படிப்பதா, வேலைக்கு போவதா? மூளை ஸ்கேனில் தெரிந்துவிடும்...


எது படிப்பது? என்ன பிசினஸ் செய்வது? எந்த கம்பெனியில் வேலைக்கு போவது என முடிவு செய்ய முடியாமல் திணறுகிறீர்களா? உடனே டாக்டரிடம் மூளையை ஸ்கேன் செய்யுங்கள். எதில் நீங்கள் கில்லாடிகள் என்று தெரிந்துவிடும்.



மூளை செயல்பாடுகள் குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை பேராசிரியர் ரிச்சர்ட் ஹயர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. 6 ஆயிரம் பேரின் மூளை அமைப்பு, அவர்களது அறிவாற்றல் ஆகியவை குறித்து அலசப்பட்டது.

இதில் தெரியவந்த தகவல் குறித்து ரிச்சர்ட் கூறியதாவது: மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் இருக்கும் ‘பிராட்மேன் ஏரியா’ என்ற இடத்தை பொருத்துதான் ஒருவரது அறிவாற்றல் அமைகிறது. எதையும் விரைவாக முடிவெடுக்கும் தன்மை, சட்டென புரிந்துகொள்ளுதல், நினைவாற்றல் ஆகியவை இப்பகுதியின் அடிப்படையிலேயே அமைகிறது. இந்த இடத்தில் வெள்ளை நிற, சாம்பல் நிறப் பகுதிகள் எந்தளவு உள்ளன, எந்த ஏரியாவில் அமைந்துள்ளன ஆகியவற்றுக்கும் நமது அறிவாற்றல் மற்றும் நாம் திறம்பட செயல்படும் துறைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளன.

6 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இது தெளிவாக தெரிகிறது. ஸ்கேன் செய்தால் இதுபற்றி தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு ரிச்சர்ட் கூறினார். ‘‘வெளிநாடு போகும் யோகம் உண்டா? கல்வி, தொழிலில் வளர்ச்சி பெற முடியுமா?

இங்கு மூளை சாஸ்திரம் பார்க்கப்படும்’’ என்று டாக்டர்கள் போர்டு போட்டுக் கொண்டு உட்காரலாம் போலிருக்கிறது.....

நன்றி : http://www.dinakaran.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன