புரிந்துகொள்ளுங்கள்....

படித்து சுவைத்தது....

பெற்றவர்களை சொல்லி
புரியாதது
எல்லாம்
ஒரு நாள்...
வாழ்க்கை புரியவைக்கும்...

அப்பொழுதில்
புரிந்துகொண்டால்
காலம் கடந்தது மட்டும்
அல்லாமல்
வலிக்கவும் செய்யும்.....

அந்த தருணத்திலும் உன்னை
தாங்கிபிடிக்கபோவது
உன் முதல்
நலன் விரும்பி
பெறோர்கள் தான்
புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...


மீள் வருகை...

மிச்ச நாட்களுக்கு அப்புறம் உங்களையெல்லாம் இந்த பதிவின் மூலம் மீள சந்திப்பது மிச்ச சந்தோசம்...

மீள் ஆரம்பமே...கலக்கலான ஜோக்சுடன் ஆரம்பிப்போம்...

இப்ப பார்த்திங்கன்ன பாடசாலைகளில நடுக்கிற காமெடியே தனி..அப்படிதாங்க ஒரு அப்பாவிடம் அவரது மகனின் கல்வி நிலையை பற்றி கம்ப்ளைன் பண்ணுகிறார் ஆசிரியர்...

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான், ஐயா.

சரி பாடசாலையில் தான் அப்படீன்னு பார்த்த இல்லீங்க... படிக்கிறது சம்பந்தமா வீட்ல நடுக்கிற காமெடி ஒரு தனி track ... அப்பாவிடம் மகன் காலையில் கதை அளக்கிறான் இரவிரவாக தான் பரீட்ச்சைக்கு படித்ததாக...

அப்பா: நேத்து ராத்திரி பரீட்ச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!!

தாங்க முடியலப்பா...

எல்லோரும் ஏழைகள்தான்...


ஒரு நாள் மிகவும் செல்வந்தரான ஒருவர் தனது மகனிற்கு வறுமை என்றால் என்ன ஏழ்மை என்றால் என்ன என்பதை விளங்கப்படுத்த விரும்பினார்...தனது மகனை அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் அந்த ஏழை எளியவர்களுடன் சில நாட்கள் தங்கி அவர்களுடனேயே வாழ்ந்து..அவர்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொண்டனர்...அங்கு தங்கி இருந்த நாட்கள் முழுவதும் பகல் இரவாக அவர்களுடனேயே தங்கி இருந்தனர்.
சில நாட்கள் அங்கு தங்கி இருந்த பின் தமது ஊரிற்கு திரும்பி வரும் வழியில், செல்வந்தரான அப்பா தனது மகனிடம் கேட்கிறார்... பிரயாணமும் அங்கு தங்கி இருந்த நாட்களும் எப்படி இருந்தது...?
மகன் பதிலளிக்கிறான்... பிரமாதம் அப்பா...அது ஒரு வித்தியாசமான அனுபவம்..

ஏழை மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டாயா... அப்பா கேட்கிறார்..

ஆம்...மிகவும்...நன்றாக அறிந்துகொண்டேன்... மகன் பதிலளிக்கிறான்..

அப்படியா...மிக்க மகிழ்ச்சி...சரி அவர்களிடமிருந்து நீ என்ன விடயங்களை கற்றுக்கொண்டாய்... அப்பா வினவுகிறார்...

மகன் சரமாரியாக பதிலளிக்கிறான்...இப்படியாக...

எங்களிடம் இருப்பதோ ஒரே ஒரு நாய்க்குட்டி..அவர்களிடம் நான்கு உள்ளது..

எங்களிடம் உள்ளதோ எமது தோட்டத்தின் மத்தி வரை பரந்துள்ள ஒரு நீச்சல் குளம்... அவர்களிடம் உள்ளதோ எல்லையற்ற நீர் அருவி...

எங்கள் தோட்டத்தை இரவில் ஒளியூட்ட இறக்குமதி செய்யப்பட்ட மின் விளக்குகள்...அவர்களின் இடத்தை ஒளியூட்ட பிரகாசமான நட்சத்திரங்களும் நிலாவும்...

எங்கள் விறாந்தை எங்கள் கேட் வரையே உள்ளது அவர்களதோ...எல்லையற்றது...

எங்களிடம் உள்ளதோ ஒரு சிறிய நிலத்துண்டு அதில் தான் நாம் வாழ்கிறோம்...அவர்களிடம் உள்ளதோ எமது கண்ணுக்கெட்டா தூரம் வரையுள்ள தோட்டமும் தோப்பும்...

எங்களிற்கு சேவை செய்ய வேலையாட்கள் உள்ளனர்...அவர்களோ மற்றவர்களிற்கு சேவை செய்கிறார்கள்...

நாம் எமக்கு தேவையான உணவினை கடைகளில் வாங்குகிறோம்...அவர்களோ தேவையானதை உற்பத்தி செய்கிறார்கள்...

எங்களையும் எமது உடைமைகளையும் பாதுகாக்க எம்மை சுற்றி மதில் உள்ளது...அவர்களிட்கோ...சுற்றி நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர்...

செல்வந்தரான அப்பவோ பேச்சிழந்து நின்றார்... மகன் தொடர்ந்தான்...

நாம் எவ்வளவு வறியவர்களாக உள்ளோம் என்பதை உணர்த்தியதற்கு மிக்க நன்றி அப்பா...

எங்களிடம் உள்ளதை மட்டுமே பெருமையாகவும் பெரிதாகவும் பார்ப்பதால்... எங்களிடம் இருக்கவேண்டிய நிறைய விடயங்களை இழந்தவர்களாக இருக்கிறோம்...

எங்களிற்கு கிடைக்கும் ஒவ்வொரு சிறிய விடயங்களையும்... நன்றியுடன் பார்ப்போம்...பார்ப்போமா...???

"Life is too short and friends are too few”