தலைமுடியும் புற்றுநோயும்...
தலைமுடி உதிர்வோருக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியம் குறைவாகக் காணப்படுவதாக அண்மைய மருத்துவ ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
30 வயதளவில் முடி உதிரும் ஆண்களுக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியம் மிகவும் குறைவாகக் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2000 ஆண்களிடம் வொஷிங்டன் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறைந்த வயதில் முடி உதிரும் ஆண்களுக்கு புற்று நோயின் தாக்கங்கள் குறைவாகவே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதை அடையும் ஆண்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் முடி உதிர்வுப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
IQ POWER
இங்கிலாந்து பல்கலைக்கழகம் மனிதர்களின் முளைத்திறன் (IQ Power) குறித்த ஆய்வில் ஈடுபட்டது. அப்போது பழக்க வழக்கங்களுக்கும், IQ திறனுக்கும் உள்ள தொடர்பை சோதித்தபோது புத்திசாலிகள் ஏமாற்றுவதை விரும்புவதில்லை என்று தெரியவந்தது.
ஆயிரக்கணக்கான டீன் ஏஜ் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் ஆய்வின்போது அனுபவ அடிப்படையில் சோதிக்கப்பட்டனர். அப்போது புத்திசாலிகள் (அதிகமான IQ. திறன் பெற்றிருந்தவர்கள்) பிறரை ஏமாற்றும் எண்ணம் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்கள் திறந்த மனதுடன் எண்ணங்களை வெளிப்படுத்துபவர்களாகவும், மற்றவர்களில் இருந்து விதிவிலக்காக அவசியமற்றவற்றை ஒதுக்குபவர்களாகவும் இருந்தனர். பாலியல் ரீதியிலும் விதிவிலக்காகவே உள்ளனர்.
இந்த விஷயங்களில் புத்திக்கூர்மையுள்ள பெண்களுக்கு சம்பந்தமில்லை. அவர்களிடம் இருந்து சாதகமான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.
புத்திக்கூர்மை உடையவர்கள் எண்ணங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று புதுமையான சிந்தனை உடையவர்களாக இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திறந்த மனப்பான்மை உடையவர்கள் மற்றும் நாத்திகவாதிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது
வலியில்ல ஊசி...
மனிதர்களின் நோய் குணமடைய உடலில் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. இதனால் வலி ஏற்படும் என்பதால் ஊசி போட்டுக் கொள்ள குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அச்சப்படுகின்றனர்.இந்த அச்சத்தைப் போக்கி வலி இல்லாத வகையில் போடும் மருந்து ஊசியை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
இந்த ஊசிகள் கரையக்கூடிய பாலிமர் இழைகளால் தயாரிக்கப்பட்டது. இதை உடலில் குத்துவதன் மூலம் தோலின் அடிப்பகுதி சேதமடையாது. வலி ஏற்படாது.
இந்த மைக்ரோ ஊசிகள் 0.5 மி.மீட்டர் நீளமும், 0.3 மி.மீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஊசி அண்மையில் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
ஊசி பற்றிய தகவல் அருமை..
ReplyDelete