உடுரவணன் Colombo போய்ட்டாருங்கோ...மனைவிக்கோ உயிரு போய்ட்டுதுங்கோ....



உடுரவணன் அலுவலக விடயமாக தலைநகர் வந்தார்.. வந்து இறங்கியவுடன் தொலைபேசியில் தான் பத்திரமாக Colombo வந்த விடயத்தை மனைக்கு சொல்ல அழைத்தார். இனி நடந்தது உரையாடல் வடிவில்...



டிரிங் டிரிங் மறுமுனை தூக்கப்பட்டவுடன்...

உடுரவணன்: யார் பேசுறது...

(அழைப்பை எடுத்ததோ வீட்டு வேலைக்காரன்...)

வேலைக்காரன்: வீட்டு வேலைக்காரன் அய்யா...

உடுரவணன்: அம்மா எங்கே...?

வேலைக்காரன்: மாடியில் அய்யாவோட தூங்கிகிட்டிருக்காங்க அய்யா...

உடுராவணன்: என்ன...அய்யாவோடயா..? அட மடையா நான்தான்ட அம்மாவோட புருஷன்... இன்னைக்குத்தான் Colombo வந்தேன் அதுக்குள்ளய...?

வேலைக்காரன்: அய்யா நான் இப்ப என்ன செய்யட்டும்...?

உடுரவணன்: அலுமாரியை திறந்துபார் உள்ளே துப்பாக்கி ஓன்று இருக்கும் அதை எடுத்துக்கொண்டு போய் இருவரையும் சுட்டு விட்டு வந்து சொல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்...




கொஞ்ச நேர நிசப்த்தத்தின் பின் இரு வேட்டு சத்தங்கள் கேட்டது... அதன் பின்னர்...

வேலைக்காரன்: ஆம், சுட்டுவிட்டேன் அடுத்து என்ன செய்யட்டும்...

உடுராவணன்: வெரி குட்.. வீட்டின் பின்னுள்ள கதவைத்திறந்து இரண்டுபேரையும் பின்னாலுள்ள நீச்சல்தடாகத்துள் வீசு வேலை முடிந்தது..




வேலைக்காரன்: ஆனால் அய்யா இந்த வீட்டில் நீச்ச்ல்தடாகம் ஒன்றும் இல்லையே...

உடுராவணன்: என்ன...? நீச்சல்தடாகம் இல்லையா...???

வேலைக்காரன்: ஆம் அய்யா இங்கு அப்படி ஒன்றும் இல்லை...

உடுராவணன்: Sorry Wrong நம்பர்!!!!!!!!!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன