களவும் கற்றுமற ... தெரிந்ததை பகிர் காகம்போல ... உணவு, அறிவு &; எல்லாம் .... இருப்பாய் தமிழா நெருப்பாய்!!!! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்...
புத்தக கண் காட்சி - 2009
எப்பிடி எல்லாம் சுகமா இருக்கிறியளோ , என்ன எனக்குதான் கொஞ்ச நாளா நாரிகுள்ள கடுப்பு. சும்மா சொல்லபடாது ஓட்டமேண்ட அப்பிடி ஒரு ஓட்டம் . நாயிக்கு வேலையும் இல்ல இருக்க நேரமும் இல்ல கணக்கா அங்கயும் இங்கயும் ஓடினதில டயர் தெஞ்சதும் நாரி பிடிப்பும் தான் மிச்சம் . அது சரி போன கிழமை நடந்த புத்தக கண்காட்சிக்கு போனீங்களே ? எனக்கெண்டா உண்மைய நேரம் இல்ல, இருந்தும் சும்மா அங்க என்ன நடக்கெண்டு பார்ப்பம் எண்டு ஒரு எட்டு போய் பார்த்தன் . சும்மா சொல்ல கூடாது, எங்கட பிள்ளையளுக்கு கண்காட்சி, கார்னிவல் எண்டா நல்ல சுதிதான். புத்தகம் வாங்க வந்தாக்கள விட வாங்கிறத பார்க்க வந்தாக்கள்தான் கூட. பெற்றார் பிள்ளையளோட வந்தாலும் வாங்கிறது என்னவோ அப்பாவும் அம்மாவும் தான். அதுவும் சரிதான் அவங்களுக்குத்தானே தெரியும் பிள்ளைக்கு என்ன வேணுமெண்டு. இருந்தாலும் பிள்ளை ஆசைபட்டு கேட்டு வாங்கி குடுத்த பிள்ளைக்கும் சந்தோசம் பெற்றார்க்கும் சந்தோசம்தானே. அது சரி விசயத்துக்கு வருவம், எனக்கென்னவோ சகோதர மொழி புத்தகங்கள் தான் கூட கண்ணில பட்டது . அவயல்ட கடைகளும் கூடத்தானே . புத்தக கடைகளைவிட சாப்பாட்டு கடைகள்தான் கூடபோல இருக்கு, அதான் எங்கட சனம் புத்தக கண்காட்சி எண்டு ஜோசிக்காம கார்னிவல் எண்டு நினைச்சினம் போலயிருக்கு . நூடில்ஸ் கடைகளும், சோடா கடைகளும், டீ கடைகளும் தான் கூட. திரும்பின பக்கமெல்லாம் நூடில்ஸ் சாபிட்ட வெற்று பாத்திரங்கள். எப்ப தான் எங்கட சனம் குப்பை தொட்டியின் பயன் அறியுமோ. வெளிய வரைக்குள்ள நிறையபேற்ற கையில புத்தக கட்டுகளைவிட நூடில்ஸ் பெட்டிகள்தான் கூட இருந்திச்சு. எது எப்படியோ, எல்லாம் சுபமா பிரச்சினை ஒண்டும் இல்லாம நல்லூர் கந்தண்ட அருளால முடிஞ்சுபோச்சு , என்ன எனக்கு ஒரே கவலை நானும் ஓன்று ரெண்டு புத்தகங்கள் வாங்குவம் எண்டு இருந்த தமிழ் கடைகள்ள தேடி தேடிப் பார்த்தன் ஒன்றும் கிடைக்கல ஸ்டாக் இல்லையாம்.... அடுத்த வருஷம் பார்ப்பம், கெதியா போக வேணும் ......
Subscribe to:
Post Comments (Atom)
//புத்தக கடைகளைவிட சாப்பாட்டு கடைகள்தான் கூடபோல இருக்கு, அதான் எங்கட சனம் புத்தக கண்காட்சி எண்டு ஜோசிக்காம கார்னிவல் எண்டு நினைச்சினம் போலயிருக்கு . நூடில்ஸ் கடைகளும், சோடா கடைகளும், டீ கடைகளும் தான் கூட. //
ReplyDeleteபுத்தகக் கண்காட்சி என்ற பெயரை வைத்துவிட்டு நூடில்ஸ் வியாபாரம் என்கிறீர்கள்... இலங்கை தானே... அப்படித் தான் இருக்கும்.
// திரும்பின பக்கமெல்லாம் நூடில்ஸ் சாபிட்ட வெற்று பாத்திரங்கள். எப்ப தான் எங்கட சனம் குப்பை தொட்டியின் பயன் அறியுமோ. //
அதற்கு ஒரு 100, 200 வருடம் காத்திருக்க வேண்டும் நீங்கள்.
திருந்தமாட்டார்கள்...
// வாங்க வந்தாக்கள விட வாங்கிறத பார்க்க வந்தாக்கள்தான் கூட//
ReplyDeleteஅருமையாச் சொன்னீங்க இது எல்லா விடயத்திலயும் இருக்கு.