இராமாயணமும் .... முகாமைத்துவமும் ... PART III

இராமயணத்தில் இராவணன் தனது இராச்சியத்தினை இழப்பதற்கு முக்கிய காரணம் நல்ல முகாமைத்துவப்பண்புகள் அவனிடம் காணப்படாமையே ஆகும்.

இராவணன் ஆரம்பத்திலிருந்தே தனது முகாமையாளர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்தாது செயல்பட்டதால் இராமனுடன் போர் புரிந்து தனது நாட்டை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

மேலும் நிறுவனம் ஓன்று இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் தருவாயில் அதனது முகாமையாளர்களே அந்நிறுவனத்தை பிணையில் எடுக்கும் திறமையை கொண்டிருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல முகாமையாளர் தனது கீழ் நிலை உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளை செவி மடுப்பதோடு, நிறுவனத்தின் நலன் கருதி அனைவரையும் ஓன்று சேர்த்தே செயல்படுவார்.
இராவணனது தவறான முகாமைத்துவப் பண்புகள் விபீஷணனின் பிரிவிற்கு காரணமாக அமைந்தது. இராவணன் நெருக்கடியான கால கட்டத்தில் நல்ல முகாமயாளனாக திகழ்ந்த விபீஷணனை இழந்து போரில் தோல்வியை தழுவிக்கொண்டான்.

நிறுவனங்கள் செயல்படுவது உறவுகளிலேயே... ஊழியகளுடனும், வாடிக்கையாளர்களுடனும் நல்ல உறவை பேணி வளர்க்கும் ஒரு முகாமையாளன் நிறுவனத்தின் ஒரு தூணாக காணப்படுவான், இராமனிடம் இந்த பண்பு நன்கே காணப்பட்டது, உறவுகளை பேணி வளர்ப்பதில் இராமன் கைதேர்ந்தவனாக காணப்பட்டார்.

இந்த பண்பினை விளக்க ஒரு சம்பவம் ... இராவணன் சண்டையில் காயமுற்று இறக்கும் இறுதி கட்டத்தில் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கின்றான்.. அந்த இடத்தில் இராமன் அவன் பக்கத்தில் அமர்ந்து தனது வாழ்வில் தான் பெற்ற சில அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறான். அதே இராவணன் ராமனால் அனுப்பப்பட்ட லக்ஷ்மணிடம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இராமனுடன் தனது அனுபவங்களை சந்தோசமாக பகிர்ந்து கொண்டான், இந்த நிகழ்வு இராமனின் உறவினை வளர்க்கும் பண்பினை தெளிவு படுத்துகின்றது.

இது போன்ற சில உதாரணங்களும் இன்னும் பல சம்பவங்களும் முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துகூறுகின்றன. முகாமையாளர்கள் எமது காவியங்களிலிருந்து கற்றுக்கொள்ள இன்னும் பல விடயங்கள் உள்ளன. இராமாயணம் மட்டுமல்ல, கீதை, மகாபாரதம் போன்ற காவியங்களிலும் முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தும் சம்பவங்கள் பல காணப்படுகின்றன...

மீண்டும் ...இராமாயணமும் .... முகாமைத்துவமும் ... PART IV... இல் சிந்திப்போம்...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன