உடுராவணன் Microsoft ஐரோப்பிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக....

மைக்ரோசாப்ட் ஐரோப்பிய தலைமை நிறைவேற்று அதிகாரியை தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் தகுதியானவர்களை ஒரு walk in interview இற்கு அழைப்பு விடுத்தார்.... கிட்டத்தட்ட 5000 பேர் அந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர். அவர்களில் இலங்கை சேர்ந்த உடுரவணனும் அடக்கம்... வருகை தந்த அனைவரும் ஒரு பாரிய அரங்கத்தினுள் அமரவைக்கப்பட்டனர்.

நேர்முக தெரிவை நடத்த மைக்ரோசாப்ட் தலைமை நிறைவேற்று அதிகாரி பில்கேட்ஸ் அவர்களே நேராக களத்தில் இறங்க முடிவெடுத்தார். அரங்கத்தினுள் நுழைந்த பில்கேட்ஸ் தலை சுற்றிபோனார்... அவ்வளவு கூட்டம்.



முதலில் பில்கேட்ஸ் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி Java Programming மொழி இந்த பதவிக்கு மிக முக்கியமான ஒரு தேவை எனவே Java தெரியாத அன்பர்களை அரங்கை விட்டு வெளியேறுமாறு பணித்தார். கிட்டத்தட்ட 2000௦௦௦ பேர் அரங்கை விட்டு வெளியேறினார்கள். இதில் ஒரு முக்கியமான விடயம் எங்கள் உடுராவனனிட்கும் அந்த Programming மொழி தெரியாது இருப்பினும் அங்கு இருப்பதால் அவன் எதையும் இழக்கப்போவதில்லை இருந்துதான் பார்ப்போமே என்று நினைத்து தொடர்ந்து அங்கே இருக்க முடிவெடுத்தான்...

பில்கேட்ஸின் அடுத்த பணிப்பு...இங்கு மிச்சம் இருக்கும் வேட்பாளர்களில் 100க்கு மேற்பட்ட பணியாளர்களை முகாமை செய்வதில் அனுபவம் இல்லாதவர்களை வெளிச்செல்லக்கோரினார். அடுத்த 2000 பேர் அரங்கை விட்டு வெளியேறினர். இங்கும் எங்கள் உடுராவனனுக்கு பிரச்சனை இதுவரை யாரையும் முகாமை செய்வதில் அனுபவம் இல்லாத ஒரு கீழ்மட்ட நபர் எங்கள் உடுராவணன். எது எப்படியோ என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்ற மனநிலையில் தொடர்ந்து அங்கேயே இருக்க முடிவெடுத்தான்.

அடுத்து எஞ்சி இருப்பவர்களில் முகாமைத்துவ பட்டம் அற்றவர்களை வெளியேறும் படி பணித்தார் பில்கேட்ஸ். என்சியுள்ளவர்களில் 500 பேர் வரையில் அரங்கை விட்டு வெளியேறினர். எங்கள் உடுராவணன் 15 வயதிலேயே பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்ட ஒரு நபர்... எப்படியிருப்பினும் இருந்துதான் பார்ப்போமே என நினைத்து தொடர்ந்து அங்கேயே இருக்க முடிவு செய்தான் எங்கள் உடுரவணன்.

இறுதியாக பில்கேட்ஸ் சொன்னார் இங்கே மிச்சம் இருக்கும் போட்டியாளர்களில் Serbo-Croatian or Serbo-Croat மொழி தெரியாதவர்கள் தயவு செய்து வெளியே செல்லவும்... மிச்சம் இருந்தவர்களில் 498 பேர் அரங்கை விட்டு வெளியே சென்றனர். எஞ்சியதோ இருவர்.... அருண் அவனும் ஒரு இலங்கையன் தனக்குதானே சொல்லிக்கொண்டான்...எனக்கு Serbo-Croat ஒரு வார்த்தை கூட தெரியாது...எதற்கும் இருந்துதான் பார்ப்போமே...

நேர்முக தெரிவின் இறுதிக்கட்டம்...பில்கேட்ஸ் மேடையிலிருந்து இறங்கி எஞ்சியிருந்த இருவரிடமும் வந்து... வாழ்த்துக்கள் இங்கு வருகை தந்த அத்தனை பேரில் நான் எதிர்பார்க்கும் எல்லா திறமையும் உங்கள் இருவரிடம் மட்டுமே உள்ளது இருபினும் இந்த பதவிக்கு ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும்...எனவே நீங்கள் இருவரும் Serbo-Croat மொழியில் உரையாடுங்கள்... அதை கேட்டபின் உங்களில் யாரை தெரிவு செய்வது என்று நான் முடிவெடுப்பேன்...


கொஞ்ச நேரம் நிசப்தம்....


அதன் பின் நடந்த உரையாடலை எங்கள் உடுராவணன் மற்றும் அருனின் தாய்மொழியிலே தரவேண்டும்...

எந்தவித பதட்டமும் இல்லாமல் எங்கள் உடுராவணன் மற்ற வேட்பாளரை நோக்கி...Kohomada Machan ? / கொஹோமட மச்சான்? (எப்படி மச்சான்?)என்று சிங்களத்தில் வினவினான்...

இதை கேட்ட மற்ற வேட்பாளர் விடையளித்தான்... Ammatta Udu... Umbath Sinhalada ??...Me Yakata (Bill Gate) pissu machang ..... அம்மட்ட... உடு...உம்பத் சிங்களத? மே யகட்ட பிசு மச்சாங்... (அம்மா..சோறு... நீயும் சிங்களம...இந்தாளுக்கு பைத்தியம் மச்சான்) என சிங்களத்தில் சொன்னானே பாருங்கள்...


பஞ்சாப் சர்தார்ஜி = இலங்கை உடுராவணன்...(UDURAWANA)


1 comment:

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன