உடுராவணனும் கணினியும்

உடுராவணன் கணினி பயிலுவதற்காக அவருக்கு ஒரு கணினி வாங்கிக் கொடுத்தார்கள். அதிலே வீட்டில் பயிற்சி ‌எடுத்தார். ஒரு முறை கணினி பழுதடைந்தது. அப்போது எனக்கு தெரிந்த ஒரு நண்பரை அழைத்து கணினியை சரிசெய்ய கேட்டுக் கொண்டோம். அந்த ஹார்டுவேர் இன்ஜினியர் கணினியில் விண்டோஸ் கரப்ட் ஆகிவிட்டது. நியூ விண்டோ இன்ஸ்டால் செய்து கொடுத்து விடுகிறேன் என்றார். ஒரு சில மணிநேரத்தில் பழுது சரிசெய்யப்பட்டு கணினி செயல்படத் தொடங்கியது. அதற்காக அவருக்கு ரூ. 750 வழங்கப்பட்டது. அவர் கிளம்பத்தயாராக இருந்தார். அப்போது பரபரப்பாக வந்த உடுராவணன் என்ன சார் முடிஞ்சதா என்றார்.. அதற்கு அவர் முடிஞ்சது ‌பழைய விண்டோ மாற்றி நியூ விண்டோ போட்டாச்சி அதற்கு கட்டணமும் வாங்கியாச்சி என்றார். அதன் பிறகு உடுராவணன் சரி சார் அந்த பழைய விண்டோவை கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்றார். வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் உடுராவணன் தொடர்ந்தார். கீ-போர்ட் பழுதானது புதியது மாற்றி பழையதை கொடுத்துவிட்டார்கள்... மௌஸ் மாற்றினோம் புதியது மாற்றி பழையதை கொடுத்து விட்டார்கள் தற்போது விண்டோ போய் விட்டது தாங்கள் புதிய விண்டோ மாற்றினீர்கள் ஆகையால் அந்த பழைய விண்டோவை கொடுத்து விட்டு செல்லுங்கள் ‌என்றார்... (அப்போது மயங்கி விழுந்த அவர் ஒரு வாரம் கழித்துதான் தெளிந்தது..) வீட்டிலுள்ள அனைவராலும் உடுராவணன் பாராட்டப்பட்டார்.. இந்த வயசில் இவ்வளவு பொறுப்பாகவும்.. இவ்வளவு அறிவாளியாவும் இருப்பதைக் கண்டு அனைவரும் புகழாரம் சூட்டினார்கள்.‌ ஊராரும் அங்குவந்து வாழ்த்தினார்கள்... கொஞ்சம் கொஞ்சமாக உடுராவணனின் புகழ் இந்த உலக‌மெங்கும் பரவியது.. வாழ்க.. உடுராவணன் புகழ்.. வளர்க உடுராவணன் அறிவு




Source : நெட்டில் சுட்டது - கொஞ்சம் Modified

உள்ளத்தை அள்ளிச்செல்லும் படங்கள்...

உள்ளம் கொள்ளை போகுதே...



இந்த லிங்கை கிளிக் செய்து...என்ஜாய்....




ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்....

உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி இப்போ இலங்கையில் (தொடர்ச்சி...)



முன்னைய பதிவினை வாசிக்க இங்கே கிளிக்கவும் கொழும்பு துறைமுகம் ஒரு அதி உயர் பாதுகாப்பு வலயம் அப்படியெனில் எப்படித்தான் மிதக்கும் புத்தக கண்காட்ச்சிக்கு செல்வது...



ரொம்ப சிம்பிள்..Galle Face கடற்கரைக்கு செல்லுங்கள்... ஒவ்வொரு மணித்தியாலமும் புத்தக கண்காட்ச்சிக்கான போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் ஏற்புடைய விலையில் கிடைக்கின்றது. உள்ளூர் சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் ஏற்புடைய விலையில் கிடைக்கும். ஏனைய புத்தக கண்காட்சிகள் போல பரந்த உள்ளடக்கத்தை கொண்டு அமைத்துள்ளது (விளையாட்டு, பொழுதுபோக்கு, விஞ்ஜானம், அகராதி என பல பல வகைகள்) இதில் சஞ்சிகைகளும் அடக்கம், புத்தக கண்காட்சியும் விற்பனையும் கப்பலின் மேல் தளத்தில் காணப்படுகின்றது, புத்தகங்கள் மட்டுமல்ல சர்வதேச தரத்திலான சிற்றுண்டிச் சாலையும் உள்ளது முழுக்குடும்பமும் சர்வதேச தரத்திலான உணவை மிதந்து கொண்டே உண்டு மகிழலாம்.

மார்ச் 19 தொடக்கம் ஏப்ரல் 03 வரை Logos Hope பண்டாரநயாக இறங்கு துறையில் நங்கூரமிட்டிருக்கும். செவ்வாய் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6:30 வரையும் ஞாயிறு மற்றும் திங்கள் மாலை 2 மணி தொடக்கம் 6:30 வரை திறந்திருக்கும். நுழைவுக்கட்டணமாக வெறும் தலைக்கு 70 ருபாய் மட்டுமே அறவிடப்படுகின்றது. வயது குறைந்த பிள்ளைகள் முதியவர்களுடனேயே வர வேண்டும்.


இலங்கையில் கண்காட்சியை முடித்துக்கொண்டு Logos Hope அடுத்ததாக இந்திய செல்லவுள்ளது, அங்கு சிறிது காலம் தங்கிய பின் மீண்டும் ஜூன் மாதமளவில் மீண்டும் கொழும்பு வந்து கண்காட்சியை தொடரும்.

உலக தினமும் கிரிகெட்டும்

Sri Lanka put off marking "Earth Hour" because it clashed with the cricket World Cup. Sri Lanka had joined the WWF drive to switch off lights for an hour on Saturday to display its green credentials, but the day-night match between England and the home team forced a rethink. Sri Lanka went onto to score a spectacular 10-wicket win to reach the semi-finals against New Zealand on Tuesday. A spokesman for the organisers said the country will now mark "Earth Hour" 24 hours later on Sunday when state and private business will keep their illuminations switched off. "We decided to hold the Earth Hour on Sunday because of Saturday's match," said minister Udaya Gammanpila. Tuesday's semi-final will also be a day-night match played under floodlights at the 35,000-seat R. Premadasa stadium. நன்றி : வலை

உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி இப்போ இலங்கையில்

நீங்கள் இன்னமும் "Logos Hope " மிதக்கும் புத்தக கண்காட்ச்சிக்கு செல்லவில்லையா? நீங்கள் வெட்கப்படவேண்டிய ஒரு விடயம் ஏனெனில் நீங்கள் உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி அனுபவத்தை இளக்கப்போகிறீர்கள். Logos Hope இப்போது கொழும்பு துறைமுகத்தில் நன்கூரமிட்டுள்ளது இதுவே அதன் கன்னிப்பயனமாகும். இக்கப்பலானது அதனது சகோதரிகளான Logos மற்றும் Doulos போல இலங்கைக்கு வருகைதந்துள்ளது. எது எப்படியிருப்பினும் லோகோஸ் ஹோப் அவற்றுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரியதும், அதிகளவான புத்தகங்களை தாங்கியும் இலங்கை வந்துள்ளது. இதில் சொகுசான போதியளவு இடம் வாசிப்பதற்கும் பார்பதற்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மிகுதி நாளை..