விசுவாசம் ....



ஒரு எஜமானருக்கு நல்ல சமையல்காரன் ஒருவன் இருந்தான்.

எஜமானருக்கு கத்தரிக்காய் என்றால் மிகவும் விருப்பம் என்பதைத் தெரிந்து கொண்ட சமையல்காரன், தினமும் கத்தரிக்காயைச் சமைத்துப் போட்டே தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்.

அவரும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது மட்டுமல்லாமல் ஒரு நாள் கத்தரிக்காயைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்.

புகழ்ச்சியைக் கேட்ட சமையற்காரன்,,

ஆமாம் அய்யா, நீங்கள் சொல்வது சரிதான். காய்களிலே உசத்தியானது கத்தரிக்காய் தான் அதனால் தான், இயற்கையே அதற்கு கிரீடம் சூட்டியிருக்கிறது என்று தன் பங்கிற்கு புகழ்ந்து தள்ளினான்.

சிலநாட்களில் எஜமானருக்கு கத்தரிக்காய் சலித்துப் போய் விட்டது. இது தெரியாத சமையற்காரன் வழமை போல அன்றும் சமைத்து விட்டான்.



தட்டில் கத்தரிக்காயைப் பார்த்தவர் திட்டத் தொடங்கி விட்டார்.

திட்டியதைப் பார்த்ததும் தானும் சேர்ந்து ஆமாம் அய்யா...மோசமான காய் தான் அதனால் தானே, இயற்கையே அதன் தலையில் ஆணி அடித்து வைத்திருக்கிறது என்று ஒரே போடாகப் போட்டான்.

இப்போது எஜமானருக்கு ஒரே குழப்பம்,,,என்னடா அன்றைக்கு கிரீடம் என்றாய்...இன்றைக்கு ஆணி என்கிறாய்,,,இதில் எது உண்மை என்று கேட்டார்.

சமையற்காரன் சொன்னான்...என்னோட சம்பளத்தை கத்தரிக்காய் தரவில்லை. நீங்கள் தான் தருகின்றீர்கள் உங்களுக்குத் தான் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூலாகச் சொன்னான்.

கதையின் நீதி: விசுவாசத்தைக் காட்டுவதற்கு எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசலாம்.( ஏதாவது ஏடாகூடமாக நடந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை நண்பர்களே!)

முயற்சி பண்ணா நடக்கும்ங்கறது உண்மைதான். அதுக்காக என்ன முயற்சி பண்ணாலும் பாம்ப நடக்க வைக்க முடியுமா??

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன