2009இல் ஆரம்பித்த இந்த Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர் 02 பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 பட்டத்தை அல்கா அஜித் தட்டிச் சென்றார். விஜய் டி.வி.,யில் ஒளிப்பராகி வந்த குட்டீசுக்கான பாட்டு போட்டி, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 இறுதி போட்டி 17 /06 /2010அன்று நடந்தது. இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருந்த அல்கா அஜித், ஷ்ரவன், ரோஷன், நித்யஸ்ரீ, ஸ்ரீகாந்த் ஆகியோர் அதிரடியாக களமிறங்கினர். சித்ரா, மால்குடி சுபா, மனோ, உன்னி மேனன், ஸ்ரீநிவாஸ், சுசித்ரா போன்ற பின்னணி பாடகர்களும், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், ஜேம்ஸ் வசந்தன்,. தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியாளரும் 2 பாடல்களை பாடினர். எஸ்.எம்.எஸ்., மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். 3.5 லட்சம் எஸ்.எம்.எஸ்., ஓட்டுகள் பதிவாகின. அல்கா அஜித் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றார். அவர் இறுதிப் போட்டியில் சிங்கார வேலனே வா வா, முன்பே வா அன்பே வா என்ற பாடல்களையும் பாடி அரங்கமே அதிர்ந்த வரவேற்பை பெற்றார். அல்கா 7 வயது முதலே பாட்டு பாடி வருகிறார். அவருக்கு 11 மொழிகளில் பாடல்களை பாடும் திறன் இருக்கிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளில் பாடியுள்ளார். யுனஸ்கோ தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
அல்க அஜித்திற்கு Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர் 02 என்ற பட்டம் மட்டுமல்லாது 25 லட்சம் ரூபா மதிப்புள்ள அழகிய வீடொன்றும் பரிசாக வழங்கப்பட்டது. ஷரவன் போட்டியில் இரண்டாவது இடத்தை தட்டிக்கொண்டார், அவரிற்கு பரிசாக வழங்கப்பட்டதோ "Stylish Car". ஆறுதல் பரிசுகளாக நித்யஸ்ரீ மற்றும் ரோஷனிட்கு தலா 02இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியின் பிரபல போட்டியாளராக ஸ்ரீகாந்த் தெரிவுசெய்யப்பட்டு 03 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. விசேட பரிசுகளாக பிரியங்கா மற்றும் ஸ்ரீநிஷாவிற்கு தலா 01 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.....
தொடரும் சந்தேகம்... நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரோ மொத்த வாக்குகளின் தொகை 3 .6 இலட்சம் (Wild Card சுற்றின் மொத்த வாக்குகளை விட குறைந்த தொகை ) என அறிவித்தவேளை இவ்விழாவிற்கு சிறப்பு அதிதியாக வருகை தந்து இறுதி முடிவுகளை தந்த கார்த்திக்கோ மொத்த வாக்குகளின் தொகை 13 இலட்சம் என அறிவித்தார்...
ஒவ்வொரு போட்டியாளருக்குமான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படாதது ஏன்? ஆறுதல் பரிசு வழங்கப்பட்டதன் நோக்கம் என்ன...என்னைபொறுத்தவரை ஆறுதல் பரிசு Wild Card சுற்றில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களிட்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்...
The confusion remains!