கவர்ச்சியாக இருப்பது எப்படி...?

கவர்ச்சி என்பது ஒரு வினோதமான விஷயம். ஒருவர் மிகவும் அழகானவராக இருக்க முடியும் அதே நபர் கவர்ச்சியாக இல்லாவிடின் எவரும் கண்டுகொள்ளாத ஒருவராகவே இருப்பார். கவர்ச்சியாக இருப்பதென்பது கட்டாயமாக அழகானவராக இருக்க வேண்டும் என்பதில்லை. உள் அழகை காட்டவேண்டும்...அது எப்படி முடியும்...


நீங்கள் கவர்சியானவராக இருக்க வேண்டுமா...பின் வரும் 08 விடயங்களை கருத்தில் கொள்ளுங்கள்...

01 ) நீங்கள் நீங்களாகவே இருங்கள்... பெரும்பாலானோர் தங்களின் சொந்த இயல்புகளை மறைத்து வேறோ ஒருவரின் இயல்பை பின்பற்றுவதேயே காணக்கூடியதாக உள்ளது... உங்களின் இயற்கையான குணா நலன்களை மறைக்க வேண்டிய தேவை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஓன்று அதே போல் வேறு ஒருவரின் இயல்புகளை பிரதிபலிக்கவேண்டிய அவசியமும் இல்லை. இந்த உலகில் எவரும் முழுமையான மனிதர் கிடையாது. உண்மையாக நடந்து கொள்ளும் மனிதர்கள் எப்போதும் மிகவும் கவர்ச்சியானவர்களாக இருப்பார்கள். வெட்கம் தவிருங்கள், நீங்கள் உங்களை விரும்புங்கள் மற்றவர்கள் தானாக உங்களை விரும்புவார்கள்...


02 ) நேரடியாக / குறிப்பாக பேசுங்கள்... அர்த்தமுள்ளவாறு பேசுபவர்களிடம் இயற்கையாகவே ஒருவித கவர்ச்சி உள்ளது... பேச வேண்டும் என்பதற்காக பேசாதீர்கள். சுற்றிவளைத்து பேசாதீர்கள்... ஆப்ரகாம் லிங்கன் சொன்னதைப்போல " மிகையாக பேசி சந்தேகங்களுடன் பிரச்சனைகளை தீர்ப்பதை விட பேசாமல் இருந்து முட்டாள் என பெயர் கேட்பதே மேல்"



மிகுதி நாளை....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன