முன்னைய பதிவினை வாசிக்க இங்கே கிளிக்கவும் கொழும்பு துறைமுகம் ஒரு அதி உயர் பாதுகாப்பு வலயம் அப்படியெனில் எப்படித்தான் மிதக்கும் புத்தக கண்காட்ச்சிக்கு செல்வது...
ரொம்ப சிம்பிள்..Galle Face கடற்கரைக்கு செல்லுங்கள்... ஒவ்வொரு மணித்தியாலமும் புத்தக கண்காட்ச்சிக்கான போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் ஏற்புடைய விலையில் கிடைக்கின்றது. உள்ளூர் சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் ஏற்புடைய விலையில் கிடைக்கும். ஏனைய புத்தக கண்காட்சிகள் போல பரந்த உள்ளடக்கத்தை கொண்டு அமைத்துள்ளது (விளையாட்டு, பொழுதுபோக்கு, விஞ்ஜானம், அகராதி என பல பல வகைகள்) இதில் சஞ்சிகைகளும் அடக்கம், புத்தக கண்காட்சியும் விற்பனையும் கப்பலின் மேல் தளத்தில் காணப்படுகின்றது, புத்தகங்கள் மட்டுமல்ல சர்வதேச தரத்திலான சிற்றுண்டிச் சாலையும் உள்ளது முழுக்குடும்பமும் சர்வதேச தரத்திலான உணவை மிதந்து கொண்டே உண்டு மகிழலாம்.
மார்ச் 19 தொடக்கம் ஏப்ரல் 03 வரை Logos Hope பண்டாரநயாக இறங்கு துறையில் நங்கூரமிட்டிருக்கும். செவ்வாய் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6:30 வரையும் ஞாயிறு மற்றும் திங்கள் மாலை 2 மணி தொடக்கம் 6:30 வரை திறந்திருக்கும். நுழைவுக்கட்டணமாக வெறும் தலைக்கு 70 ருபாய் மட்டுமே அறவிடப்படுகின்றது. வயது குறைந்த பிள்ளைகள் முதியவர்களுடனேயே வர வேண்டும்.
இலங்கையில் கண்காட்சியை முடித்துக்கொண்டு Logos Hope அடுத்ததாக இந்திய செல்லவுள்ளது, அங்கு சிறிது காலம் தங்கிய பின் மீண்டும் ஜூன் மாதமளவில் மீண்டும் கொழும்பு வந்து கண்காட்சியை தொடரும்.
