வெற்றியின் நகரம்

உங்கள் வெற்றியின் பயணத்தில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் ஒன்றே ஒன்றுதான்...தோல்வி பயணத்தின் முடிவல்ல, உங்கள் இலட்சிய பயணத்தில் ஒரு கட்டமே...
 
கீழே உள்ள படத்தை பார்க்கையில் உங்கள் இலட்சிய பயணத்தினை இலகுவில் அடையாளம் காணலாம்.





மேல் உள்ள படம் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான பல தொடர்புகளை காட்டுகின்றது...

  1. வெற்றியின் நகரத்திற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது
  2. அந்த வழி தோல்விக்கிராமத்தினை ஊடறுத்தே செல்லுகின்றது
  3. மக்கள் வெற்றியின் நகரத்தை அடையாமல் இருப்பதன் காரணம் தோல்விக்கிராமத்திநூடாக பயணம் செய்ய பயப்படுவதே ஆகும்.
ஆக மொத்தம் இந்த உலகத்திற்கு சொல்ல வருவதென்ன...?



சாதாரண மனிதர்கள் சொல்லுவது போல் தோல்வி என்பது வெற்றியின் எதிர்ப்பதம் அல்ல. மாறாக தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி அந்த கட்டத்தை தாண்டும் பட்சத்திலேயே வெற்றியை அடையமுடியும். உண்மையிலேயே முயற்சியாலும் தோல்வியாலுமே நாங்கள் எண்கள் இறுதி இல்லக்கை அடைவதற்கான பிரதான தகுதியான அனுபவத்தை பெற்றுக்கொள்கிறோம்.


கூடைப்பந்து விளையாட்டின் அழிக்க முடியாத வீரர் மைகேல் ஜோர்டான் வெற்றி மற்றும் தோல்வி பற்றி கூறுகையில்....

எனது விளையாடு வரலாற்றில் 9000 குறிகளை தவறவிட்டுள்ளேன். 300 போட்டிகள் மட்டில்  கண்டிருக்கிறேன். 26 முறை என்னை நம்பி தரப்பட்ட இறுதி வெற்றி குறியை தவறவிட்டுள்ளேன். எனது வாழ்கையில் மீண்டும் மீண்டும் மீண்டும் பல தோல்விகளை சந்தித்துள்ளேன்...அதனால்தான் என்னால் வாழ்கையில் வெற்றிபெற முடிந்தது...


வெற்றி என்பது தோல்வியின் அடுத்த பக்கத்தில் உள்ளது என்ற மந்திரத்தை நீங்கள் அறிந்திருந்தால் உங்கள் வெற்றியின் நகரத்தை அடையும் பயணத்தில் உங்களை நீங்களே தயார்படுத்திக்கொள்ள முடியும்... வெற்றி நிச்சயம்...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன