விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரி இரவு 09 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி "Airtel Super Singer Junior 02 " இந்த நிகழ்ச்சி இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ் இதயங்களை கட்டிப்போட்ட நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி 06 - 14 வயதிட்குடப்ட்ட சிறுவர்களுக்கான போட்டி நிகழ்வாக அமைகிறது. இந்த சிறுவர்களின் திறமை இசை உலகின் மாபெரும் காவியங்களால் மதிப்பிடப்படும். இந்த போட்டியில் வெல்லும் போட்டியாளருக்கு "Airtel Super Singer Junior 02" என்ற பட்டம் மட்டுமல்லாது 25 லட்சம் மதிப்புள்ள ஒரு அழகிய வீடும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது...

இந்த போட்டிக்கு நடுவர்களாக...இவர்களை பற்றிய அறிமுகம் தேவையே இல்லை...1 கலைமாமணி மனோ, இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 20000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடியதில் "சென்பகமே...முக்கால முகபுல...தில்லான தில்லான...அழகிய லைலா...போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களும் அடங்கும்.
02 சின்னக்குயில் சித்ரா - 06 தேசிய விருதுகள் பெற்ற தென் இந்திய பாடகி, (Nightingale of South India), புதிய பாடகர்களுக்கும், வளர்ந்து வரும் பாடகர்களுக்கும் இன்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் ஒரு இசைக் காவியம். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒரிய ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி மொழிகளிலும் பாடியுள்ளார்.

03 மால்குடி சுபா - இவர் இப்போட்டியின் மூன்றாவது நடுவர், இவர் சராசரியாக 1500
பாடல்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடியுள்ளார்.

பல லட்சம் சிறுவர்களிலிருந்து வடிகட்டி இறுதி சுற்றுக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் கீழ்வரும் நான்கு பேர்.
01 ஷரவன்,

02 ரோஷன்,

03 நித்தியஸ்ரீ

04 அல்க.

கால் இறுதி வரை வந்து அரை இறுதி சுற்றில் நுழைய முடியாமல் போன போட்டியாளர்கள்...
01 ஸ்ரீநிஷா:

02 பிரியங்கா:

03 பிரசன்னா சுந்தர்

என்னதான் இறுதி சுற்றுக்கு இவர்கள் வந்தாலும் ஒரு சில சுற்றுக்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட குட்டி பையன் ஸ்ரீகாந்த தான் பேர் என்னை பொறுத்தவரை ஜூனியர் சூப்பர் சிங்கர் - குட்டி பையன் பாடும் விதம், Stage Presentation சொல்ல வார்த்தைகளில்லை) Admiring littel Personality




இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி சார்பில் தொகுத்து வழங்குவது "திவ்யா". இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதே தனி ரகம்..."Airtel Super Singer Junior 2 , தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்..." வேறு எவராலும் இவ்வளவு நளினமாக இதை உச்சரிக்க முடியுமா...தெரியவில்லை...

போட்டியாளர்களை வழி நடத்தி வேண்டிய பயிற்ச்சிகளை வழங்குபவர் திரு. ஆனந்த் வைத்தியநாதன் பிரபல Voice -Expert (ex-Head, Indian Classical Music, HMV - Trained in the Husler’s Technique of Voice Engineering under Prof. Peter , Calatin, Germany)

பின் குறிப்பு...
இவ்வளவு சிறப்பாக நடந்துவந்த இந்த நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தில் சில குளறுபடிகள் நடப்பது போல உள்ளது... குயிலோ அஜித் பக்கம் சாய்கிறது...பொறுத்திருந்தோ பார்ப்போம்... நடுவர்கள் எப்படியாவது அல்காவினை மேலே கொண்டு செல்வதில் பெரும் சிரத்தை எடுப்பதுபோல தெரிகிறது... பிஞ்சு மனதுகளை புண் படுத்தாதீர்கள் நடுவர்களே.
திறமையை பாருங்கள் நடுவர்களே... வேறு எதற்கும் மயங்கதீர்கள்...நடந்து கொண்டிருக்கும் semi -final சுற்றில் இந்த அநியாயத்தை உணரக்கூடியதாக இருந்தது...
இந்த சுற்றுக்கு சிறப்பு அதிதிகளாக வருகை தந்தோர்;
Classical Music இற்கு Dr . நித்தியஸ்ரீ மகாதேவன்:

Melodies பாட Mr . ஹரிஸ் ராகவேந்திரா:

Modern இசைக்கு Ms . சுசித்திர

இறுதி சுற்றில் பங்குபற்ற 03 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்... கால் இறுதி போட்டி முடிந்த பின் போட்டியாளர்களிட்கு கிடைக்கும் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வர் மற்ற இருவருக்கும் மீண்டும் ஒரு போட்டி நடாத்தப்பட்டு ஒருவர் வெளியேற்றப்படுவர்..கொஞ்சம் கடுமையான போட்டிதான்.
இது இப்படியிருக்க நடுவர்களுக்கோ ஒரே Tension எங்கே தங்களின் Favourite பாடகி அல்க அஜித் இக்கட்டான போட்டிக்கு தள்ளப்பட்டுவிடுவாரோ என்ற பயம். ஒருவழியாக இவர்களின் அநியாயத்துக்கு இரையானதோ பாவப்பட்ட சிறுசுகளான நித்யஸ்ரீ , ரோஷன். அல்க அஜித் மற்றும் நித்யஸ்ரீ இடையே நடந்த போட்டியில் பழிவாங்கல் படலம் நடந்தது... சிறப்பு அதிதிகளின் கூற்றுப்படி இருவரும் மிக நன்றாக பாடினார்கள் இருப்பினும் அல்க 28 புள்ளிகளுடன் வெற்றி பெற நித்யஸ்ரீக்கோ கொடுக்கப்பட்டது 20 புள்ளிகள். தர வரிசையில் ஷரவன் முன்னிலையில் இருக்க அடுத்து இருந்ததோ ரோஷன், அல்கவிட்கு கிடைத்த இந்த அதிரடி 28 ஆல் அல்க ஏற்றப்பட்டார் 02 ஆம் இடத்திற்கு...
இறுதி போட்டியில் பாடப்போவது ஷரவன், அல்கவுடன்.... ரோஷனா.... நித்தியஸ்ரீயா.... பொறுத்திருந்து பார்ப்போம்..