ஊர் புதினம் - மஹா சக்தியின் செயல்...

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டம் என்கிறது எமது முதுமொழிகள். அதுக்கினங்க குடி உள்ளதோ இல்லையோ கட்டாயம் ஊரில் ஒரு கோவிலாவது இருக்கவேணும் என்கிறது எமது நம்பிக்கைகள், அது ஒரு பாக்கம் இருக்க விடயத்திற்கு வருவோம்.



மட்டக்களப்பும் , கிழக்கு மாகாணமும் அம்மன் வழிபாட்டில் சிறப்பானவை . கல்முனை - பாண்டிருப்பு திரோவ்பத்தி அம்மன் கோவில் , புன்னைச்சோலை, ஆரயம்பதி கண்ணகி அம்மன் etc... இந்த வரிசையில் வந்தாறுமூலை கண்ணகி அம்மன் கோவிலும் பிரசித்தி பெற்றது.


இந்த கோவிலின் flash back காண பல நூறு ஆண்டுகள் முன் செல்ல வேண்டும் .... மதுரையை எரித்த ஆவேசத்துடன் கண்ணகி வந்து settle ஆனா இடம்தான் வந்தாறுமூலை அதாவது வந்து ஆறிய மூலை = வந்தாறுமூலை . இந்த கிராமம் இருப்பது மட்டக்களப்பின் வடக்கே சுமார் 9 - 10 km தூரத்தில் ( மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் ). அமைதி விரும்பிய கண்ணகி அம்மனின் விருப்பின்படி இந்த ஆலயத்தின் கதவுகள் திறந்து பூஜை இடம்பெறுவது வருடத்தில் ஒரு முறை மாத்திரமே .



அது சரி, இதையெல்லாம் இப்ப ஏன் சொல்ல வேண்டும் ? தொடர்ந்து வாசியுங்கள்...




கிழக்கில் வரட்சி தாண்டவமாடுகின்றது, வயல்கள் வறண்டு காணப்படுகின்றது , எங்கு பார்த்தாலும் நீர் பற்றாக்குறை . இது எப்படியெல்லாம் இருக்க, சில அதிசயங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றது . சில தினங்களிற்கு முன் தினசரியில் பார்த்த ஞாபகம் உயர்ந்த மேட்டு நிலத்தில் நீர் அருவியா ஓடுகிறதாம் (எங்கோ தம்பிலுவில் பக்கம் ). அதே போல இந்த ஆலயத்திலும் அதிசயங்கள் நடந்தவண்ணமே உள்ளது.




கோவிலின் முகப்பில் உள்ள கண்ணகி அம்மன் சிலையின் கண்களால் இரத்த கண்ணீர் ஓடியுள்ளதாம். இன்றும் இடது கண் வீங்கிய நிலையில் காணப்படுகின்றதாம்.


ஆலயத்தின் அருகில் உள்ள புளிய மரத்தில் இருந்து நீர் கசிந்து காணப்பட்டதாம்.


வருடத்தில் ஒரு முறை மட்டுமே திறக்கும் கோவில் உள்ளே, தினமும் சிலம்பு சத்தமும், உரல் இடிக்கும் சத்தமும் அடிக்கடி கேட்ட வண்ணமே உள்ளது . இந்த அதிசயத்தை காண பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் சாரி சாரியாக வந்த படி உள்ளனர்.



இது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா, ஊர் மக்களிடையே இன்னும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.


எல்லாம் மஹா சக்தியின் செயல்....





P.S: இந்த அதிசயத்தை பார்க்க / கேட்க கிடைக்காதவர்களிட்கு ஒரு கொசுறு நியூஸ், பல ஊர் இளவட்டங்களின் மொபைல் போனில் இந்த அதிசயத்தை பார்க்க / கேட்க முடியும்... " மஹா சக்தியின் மகிமையை கையடககத்தினுள் கொண்டு வந்த டெக்னாலஜி".... உலகம் எங்கேயோ போயிடுச்சு....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன