கண்ணா பின்னா தத்துவங்கள்..படித்ததில் பிடித்தது...

***************************************************************
நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க, கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க, பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"

***************************************************************

யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு"
எலிபேண்டில் (ELEPHANT) இருந்து பேண்டை (PHANT) எடுத்து விட்டால் அது 'எலி" (ELE) ஆகி போய்விடும். அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

***************************************************************

Tea மாஸ்டர் Tea போடுரார்
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுரார்
Maths மாஸ்டர் கணக்கு போடுரார்
ஹெட் மாஸ்டரால மண்டைய போட முடியுமா?

***************************************************************

புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா

***************************************************************

ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால் அவரால் COMA ஸ்டேஜில் பேசமுடியாது.

***************************************************************

1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....

ஆனா.....

ஆனா.......

ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....

***************************************************************

காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull

***************************************************************

நைட்ல கொசு கடிச்சா குட் நைட் வைக்கலாம்...
ஆனா, பகல்ல கடிச்சா குட் மார்னிங் வைக்கமுடியுமா..???

***************************************************************

அண்ணனோட ஃப்ரண்ட அண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்ட
அக்கான்னு கூப்பிடலாம்..
ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்ட
பொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!

***************************************************************

நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

முயற்சி பண்ணா நடக்கும்ங்கறது உண்மைதான். அதுக்காக என்ன முயற்சி பண்ணாலும் பாம்ப நடக்க வைக்க முடியுமா??

***************************************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன