செல்போன்கள் சில ஆண்டுகளுக்கு முன் அதிசயப் பொருள். இன்றோ அது அத்தியாவசியமாகிவிட்டது. பயனுள்ளது என்பதோடு பொழுது போக்கு அம்சங்களும் இருப்பதால் அனைவரையும் வசியப் படுத்திவிட்டது எனலாம்.
நண்பர்கள், உறவினர்களின் செல்போன்களைப் பார்த்து வியந்து, ஒரு மொபைலை வாங்கலாம் என்று கடைக்குப் போனால் எல்லாவித போன்களும் கவர்ந்து இழுக்கின்றன. நாளுக்குநாள் புதிய வசதிகள், மாதிரிகள் அறிமுகமாகின்றன. எனவே ஏற்கனவே செல்போன் வைத்திருந்தாலும் வேறுமாடல் மீது மோகம் வருகிறது.
நீங்களும் புதிய மொபைல் வாங்க திட்டம்போட்டு வைத்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே இங்கே சில ஐடியாக்கள்…
பட்ஜெட்: மொபைல் வாங்குவதற்கு முன்பு உங்கள் பட்ஜெட் எவ்வளவு என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தற்போது எண்ணற்ற மாடல்கள், பிளான்கள் கிடைக்கின்றன. அதில் உங்களுடைய பட்ஜெட்டுக்கு எது ஒத்துவரும் எனத் தெரிந்து கொண்டு, அதைத் தேர்ந்தெடுங்கள். என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை கடைக்காரரிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை: நீங்கள் எவ்வளவு நேரம் மொபைலைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள். அதிக நேரம் பேசு பவரா? அல்லது அதிகமாக எஸ்.எம்.எஸ். பயன்படுத்துவீர்களா? இதில் எதை நீங்கள் அதிகமாக உபயோகப்படுத்த வேண்டிய நிலை உள்ளதோ, அதற்குத் தகுந்தபடி பிளானைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
புதிய வசதிகள்: தற்போது நடைமுறையில் என்னென்ன புதிய வசதிகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக குறிப்பிட்ட கால ஒப்பந்தம், மாதக்கட்டணம், ப்ரீபெய்டு, குத்தகை என பல வகை உள்ளன.

மாத வாடகை பிளானில் ஒவ்வொரு மாதமும் பேசிய பின் அந்த மாதத்தின் இறுதியில் பில் வரும். சில மாதங்கள் இது அதிகமாகவும், சில மாதங்கள் குறைவாகவும் இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி பட்ஜெட் உள்ளவர் என்றால், உங்களுக்கு மாத வாடகை பிளான் சரியாக இருக்கும். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட கால ஒப்பந்த பிளானும், குறுகிய காலத்துக்கு மட்டும் செல்போன் தேவைப்படுபவர்களுக்கு குத்தகை பிளானும் பொருந்தும்.
பிளானுக்குத் தகுந்தபடி கால் கட்டணங்கள் வித்தியாசப்படுகின்றன. ஒரே நிறுவனத்தில் சில பிளான்களில் குறைந்த கட்டணமும், சில பிளான்களில் அதிக கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் நொடியைக் கணக்கிட்டும், சில நிறுவனங்கள் நிமிடத்தைக் கணக்கிட்டும் கட்டணங்களை முடிவு செய்கின்றன. அதே நிறுவனத்தைச் சேர்ந்த எண்களுக்கு பேச குறைந்த கட்டணமும், மற்ற நிறுவனத்தைச் சேர்ந்த எண்களுக்கு பேச அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு சில நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன, சில நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கை வரை இலவசமாக எஸ்.எம்.எஸ்.கள் அனுப்ப சலுகை அளிக்கின்றன. எனவே, எந்த பிளான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து அதை தேர்ந்தெடுங்கள். ப்ரீ பெய்டு, போஸ்ட் பெய்டு போன்ற வற்றிலும் சலுகைகள் வரலாம். சில நிறுவனங்கள் புது பிளானுக்கு மாறுவதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாகப் பெற்றுக்கொள்கின்றன. எனவே, சிம்கார்டு வாங்கும்போது அதில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கவனமாகப் படித்துப் பாருங்கள்.
பேட்டரியில் கவனம்: ஆரம்பகட்ட மொபைலில் கால் செய்யும் வசதி, எஸ்.எம்.எஸ். அனுப்பும் மற்றும் பெறும் வசதி மட்டுமே இருக்கும். எம்.எம்.எஸ்., வாய்ஸ் ரெக்கார்டிங், வீடியோ கால்ஸ், இன்டர்நெட் போன்ற நவீன வசதிகள் சிலருக்கு தேவைப்படலாம். இதில் எந்த வசதி உங்களுக்கு தேவைப்படுகிறதோ, அந்த வசதி உள்ள மொபைலை வாங்குவது நல்லது. அதிக விலை கொடுத்து அனைத்து நவீன வசதிகளும் கொண்ட மொபைலை வாங்கி பயன்படுத்தாமல் இருப்பதைவிட, தேவையான வசதி உள்ள மொபைலை வாங்கினால் பணம் வீணாகாது. அதேபோல் அதிக நேரம் நீடிக்கக் கூடிய பேட்டரி உள்ள மொபைலாகப் பார்த்து வாங்குவதும் நல்லது.
மாற்றிக் கொள்ளும் வசதி: நீங்கள் மொபைல் வாங்கிய 6 மாதத்திற்குப் பிறகு நவீன வசதி நிறைந்த மொபைல் புதிதாக வரலாம். அப்போது அதை வாங்க நீங்கள் ஆசைப்பட்டால் ஏற்கனவே உள்ள மொபைலைக் கொடுத்து விட்டுப் புதியதை வாங்கும் வசதி உள்ளதா என்பதைப் பாருங்கள். கூடுதல் தொகை கொடுக்க வேண்டியது இருந்தால், அது உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதா என்பதையும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
நெட்வொர்க் வசதி: நீங்கள் நகர்ப்பகுதியில் மட்டும் மொபைலைப் பயன்படுத்தினால் போதுமா? அல்லது எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டுமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். ஜி.எஸ்.எம். மற்றும் 3G என இரண்டு வகையான நெட்வொர்க்குகள் உள்ளன. இதில் நீங்கள் எந்த மாதிரியான இடங்களில் மொபைலைப் பயன்படுத்துவீர்களோ, அதற்கேற்ற நெட்வொர்க் வசதியுள்ள மொபைலைத் தேர்ந்தெடுங்கள்.
மதிப்பிடுங்கள்: உங்களைச் சுற்றி உள்ள குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் எந்த மாதிரியான மொபைலைப் பயன்படுத்துகின்றனர், அதில் உள்ள வசதிகள் என்னென்ன, அதன் விலை எவ்வளவு என்பதை விசாரித்து, அதனுடைய மதிப்பைக் கணக்கிட்டுப் பாருங்கள். அதில் எந்த மொபைல் உங்களின் பயன்பாட்டிற்கும், பட்ஜெட்டிற்கும் ஒத்து வருகிறதோ, அதையே நீங்களும் தேர்வு செய்யலாமே! ...
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன