நகரில் எத்தனை காகங்கள்...? அக்பரின் கேள்வியும்...பிர்பலின் புத்திசாலித்தனம்..





பேரரசு அக்கபர் தன் அவையில் உள்ளோரிடம் புதிர்கள் மற்றும் விடுகதைகளை கேட்டு மடக்குவார்... எப்போதும் அவர் எப்போதும் நூதனமான கேள்விகளையே கேட்டு மற்றவர்களை மடக்குவார். அவரின் கேள்விகளிற்கு பதிலளிக்கவேண்டுமானால் நிறைய ஜோசிக்கவேண்டியிருக்கும்...

அதே போல் ஒருநாள் அக்பர் தன் அவையோரிடம் ஒரு கேள்வியை கேட்டார்... அவரின் கேள்வியால் அவையோர் வாயடைத்துப்போனார்கள். அவர் அப்படி என்னதான் கேட்டார்...விடயளிப்போரை தேடி அக்க்பரின் தலை அவை சுற்றி வந்தது...அவையோரோ விடை தெரியாமல் தலை குனிந்து இருந்தனர்...

அந்த நேரம் பார்த்து பீர்பால் அவையுள் நுழைந்தார்...பீர்பால் மன்னரைபற்றி நன்கு அறிந்தவர் அவருக்கு நிலைமை விளங்கி விட்டது... பீர்பால் அக்பரை பார்த்து கேட்டார்..மன்னா கேள்வி என்ன என்று நான் அறியலாம..நானும் கொஞ்சம் முயன்று பார்கிரேனே...

அக்பர் கேட்டார்..."இந்த நகரத்திலே எத்தனை காக்கைகள் உள்ளன?..."



கொஞ்சம் கூட தாமதிக்காமல் பீர்பால் சொன்னார்.."மகராஜா இந்த நகரத்திலே ஐம்பதாயிரத்தி ஐநூற்றி எண்பத்தி ஒன்பது காகங்கள் உள்ளன.."




அக்பர் கேட்டார்.."அதை எப்படி உன்னால் துல்லியமாக கணிக்க முடிந்தது..இது சரியான பதில்தான...?"

பீர்பால் சொன்னார்.."ஆம் மன்னா இது சரியான கணக்குதான்..வேண்டுமானால் உங்கள் ஆட்களை விட்டு எண்ணச்சொல்லுங்கள்... நான் சொன்ன கணக்கைவிட அதிக காகங்கள் இந்த நகரத்திலே காணப்பட்டால் அவை வேறு இடங்களில் இருந்து தமது உறவினரை பார்க்க வந்த விருந்தாளிக்காகங்களாக இருக்கும் அப்படி இல்லாமல் நான் சொன்ன கணக்கைவிட குறைவான காகங்கள் இருந்தால் எமது நகர காகங்கள் சில / பல தமது உறவினரை பார்க்க வேறு இடங்களிற்கு போயிருக்கலாம்...

மன்னர் அக்பர், பிர்பலின் இந்த புத்திசாலித்தனமான பதிலால் மிகவும் சந்தோசப்பட்டார்...


MORAL : A witty answer will serve its purpose.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Dear Anonymous...Thanx for Visiting, please be kind / dare enough to reveal yourself while making comments...good for both sides...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன