால் கொஞ்சம் பின்னுக்குத்தான் நிற்பார்... ஏனெண்டால் நீங்க நினைக்கிறது போல எங்கட மணியம் அண்ணன் ஒன்றும் 6 அடி உயரும் 80kg பாரமும் இல்ல... ஆனா பஸ் ஓட்ரதில கில்லாடி...இத கண்டுதான் இவரை அரசாங்க போகுவரத்து சபைக்கு வேலைக்கு எடுத்தினம். ...







முதல் நாள் அதுவுமா எங்கட மணியம் அண்ணன் அவருக்கு கொடுக்கப்பட்ட பஸ் வண்டியை தரிப்பிடத்திலிருந்து அவர் போக வேண்டிய இடம் நோக்கி ஓட்ட ஆரம்பித்தார். எல்லாம் நல்ல படியாதான் போய் கொண்டு இருந்திச்சு. எங்கட மணியம் அண்ணனும் மிக அவதானமாக எல்லா தரிப்பிடங்களிலும் நிறுத்தி ஆட்களை ஏற்றி , இறக்கி சென்று கொண்டிருந்தார். சரியாக ஐந்தாவது தரிப்பிடம்... மணியம் அண்ணன் பஸ்ஸை ஸ்லொவ் பண்ணி தரிப்பிடம் பக்கமாக நிறுத்தினார்...அங்கு ஒரு வாட்ட சாட்டமான... உயரமான... பருமனான... கிட்ட தட்ட ஒரு ரெஸ்ட்லிங் வீரன் போல ஒருத்தன் பந்தாவா பஸுக்குல்ல ஏறினான்... எங்கட மணியம் அண்ணனிண்ட சோடி ... அவர்தான் பஸ் கண்டக்டர் .... எத்தனை தரம் டிக்கெட்...டிக்கெட்..என்று காட்டு கத்தல் கத்தியும் அவன் டிக்கெட் எடுக்கவில்லை. கண்டக்டரும் அப்பிடியும் இப்பிடியும் பார்த்து கடைசி எங்கட மணியம் அண்ணனிண்ட பக்கத்தில வந்து நின்றும் கத்தி பார்த்தார்...அப்பத்தான் எங்கட டிரைவர் மணியம் அண்ணனும் திரும்பி அவன ஒரு லுக்கு விட்டார், இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த எங்கட ரெஸ்ட்லிங் வீரன்..."பிஸ்தா ஜான் இந்த பஸ்ஸிலயெல்லாம் டிக்கெட் எடுக்க மாட்டான்...." என்று கொஞ்சம் கடுமையான குரலில் சொன்னான். இதை பார்த்த எங்கட டிரைவர் மணியம் அண்ணனிற்கு மூக்கு மேல கோபம்... இருந்தாலும் கதைக்க வேற பயம்...மெதுவா கண்டக்டரிட்ட சொன்னார்..."போன போகுது சனியன் இண்டைக்கு மட்டும் போய் தொலையட்டும் என்று...". அவனும் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும்... எங்கட டிரைவர் மணியம் அண்ணனை பார்த்து ஒரு முறைப்பு ஓன்று முறைச்சுப்போட்டு இறங்கி தன்ற பாட்டுக்கு நடந்து போய்டான். விட்டு ஒழிஞ்சது சனியன் என்று எங்கட மணியம் அண்ணனும் விட்டுபோட்டு போய்ட்டார். அடுத்த நாளும் அதே கதை.. அதுக்கு அடுத்த நாளும் அதே கதை...இப்படியே தினம் தினம் நடந்தது... அவன் ஏறுவன் "பிஸ்தா ஜான் இந்த பஸ்ஸிலயெல்லாம் டிக்கெட் எடுக்க மாட்டான் .." என்று சொல்லுவான்.. இடம் வந்தது இறங்கி போவன். இப்படி தினமும் நடக்கிறதா ஜோசித்து எங்கட டிரைவர் மணியம் அண்ணனிற்கு இரவில தூக்கமும் இல்ல. ஏற்கனவே எங்கட மணியம் அண்ணனிற்கு லூஸ் மணியம் போல உடம்பு வேற அதுவே பிஸ்தா ஜோனுக்கு பிளஸ் பாயிண்ட் ஆகி போச்சு. பொறுத்து பொறுத்து பார்த்து எங்கட மணியம் அண்ணனிற்கு ஏலாது என்று போய்ட்டு... ஒரு நாள் பொங்கி எழுந்தது சிங்கம்...உடனேயே பக்கத்துக்கு தெருவில் இருக்கிற ஜிம்மில போய் சேர்ந்தார் எங்கட மணியம் அண்ணன்...தினமும் உடல் பயிற்ச்சி அரோக்கியமான உணவு பழக்க வழக்கம் என்று வெகு விரைவில்... அதுவும் ஒரு சில கிழமைகளிலேயே எங்கட மணியம் அண்ணனும் ஒரு ரெஸ்ட்லிங் வீரன் போல உடம்ப தேத்தி சும்மா இரும்பு சுமோ கணக்கில இருந்தார்...(கிட்ட தட்ட எங்கட actor சூர்யா போல சிக்ஸ் பக்ஸ் உடம்பு போல) ....அந்த குறிப்பிட்ட நாளும் வழமை போல எங்கட மணியம் அண்ணன் தன்ற சோடி கண்டக்டரோட depot இல இருந்து பஸ்ஸ எடுத்துக்கொண்டு வழமையான பாதையிலேயே வந்தார்..எல்லாம் வழமை போல நடந்தது...அனால் அந்த ஒரு விடயம் மட்டும் வழமைக்கு மாறாக நடக்க போவது எங்கட மணியம் அண்ணனிட்கும் அவர படைச்ச அந்த கடவுளுக்கும் மட்டும் தெரிந்த விடயம்........அந்த பிஸ்தா ஜோனும் வழமையாக ஏறும் இடத்தில வைத்து பஸ்ஸில் ஏறினான்.......வழமை போல மணியம் அண்ணனிண்ட சோடி கண்டக்டர் டிக்கெட் ...டிக்கெட்...என்று காட்டு கத்தல் கத்தி கொண்டிருந்தார்... பிஸ்தா ஜோனும் வழமை போல..." இந்த பிஸ்தா ஜோன் இந்த பஸ்ஸிலயெல்லம் டிக்கெட் எடுக்க மாட்டான்...." என்று சொல்லி முடிக்கிறதிக்குள்ள... கிறீச்... பஸ்ஸ sudden brake போட்டு நிற்பாட்டி ஆவேசமாக எழும்பி பயணிகள் பக்கம் திரும்பி...சிங்கம் ஓன்று உறுமுவது போல "...அது என்ன நீ மட்டும் டிக்கெட் எடுக்காம..?..." என்று பிஸ்தா ஜோனை முழுங்கி விடுவதை போல பார்த்தார் எங்கட மணியம் அண்ணன் ...அப்ப பிஸ்தா ஜோன் ரொம்ப கூல சொன்னான் "....எனென்றால் ... இந்த பிஸ்தா ஜோனிடம் இந்த் மாதத்திற்கான பஸ் பாஸ் இன்னும் இருக்கு..." அப்ப பார்க்கவேணுமே எங்கட மணியம் அண்ணனிட முகத்தை...1000watts பல்பு fuse போனது போல இருந்திச்சு ... "" மணியன்ன ரைட்... பஸ் பின் தொங்கலில் இருந்து கண்டக்டரின் குரல் ஈனமாக கேட்டது...""


Management Lesson: "Be sure there is a problem in the first place before working hard to solve one." Don't make simple things complicated.

கடவுள் இருக்கிறாரா இல்லையா?

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ....... அவரது ஆசிரியருடன்...

ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?

கலாம்: கண்டிப்பாக ஐயா

ஆசிரியர்: கடவுள் நல்லவரா?

கலாம்: சந்தேகமேயில்லை

ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் நேசிப்பவன். கடவுளிடம் ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா?

கலாம்: (மெளனம்)

ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லை இளைஞனே அப்படித்தானே? நாம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: சாத்தான் நல்லவனா?

கலாம்: இல்லை.

ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?

கலாம்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து

ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லை? கடவுள்தானே அனைத்தையும் படைத்தார்?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: ஆக, கெட்டவற்றை படைத்தது யார்?

கலாம்: (பதிலில்லை)

ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள், ஒழுக்கமின்மை, பழியுணர்ச்சி, மோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே?

கலாம்: ஆம் ஐயா.

ஆசிரியர்: அப்போ, யார் இதையெல்லாம் உருவாக்கியது?

கலாம்: (பதிலில்லை)

— (இங்கிருந்து கவனமாக படியுங்கள்) —

ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயா, இல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல் முகர்ந்தாவது இருக்கிறாயா? ஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: ஆக, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது. நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே?

கலாம்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது.

ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.

கலாம்: ஐயா, வெப்பம் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: இல்லை ஐயா, குளிர் என்பது இல்லை.

(மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போது இருவரையும்கூர்ந்து கவனிக்கின்றார்கள்)

கலாம்: ஐயா, நம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறது, மிகு வெப்பம், தாழ் வெப்பம், குறைந்த வெப்பம், வெள்ளை வெப்பம், மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று. ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது. நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை) போக முடியும் அதற்கு மேல் அளவு இல்லை. குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே.

கலாம்: சரி ஐயா, இருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்?

கலாம்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை. உங்களால் குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பளிச்சிடும் வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததை? அதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையா? இருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே?

ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே?

கலாம்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான்.

ஆசிரியர்: என்ன பிழை? விளக்கமாக சொல் பார்க்கலாம்?

கலாம்: ஐயா, உங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள். கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒரு ஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள். ஐயா, அறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை. மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை. இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது. இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயா, இறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா. உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா?

ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன்.

கலாம்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா?

(ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்)

கலாம்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை. அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள் அப்படித்தானே? நீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா?

(வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது)

கலாம்: இந்த வகுப்பில் இருக்கும் எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா?

(வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது)

கலாம்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோ, கேட்டோ, தொட்டோ, உணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களா? எவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஐயா, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது. தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயா, நாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது?

(வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது)

ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே…

கலாம்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது.

நன்றி : http://tamil.sripauljoseph.com

ஆகா... Dr. அப்துல் கலாம் என்ன சொல்ல வருகிறார் .... கடவுள் என்கிற ஒரு மகா சக்தி உள்ளது.. இது மறுக்கவோ , மறைக்கவோ முடியாத உண்மை...

இப்பொழுது விளங்குகிறது எப்படி கலாம் ஒரு ராக்கெட் விஞ்ஞானி ஆனறேன்று... சிறு வயதிலேயே ஆசிரியரை இப்படி கலச்சிருக்கார் ... எங்களுக்கு எதோ அவர் சொன்னது போல கனவு மட்டும் காண முடியும்... வேற என்ன... முடியும்....??????!!!!!??????

ஊருக்கடி உபதேசம் உனக்கில்லை ...

சினிமா உலகில் சரி , அரசியல் உலகில் சரி பலரும் பஞ்ச் டயலாக் சொல்வதில் பிரசித்தி பெற்றவர்கள் . எப்படி இருக்கு இந்த பன்ச்....

"" ஆறு முழுவதும் போகுதாம் தண்ணி... பாத்ரூமுல குளிக்குதாம் பன்னி ....""

எனக்கும் மிச்ச நாலா நல்ல ஒரு மெசேஜ் இந்த உலகத்திற்கு விசேடமாக இளவட்டங்களிட்கு சொல்ல வேணும் என்று ஆசை. அதை எப்படி சொல்லுறது என்றுதான் ம்ம் ம்ம்ம் ... ( என்ன இன்னும் அந்த மெசேஜ் வரவே இல்லையே என்று அங்கே யாரோ கேட்கிறது எனக்கும் கேட்கிறது...)

""நீ இறந்த பிறகும் பெண்களை சைட் அடிக்கனுமா? கண்களை தானம் செய்.... "" (பாருங்கப்பா இப்படி ஒரு நல்ல செய்தியை எப்டியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு) ... இதையும் கேட்கலென்ன இந்த உலகம் உருப்படுமா...

எவ்வ்ளோ கஷ்டம் வந்தாலும் லைஃப்ல ஒரு விஷயத்தை மட்டும் எப்பவுமே மறக்கக்கூடாது. ....சாரி அது என்னன்னு மறந்துபோச்சு. நாளைக்கு சொல்றேன் என்று இப்ப சொன்ன பிஞ்ச ஜோட்டாவால துரத்தி துரத்தி அடிப்பீங்கன்னு எனக்கு தெரியும்...சரி போனா போகுது சொல்லீருவம்...

""...வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்ல.... வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம். ......""

கடைசியாக ஒன்னு...

நண்பா, என்னிடம் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவெனில் என்னிடம் எந்த கெட்ட செய்தியும் இல்லை. கெட்ட செய்தி என்னவெனில் என்னிடம் எந்த நல்ல செய்தியும் இல்லை. இது உனக்கு நல்ல செய்தியா? கெட்ட செய்தியா ????????? நீங்களே decide பண்ணுங்க ஆனா இப்போதைக்கு ஆளை விடுங்க... i'm எஸ்கேப்....

இந்த உலகம் ரொம்ப மோசம்....
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .

. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. .
. . .
. .
. . .
. .
. . .
. . .
. . .
. . .
....
. .
. . .
. . .
. . . .
. . . .
. . . .
. . . . .
. . . .
. . . .
. . . .
. . . .
. . . .
. . . .
. . .
. . . .
. . . .
. . . .
. . . . .
. . . . .
. . . .
. . . . . .
. . . .
. . . .
. . .
. . . .
. . .
. .
. . . .
. . . .
. . . .
. . . . .
. . . . .
. . . .
. . . . .
. . . . .
. . . . .
. . . .
. . . .
. . .


சரி விடுங்க. நீங்க scroll down பண்ணினா மட்டும், திருந்திடவா போகுது?!?

i'm Extremely சாரி... அடுத்த வாட்டி எங்கயாவது பார்த்தா என்ன அட்டிக்கலாமேன்னு மட்டும் இப்பவே decide பண்ண வேணாம்...நான் பாவம்....

வாசிச்சன் சிரிச்சன் - 3

கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமும் ...
______________________________________________________________
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு
______________________________________________________________
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என்கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான்
புடிச்சுருக்கு ______________________________________________________________
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனாமட்டும் ஆகக்கூடாது.... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்... ______________________________________________________________
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்...எனக்குமாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என்இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!______________________________________________________________
மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அத நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாகொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு. ______________________________________________________________
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும். ______________________________________________________________
கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களேஇருக்க முடியும்.
1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது. ______________________________________________________________

புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்கஅனுப்புவாங்க...!??______________________________________________________________
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும்,எதையும் வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு...track ... சிங்கிளா, டபுளா...?______________________________________________________________

முட்டுக்கட்டையான நிலை...முடிவற்ற தொடர்....(Deadlock - Infinite Loop)

அலுவலகத்தில்...

பாஸ்: அடுத்த கிழமை அவசரமான மீட்டிங் ஒன்று இருக்கு, நாங்க ரெண்டு பேரும் வெளி நாடு செல்லவேண்டி வரும்...
Secretary : சரி பாஸ், உடனடியாக ஒழுங்குகள் செய்யிறன்...

Secretary வீட்டில்...கணவனிடம்...

செச்றேடரி / மனைவி : இஞ்ச பாருங்கோ ஆபீஸ் அலுவல நானும் பொஸ்ஸும் அடுத்த கிழமை வெளிநாடு போறம்...வீட்டு வேலை எல்லாம் நீங்கதான் செய்யவேணும்...

கணவன்: சந்தோசமாக....சரி ...சரி...போய்டு வாங்கோ...எல்லாம் எனக்கு தெரியும் ....

மனைவி தூங்கியபின்... secretaryயின் கணவன்..தொலைபேசியில் தனது இரகசிய காதலியிடம்... இங்க பாரும் அடுத்த கிழமை என்ர wife ஆபீஸ் அலுவலா வெளி நாடு போற..நாங்க ஒரு கிழமை நுவரெலிய போவம்...சரியா...உங்கட கிளாஸ் எல்லாத்தையும் கான்செல் பண்ணும் சரியா...மிச்சத்தை நாளைக்கு கதைப்பம்...ok

அடுத்த நாள்... இரகசிய காதலி வீட்டில் ...

இரகசிய காதலி / ஆசிரியை : எனக்கு அடுத்த கிழமை ஒரு அவசரமான வேலை ஓன்று இருக்கு அதால நான் ஊருக்கு போகவேணும்..உங்கட personal கிளாஸ் எல்லாம் cancelled ...

அன்று மாலை....(பிஸியான தாத்தாவிடம்.... பேரன்)

சிறுவன்: தாத்தா...எங்கட டீச்சர் அடுத்த கிழமை எங்கட personal கிளாஸ் எல்லாம் கான்செல் பண்ணிப்போட்டா... நான் அடுத்த கிழமை உங்களோடதான் இருக்கப்போறன்...

தாத்தா : மிச்ச சந்தோசம்... சரி அடுத்த கிழமை எங்க போவம்....(உரையாடல் தொடர்கிறது...)

மறு நாள் காலை... அலுவலகத்தில்...பாஸ் secretary யிடம்...

பாஸ் / சிறுவனின் தாத்தா : Secretary ... இங்க பாரும் அடுத்த கிழமை என்ர பேரன் வீட்டுக்கு வாறன் அதால அடுத்த கிழமை இருந்த அந்த வெளிநாட்டு பிரயாணத்தை கான்செல் பண்ணிபோட்டு ஹெட் ஆபீஸ்க்கு உடனேயே அறிவிச்சு விடும்...

Secretary : சரி பாஸ் உடனேயே செய்யிறன்...

மதிய வேளை... secretary தனது கணவனிடம் தொலைபேசியில்...

Secretary: இஞ்ச பாருங்கோ..அடுத்த கிழமை boss இட பேரன் leave இல வீட்டுக்கு வாறானாம் அதால அந்த வெளிநாட்டு பயணம் cancel ... நீங்க வீட்டு வேலையிலிருந்து தப்பிச்சீங்க போங்கோ..

கணவன்: அவசரமாக...அப்படியே...சரி சரி நான் கொஞ்சம் busyயா இருக்கிறன் பிறகு உனக்கு கால் பண்றான்...

கணவன் உடனடியாக தனது இரகசிய காதலியிடம்...

கணவன் : நாசமாக போக... அந்த கிழட்டு பொஸ்ஸிட பேரன் எதோ leaveல வீட்டுக்கு வாறானாம், அதால என்ர wifeயிட வெளிநாட்டு பயணமும் cancelled ... அடுத்த கிழமை நாங்க பிளான் போட்டபடி நுவரெலிய போக முடியாது..பிறகு ஒரு நாள் பார்ப்பம்...sorry செல்லம்...

இரகசிய காதலி / ஆசிரியை : Thank God இப்பவே சொன்னீங்க...அநியாயம் எண்ட பர்சனல் கிளாஸ் எல்லாம் கான்செல் பண்ணீட்டன்... சரி ... சரி... என்ர studentsக்கு இப்பவே கால் பண்ணவேணும்...அப்ப நான் பிறகு உங்களுக்கு கால் பண்றான் சரியே...

ஆசிரியை / இரகசிய காதலி...தொலைபேசியில் தனது studentsக்கு....

ஆசிரியை : அடுத்த கிழமை இருந்த வேலை கான்செல் ஆகி போச்சு... உங்கட கிளாஸ் எல்லாம் வழமைபோல நடக்கும்... எல்லாரும் ஒழுங்க timeக்கு கிளாசிற்கு வரவேணும் சரியோ...

சிறுவன் / பேரன் தனது தாத்தாவிடம் தொலைபேசியில்...

சிறுவன் : தாத்தா...எங்கட டீச்சர் இப்பதான் போன் பண்ணி சொன்னவ அடுத்த கிழமை எங்கட கிளாஸ் எல்லாம் வழமைபோல நடக்குமாம்... நான் உங்களிட்ட சொன்னபோல அடுத்த கிழமை வரமுடியாது... I Miss You தாத்தா...

தாத்தா / பாஸ் தனது Secretaryயிடம்...

பாஸ்: செச்றேடரி... இங்க பாரும் அடுத்த கிழமை என்ர பேரனுக்கு கிளாஸ் எல்லாம் ஒழுங்க நடக்குமாம்... அதால, அவனால சொன்னதுபோல வரமுடியாதாம்...அப்ப அந்த வெளிநாட்டு பயணத்தை கான்செல் பண்ணவேண்டாம்...ticketsஐ confirm பண்ணும்... மறக்க வேண்டாம் எப்படியும் இன்னைக்கு வேலைய முடிக்க வேணும்.....

இது எங்க போய் முடியும்...முடிந்தால்...விளக்கம் சொல்லுங்களேன் பார்ப்பம்......

உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 .......

அலட்சியம் பாதுகாப்பல்ல - குறிப்பாக நீங்கள் பிரயாணம் செல்லும் நாடுகளின் சட்டாங்களை அலட்சியம் செய்யும் பட்சத்தில் பாரிய நெருக்கடியான சூழ்நிலைக்கு வாய்ப்புகள் அதிகம். உலகின் கடினமான 10 சட்டங்கள் கீழே ....


10. புறாக்களிட்கு உணவிடவேண்டாம் - இத்தாலி


புறாக்களிட்கு உலகின் ௧0 வினோத குற்றம் ... இது கொஞ்சம் ஓவர். Venice நகரில், மனிதாபிமானம் பார்க்காமல் புறாக்களை விட்டு கொஞ்சம் விலகியிருங்கள் . இதை விட , நீர் ஓடைகளில் குதிப்பதும், ஷர்ட் அணியாமல் வீதிகளில் வருவதும், ரோடு ஓரங்களில் அமர்ந்து உணவு உண்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. எச்சரிக்கையில் தொடங்கி, தண்டமாக 50 - 600 $ வரை விதிக்கப்படலாம்.

9. பொது இடங்களில் உணவு , பாணம் அருந்துதல் ( அரபு இராச்சியம்) தடை


அரபு நாடுகளிற்கு ரமழான் காலங்களில் செல்வதை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது. அக் காலங்களில் பகல் வேளையில் பொது இடங்களில் உணவு உண்பதும், பாணங்கள் அருந்துவதும் முற்றாக தடை செய்யப்படுள்ளது. சில சுற்றுலா பிரயாணிகளிடம் 275.00 $ வரை தண்டம் அறவிடப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதும் இக் காலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது, மீறினால் சில காலம் ஜெயில் வாசம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.


8. சில்லறைகளாக கொடுப்பனவு செய்வது தடை - கனடா



தெரு மூலைக் கடைக்கு ஓடிச்சென்று மிச்சமுள்ள சில்லறைகளை கொடுத்து எதாவது வாங்கலாம் என்று கனடாவில் கனவிலேனும் நினைக்கவேண்டாம். 10 $க்கு அதிகமாக ஏதும் பொருட்கள் வாங்கினால் முழுவதும் சில்லரையாக செலுத்துவது முடியாத காரியம். (1985 currency act). உங்களிற்கு பொருள் தருவதும், விடுவதும் கடைக்காரரின் கையில் உள்ளது.


7. கார்களை சுத்தமாக வையுங்கள் - moscow



அழகிய மொஸ்கோ நகரில் கழுவப்படாத காரில் பிரயாணம் செய்வது தடை செய்யப்படுள்ளது. தூசி படிந்த கண்ணாடி, இலக்க தகட்டை மறைக்கும் தூசி அல்லது அளுக்கு என்பன தடை. மீறினால் போலீசார் விதிக்கும் தண்டம் செலுத்தப்படவேண்டும். (போலீஸ்காரரிட்கு கையுட்டு கொடுத்து சமாளிப்பது உங்கள் தனிப்பட்ட திறமை)

6. ஒளிர விடப்படவேண்டிய முகப்பு விளக்கு - டென்மார்க்




டென்மார்க் நகரில் பகல் வேளைகளில் கூட வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளிர வேண்டும். மீறினால் தண்டமாக 100.00$ வரை செலுத்த நேரிடும்.

5. ஆடோபகான் வீதிகள் தரிக்க தடை - germany


வேக தடைகளற்ற ஆடோபகன் வீதியில் எவ்வித காரணம் காட்டியும் ஓடும் வாகனங்களை நிறுத்த முடியாது, இது சட்டப்படி குற்றம். அப்படியே தரித்தாலும் வீதியில் நடமாடுவது தடை. காரணம் உங்கள் உயிரை மட்டுமல்ல , ஏனைய வேகமா பிரயாணிக்கும் அனைவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் என்பதால்.

4. ஷர்ட் அணிவது கட்டாயம் - தாய்லாந்து



வீதிகளில் ஷர்ட் அணியாமல் வாகனங்கள் செலுத்துவது தாய்லாந்தில் தடை செய்யப்படுள்ளது. தலை கவசம் இல்லாவிட்டாலும் தப்பிக்கலாம், ஷர்ட் அணியவிட்டால் அம்பேல். தண்டமாக , எச்சரிக்கை அல்லது 10.௦௦$ வரை அறவிடப்படும் . போலீஸ் தொல்லை அதிகம்

3. வழி அனுப்புகையில் முத்தமிட தடை - பிரான்ஸ், இங்கிலாந்து


பிரான்ஸ் , இங்கிலாந்தில் 1910 , ஏப்ரல் , 5 காதல் இறந்த நாள். காதலர்கள் வழியனுப்புகையில் முத்தமிட்டபடி இருப்பதனால், ரயில்கள் தாமதமாக கிளம்பவேண்டிய சூழ்நிலை அமைந்ததால் இச் சட்டம் அமுல் படுத்தபட்டது. கொஞ்சம் பழைய சட்டமாக இருப்பதால் பிரான்சில் இச் சட்டம் கடுமையாக அமுலில் இல்லை. இருப்பினும் இங்கிலாந்தில் காதலர்கள் ரயில் நிலையத்திலுள்ள பிரத்தியோகமான இடங்களிற்கு செல்லுமாறு பணிக்கப்படுகின்றனர்.

2. உடலை மூடுதல் அவசியம் - கிரேனடா


கொஞ்சம் அவசியமான சட்டம்தான்...கிரேனடா கடல் கரைக்கு வரும் உல்லாச பிரயாணிகள் அவர்கள் அணிந்திருக்கும் நீச்சல் உடைகளுடன் கடை வீதிகளில் உலவுவதால் மற்றவர்கள் அசொவ்கரியங்களிட்குள்ளகின்றனர். இதனால் கொஞ்சம் கவலை அடைந்த அரசு போட்டிருக்கும் சட்டம் தான் இது. கடல் கரையை தாண்டிய பிரதேசத்தினுள் நீச்சல் உடையுடன் அலைந்தால் தண்டம் 270.௦௦$ செலுத்த வேண்டி நேரும்
1. ச்சுவிங்கம் (Chewing Gum) மெல்ல தடை - சிங்கப்பூர்

ச்சுவிங்கம் மெல்லும் பழக்கமுடையவர்கள் சிங்கப்பூர் காலடி வைக்க முன்னர் மறப்பது நல்லது. நகரை சுத்தமாக பேணும் நோக்கில் ச்சுவிங்கம் மெல்லுதல், பறவைகளிட்கு உணவிடுதல், பொது கழிவறைகளை சுத்தமாக பேனாதிருத்தல் போன்ற நடவடிக்கைகளிற்கு தண்டம் விதிக்கின்றது. சட்டப்படி மேல்லக்கூடியது "NICRORETTE" மட்டுமே, அதுவும் மருத்துவர் சான்றிதழுடன்.
பின்னர் வருந்துவதை விட உசாராக இருப்பது நல்லது, இனிமேலாவது நீங்கள் போக உள்ள நாட்டின் சட்டங்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ளுங்கள்....

ஊர் புதினம் - மஹா சக்தியின் செயல்...

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டம் என்கிறது எமது முதுமொழிகள். அதுக்கினங்க குடி உள்ளதோ இல்லையோ கட்டாயம் ஊரில் ஒரு கோவிலாவது இருக்கவேணும் என்கிறது எமது நம்பிக்கைகள், அது ஒரு பாக்கம் இருக்க விடயத்திற்கு வருவோம்.



மட்டக்களப்பும் , கிழக்கு மாகாணமும் அம்மன் வழிபாட்டில் சிறப்பானவை . கல்முனை - பாண்டிருப்பு திரோவ்பத்தி அம்மன் கோவில் , புன்னைச்சோலை, ஆரயம்பதி கண்ணகி அம்மன் etc... இந்த வரிசையில் வந்தாறுமூலை கண்ணகி அம்மன் கோவிலும் பிரசித்தி பெற்றது.


இந்த கோவிலின் flash back காண பல நூறு ஆண்டுகள் முன் செல்ல வேண்டும் .... மதுரையை எரித்த ஆவேசத்துடன் கண்ணகி வந்து settle ஆனா இடம்தான் வந்தாறுமூலை அதாவது வந்து ஆறிய மூலை = வந்தாறுமூலை . இந்த கிராமம் இருப்பது மட்டக்களப்பின் வடக்கே சுமார் 9 - 10 km தூரத்தில் ( மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் ). அமைதி விரும்பிய கண்ணகி அம்மனின் விருப்பின்படி இந்த ஆலயத்தின் கதவுகள் திறந்து பூஜை இடம்பெறுவது வருடத்தில் ஒரு முறை மாத்திரமே .



அது சரி, இதையெல்லாம் இப்ப ஏன் சொல்ல வேண்டும் ? தொடர்ந்து வாசியுங்கள்...




கிழக்கில் வரட்சி தாண்டவமாடுகின்றது, வயல்கள் வறண்டு காணப்படுகின்றது , எங்கு பார்த்தாலும் நீர் பற்றாக்குறை . இது எப்படியெல்லாம் இருக்க, சில அதிசயங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றது . சில தினங்களிற்கு முன் தினசரியில் பார்த்த ஞாபகம் உயர்ந்த மேட்டு நிலத்தில் நீர் அருவியா ஓடுகிறதாம் (எங்கோ தம்பிலுவில் பக்கம் ). அதே போல இந்த ஆலயத்திலும் அதிசயங்கள் நடந்தவண்ணமே உள்ளது.




கோவிலின் முகப்பில் உள்ள கண்ணகி அம்மன் சிலையின் கண்களால் இரத்த கண்ணீர் ஓடியுள்ளதாம். இன்றும் இடது கண் வீங்கிய நிலையில் காணப்படுகின்றதாம்.


ஆலயத்தின் அருகில் உள்ள புளிய மரத்தில் இருந்து நீர் கசிந்து காணப்பட்டதாம்.


வருடத்தில் ஒரு முறை மட்டுமே திறக்கும் கோவில் உள்ளே, தினமும் சிலம்பு சத்தமும், உரல் இடிக்கும் சத்தமும் அடிக்கடி கேட்ட வண்ணமே உள்ளது . இந்த அதிசயத்தை காண பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் சாரி சாரியாக வந்த படி உள்ளனர்.



இது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா, ஊர் மக்களிடையே இன்னும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.


எல்லாம் மஹா சக்தியின் செயல்....





P.S: இந்த அதிசயத்தை பார்க்க / கேட்க கிடைக்காதவர்களிட்கு ஒரு கொசுறு நியூஸ், பல ஊர் இளவட்டங்களின் மொபைல் போனில் இந்த அதிசயத்தை பார்க்க / கேட்க முடியும்... " மஹா சக்தியின் மகிமையை கையடககத்தினுள் கொண்டு வந்த டெக்னாலஜி".... உலகம் எங்கேயோ போயிடுச்சு....

இன்னைக்கு மழை வரும்..

முதல் நபர் : இன்னிக்கி 8 மணிக்கு மேல கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.

இரண்டாம் நபர்: நீங்க கேட்டீங்களா?

முதல் நபர்: இல்லை ...இல்லை... அவங்களே சொன்னங்க

அடங்கு .. அடங்கு.. யாரப்பா அங்க கம்ப எடுக்கிறது... i'm எஸ்கேப்...

ஈமெயில் அதிஸ்டம்

மிச்ச நாளா ஒரு doubt... எனக்கு ஒரு நாளுக்கு எப்படியும் மூன்று அல்லது நாலு ஈமெயில் வரும் இதை இத்தனை பேருக்கு forward பண்ணினா நல்ல நியூஸ் வரும் இல்ல பணம் வருமெண்டு... நானும் நினைவு தெரிஞ்ச காலமா forward பண்ணுகிறான் எனக்கெண்டா ஒன்றும் வந்த மாரி தெரியல்ல. எங்கட IT Dept இல இருந்துதான் ரெண்டு மூணு warnings வந்திச்சு. என்ன செய்யிறது எனக்கும் தெரியும் இது ஒரு தலையிடி என்று, பாழப்போன மனசு இப்படியான குருட்டு சாத்திரங்களையும் நம்பிறதால எனக்கும் தவிர்க்க பயம், வேற வழி இல்லாம நானும் எனக்கு தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க எல்லாருக்கும் பிடிச்சு CC பண்ணி அனுப்பிப்போட்டு அடுத்த மெயிலுக்கும் அதிஷ்டதுக்கும் பார்த்து கொண்டிருக்கிறது வழமையபோச்சு. அப்பிடியான mails அனுப்பேக்குள்ள எனக்கு அனுப்பினவருக்கும் CC பண்றது வழமை, அப்பதானே இது தொடராது என்று நான் நினைக்கிறனான் அனால் நடக்கிறதோ வேற மாரி. அடுத்த சில நாட்களில இல்ல சில சமயம் அதே நாளில திரும்பவும் எனக்கு வரும். நானும் விடாம திரும்பவும் அனுப்புவன், இது ஏதோ சண்டை போல தொடர்ந்து நட்க்கும். அது சரி போங்கப்பா இதெல்லாம் அரசியல்ல சகாஜம்ன்னு நானும் போய்டே... இருப்பன் . ஒரு நாள் எனக்கு இப்படியான மெயில் அனுப்பினவரிட்ட நேர reply போட்டு கேட்டன் எப்ப இப்படியான mails அனுப்பிறதா எப்ப நிப்பாட்ட போறீங்கன்னு, அதுக்கு வந்திச்சே ஒரு reply...கிழே பார்க்கவும்...

Quote

நானும் வாற mails அ avoid பண்ணி பாத்தன்.. அதனால தான் luck இல்லையோ என்டு தோனிச்சு சொ தொடங்கிடம்ல... அவங்கள நிப்பாட்ட சொல்லுங்கோ நான் நிப்பாடுறன்...

Unquote

அது சரி, உன் குற்றமா... என் குற்றமா ... யாருக்கிட்ட போய் நான் சொல்ல.

இதையெல்லாம் விட வரும்பாருங்க சில mails உதவி கேட்டு, forward பண்ணினா சர்வீஸ் provider 10 cents.. 20 cents தருவாங்கன்னு , என்ன கொடுமை சரவணன் இது.... அதெல்லாம் உண்மையோ பொய்யோ தெரியாது, forward பண்ணலேன்னா சாமி கண்ண குத்தும் ....

எவ்வளவுதான் technology வளர்ந்தாலும் மனித மனம் மாறுமா......?

வாசிச்சன்...சிரிச்சன்...2

வாசிச்சன் , சிரிச்சன் தொடர்ச்சி ......










































சின்ன அட்வைஸ் "மனம் விட்டு சிரித்தால்... நோய் விட்டு விலகும் "

வர்ட்டா ...பிரதர்

வாசிச்சன்...சிரிச்சன்...

படித்ததில் , பார்த்ததில் .... பிடித்தது



நல்ல ஜோக்ஸ், யாம் பெற்ற சிரிப்பு பெறுக என் சுற்றமும் ...

புத்தக கண் காட்சி - 2009

எப்பிடி எல்லாம் சுகமா இருக்கிறியளோ , என்ன எனக்குதான் கொஞ்ச நாளா நாரிகுள்ள கடுப்பு. சும்மா சொல்லபடாது ஓட்டமேண்ட அப்பிடி ஒரு ஓட்டம் . நாயிக்கு வேலையும் இல்ல இருக்க நேரமும் இல்ல கணக்கா அங்கயும் இங்கயும் ஓடினதில டயர் தெஞ்சதும் நாரி பிடிப்பும் தான் மிச்சம் . அது சரி போன கிழமை நடந்த புத்தக கண்காட்சிக்கு போனீங்களே ? எனக்கெண்டா உண்மைய நேரம் இல்ல, இருந்தும் சும்மா அங்க என்ன நடக்கெண்டு பார்ப்பம் எண்டு ஒரு எட்டு போய் பார்த்தன் . சும்மா சொல்ல கூடாது, எங்கட பிள்ளையளுக்கு கண்காட்சி, கார்னிவல் எண்டா நல்ல சுதிதான். புத்தகம் வாங்க வந்தாக்கள விட வாங்கிறத பார்க்க வந்தாக்கள்தான் கூட. பெற்றார் பிள்ளையளோட வந்தாலும் வாங்கிறது என்னவோ அப்பாவும் அம்மாவும் தான். அதுவும் சரிதான் அவங்களுக்குத்தானே தெரியும் பிள்ளைக்கு என்ன வேணுமெண்டு. இருந்தாலும் பிள்ளை ஆசைபட்டு கேட்டு வாங்கி குடுத்த பிள்ளைக்கும் சந்தோசம் பெற்றார்க்கும் சந்தோசம்தானே. அது சரி விசயத்துக்கு வருவம், எனக்கென்னவோ சகோதர மொழி புத்தகங்கள் தான் கூட கண்ணில பட்டது . அவயல்ட கடைகளும் கூடத்தானே . புத்தக கடைகளைவிட சாப்பாட்டு கடைகள்தான் கூடபோல இருக்கு, அதான் எங்கட சனம் புத்தக கண்காட்சி எண்டு ஜோசிக்காம கார்னிவல் எண்டு நினைச்சினம் போலயிருக்கு . நூடில்ஸ் கடைகளும், சோடா கடைகளும், டீ கடைகளும் தான் கூட. திரும்பின பக்கமெல்லாம் நூடில்ஸ் சாபிட்ட வெற்று பாத்திரங்கள். எப்ப தான் எங்கட சனம் குப்பை தொட்டியின் பயன் அறியுமோ. வெளிய வரைக்குள்ள நிறையபேற்ற கையில புத்தக கட்டுகளைவிட நூடில்ஸ் பெட்டிகள்தான் கூட இருந்திச்சு. எது எப்படியோ, எல்லாம் சுபமா பிரச்சினை ஒண்டும் இல்லாம நல்லூர் கந்தண்ட அருளால முடிஞ்சுபோச்சு , என்ன எனக்கு ஒரே கவலை நானும் ஓன்று ரெண்டு புத்தகங்கள் வாங்குவம் எண்டு இருந்த தமிழ் கடைகள்ள தேடி தேடிப் பார்த்தன் ஒன்றும் கிடைக்கல ஸ்டாக் இல்லையாம்.... அடுத்த வருஷம் பார்ப்பம், கெதியா போக வேணும் ......

வாழ்க்கையில முன்னேற சில படிகள் - ரிச்சர்ட் மோரன்

பயனுள்ள தகவல், வாழ்வு முன்னடைவதும் பின்னடைவும் எங்கள் கையில்தான்

WORKING as a business consultant all over the world, I have discovered some basic career-related rules that everyone should know but many don't.

ü Business is made up of ambiguous victories and nebulous defeats. Claim them all as victories. எப்படிங்க முடியும்

ü Keep track of what you do; someone is sure to ask. உண்மைதான் எல்லாரும் கிளருவாங்க

ü Be comfortable around senior managers, or learn to fake it. தமிழில சொன்ன படம் காட்டனும்

ü Never bring your boss a problem without some solution. அப்புறம் பாஸ் எதுக்கு

ü You are getting paid to think, not to whine. எனக்கும் மூளை இருக்கு

ü Long hours don't mean anything; results count, not effort. நிஜம் தான் சும்மா சம்பளம் தரமாடங்க

ü Write down ideas; they get lost, like good pens. அதுக்கு பேனா தொலயமா இருக்கணும்

ü Always arrive at work 30 minutes before your boss. எங்கட பாஸ் என்னைவிட அரமணி முன்னுக்கு வந்திருவார்

ü Help other people network for jobs. You never know when your turn will come. யாரும் இருந்த எனக்கும் நல்ல ஒரு வேல தாங்கப்பா

ü Don't take days off sick unless you are. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

ü Assume no one can / will keep a secret. பாஸ் தொடர்பான ஒப தூப பேசப்படாது

ü Know when you do your best morning, night, under pressure, relaxed; schedule and prioritize your work accordingly. நாங்க நல்ல வயிறு முட்ட சாப்பிடு தூங்க தான் லாயக்கு

ü Treat everyone who works in the organization with respect and dignity, whether it be the cleaner or the managing director. Don't ever be patronizing. அப்ப யாருக்கு பிலிம் காடுறது

ü Never appear stressed in front of a client, a customer or your boss. Take a deep breath and ask yourself: In the course of human events, how important is this? அப்பிடின்ன ஒவொரு நிமிசமும் மூச்ச நல்ல இழுங்க

ü If you get the entrepreneurial urge, visit someone who has his own business. It may cure you. பில் கேட்ஸ் எனக்கு நல்ல தெரியும் பட் அவருக்கு என்ன தெரியாது

ü Acknowledging someone else's contribution will repay you doubly. அட ச்சே முதலே தெரியாம போச்சு

ü Career planning is an oxymoron. The most exciting opportunities tend to be unplanned. கால் போன போக்கில போறவங்களுக்கு சாரி

ü Always choose to do what you'll remember ten years from now. கொலை... பத்து வருஷம் உள்ள...

ü The size of your office is not as important as the size of your pay cheque. அதான் சின்ன கம்பெனில வேல பார்கிறவங்க ஜாலியா இருகாங்க

ü Understand what finished work looks like and deliver your work only when it is finished. ஒரு போதும் நடக்காது போல இருக்கு

ü The person who spends all of his or her time is not hard-working; he or she is boring. வேல செயேறதே போரின்

ü Know how to write business letters including thank-you notes as well as proposals. விட்ட கடிதமென்ன கட்டுரையே எழுதுவம்

ü Never confuse a memo with reality. Most memos from the top are political fantasy. ஒரு நாளைக்கு எத்தின மெமோ எல்லாம் அரசியல்

ü Eliminate guilt. Don't fiddle expenses, taxes or benefits, and don't cheat colleagues. எல்லாரும் நோட் பண்ணுங்கப்பா

ü Reorganizations mean that someone will lose his or her job. Get on the committee that will make the recommendations. ஷோர்ட சொன்ன சோப்பு போடுகிறது இல்ல வால் பிடிக்கிறது

ü Job security does not exist. செக்யூரிட்டி வேல செயிரவருக்கும் தான்

ü Always have an answer to the question, What would I do if I lost my job tomorrow அடுத்த நாள் நடுத்தெரு

ü Go to the company Christmas party. Don't get drunk at the company Christmas party. குடிக்க தானே நம்ம சனம் பார்ட்டிக்கு போறது

ü Avoid working at weekends. Work longer during the week if you have to. ஒ ஒ நல்ல ரெஸ்ட் எடுக்கணும்

ü The most successful people in business are interesting. அவங்களுக்கு உள்ள கஷ்டம் அவங்களுக்குதான் தெரியும்

ü Sometimes you'll be on a winning streak and everything will click; take maximum advantage. When the opposite is true, hold steady and wait it out. எங்க ச்டேஅடி எல்லாம் தடுமாறுது...

ü Never in your life say, It's not my job இருக்கிற வேலையே செய்ய கானம் அதுக்குள்ளே அடுத்ததா

ü Be loyal to your career, your interests and yourself. எப்படீங்க முடியும்...அது ஏலாத காரியம்

ü Understand the skills and abilities that set you apart. Use them whenever you have an opportunity. எங்கட ஆற்றல், தெறமை வேற...ம்ம்

ü People remember the end of the project. As they say in boxing, Always finish stronger than you start. நல்ல முடிஞ்சா நான் இல்லண்ட அவங்க

அனைவருக்கும் பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்பிறன் - அன்புடன் யசோ

P Préservons notre planète et n'utilisons le papier qu'à bon escient.

Save a tree...please don't print this e-mail unless you really need to




This e-mail is confidential. It may also be legally privileged. If you are not the intended recipient or have received it in error, please delete it and all copies from your system and notify the sender immediately by return e-mail. Any unauthorized reading, reproducing, printing or further dissemination of this e-mail or its contents is strictly prohibited and may be unlawful. Internet communications cannot be guaranteed to be timely, secure, error or virus-free. The sender does not accept liability for any errors or omissions.

தீவிரமாக யோசிப்போர் சங்கம்

தாங்க முடியல

  1. செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.( தீவிரமாக யோசிப்போர் சங்கம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)
  2. இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?( ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்)
  3. என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.
  4. பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
  5. என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!
  6. பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?யோசிக்கனும்.....!!
  7. இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.ஆனாபிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
  8. ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
  9. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!(என்ன கொடுமை சார் இது!?!)
  10. பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)
  11. சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)
  12. பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.
  13. கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?
  14. பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.இதுதான் உலகம்
  15. T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?
  16. என்னதான் பெரியவீரனா இருந்தாலும்,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.
  17. உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.
  18. ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்'குஆனா...தூங்குற புலி வாலை மிதிச்சாஉனக்கு சங்கு.
  19. நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
  20. வண்டி இல்லாமல் டயர் ஓடும்.ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
  21. சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

இன்றைய நவீன தமிழ் மங்கையரைப் பற்றி

1. உங்களையெல்லாம் பெத்தாங்களா , இல்லை ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா 2. கற்காலத்துல இருக்கற மாதிரி காதுல இவ்வளவு பெரிய வளையம் மாட்டிட்டு திரியரீங்களே , இதென்ன விட்ட குறை தொட்ட குறை மாதிரி போன ஜென்மத்து தொடர்பா ?
3. முன் மண்டையின் காலியான இடத்தை மறைக்க நாங்க படாதபாடு படும்போது நீங்க அழகான நீளமான முடியை ஒரு சாணுக்கு வெட்டிக்கறீஙகளே , அது ஏன் ?
4. தேவையே இல்லைன்னாலும் நல்லா இருக்குல்லன்னு ஒன்னுக்கும் உதவாத ஒரு டெடி பியரை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் பண்ணும் கெட்ட அலப்பறையில் சாப்பிடக் கூப்பிட்டு வந்த மாடு அதை வாங்கிக் குடுக்குதே , அது ஏன்?
5. எப்போ கேட்டாலும் டயட்ன்னு சாலட் மட்டும் சாப்பிட்டு எப்படி உயிரோட இருக்கீங்க ? தனியா போயி அன்லிமிடெட் மீல்ஸ் ஒரு கட்டு கட்டிட்டு வந்துடுவீங்களா?
6. எப்பவும் கையில ஒரு ஆங்கில புத்தகத்தை வைச்சிட்டு திரியரீங்களே , உண்மையா அதை படிக்கறீங்களா , இல்லை யாருகிட்டையாவது கதை கேட்டுக்குவீங்களா ?
7. ஸ்கூலுக்கு போகும் சமயத்தில் எடுத்தது மாதிரியான பத்தாத ட்ரெஸ் அதிகமா போடறீங்களே , நீங்க ரொம்ப கஞ்சமா ???
8. நோ மாம், ஐ ஆம் ஸ்டண்டிங் இன் தி புளிய மரத்து நிழல்ன்னு சரளமா தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கொத்து பரோட்டா போடறீங்களே , தனியா கோர்ஸ் போவீங்களா ???
9. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஓடிப் போய் மேக்கப் பண்ணிட்டு வர்றீங்களே , நீங்க உங்க பாட்டிக்கு தங்கச்சி மாதிரி இருக்கிற விஷயம் வெளிய தெரிஞ்சுரும் அப்படிங்கற பயத்திலயா ?
10. எப்பவும் கால்ல ஸ்டூல் போட்டுட்டு நடக்கறிங்களே , இந்த மாதிரி எவனாவது ஏடாகூடமா கேட்டா அடிக்கறதுக்கா ?பெண்ணியவாதிகள் யாரவது வந்து என்னை கும்முவதற்க்குள் ஐ ஆம் தி எஸ்கேப் !!!

இன்றைய நவீன தமிழ் மங்கையரைப் பற்றிய இந்த கேள்விகளுக்கு யாருக்காவது விடை தெரிஞ்சா சொல்லுங்களேன் . இதை யார்கிட்டையாவது நேரே கேட்டா எனக்கு புத்தூர் மற்றும் தெலுங்கு பாளையம் அட்ரஸ் விசாரிக்கும் நிலை வந்துடும்ன்னு பயந்துதான் இங்க போட்டுருக்கேன் .