கீழே உள்ள படங்களை பார்க்கும் பொது உங்களுக்கு என்ன தோன்றுகிறது ?
சமுக போக்கு அல்லது சமுதாய நாட்டம்
வாழ்க்கை முறை
பிரயாணம்
போக்குவரத்து
மூன்று வேளை சாப்பாடு
சமுகத்தின் பார்வையில் ஒரு குழந்தை
மேலதிகாரி
விடுமுறை நாட்களின் வீதி நடமாட்டம்
கருத்துகளை பகிர்ந்து கொள்ளல்
வரிசையில் நிற்றல்
நேரத்துக்கு வரும் பண்பு
விருந்து வைபவத்தில்
மனோபாவமும் வானிலையும்
பொது இடங்களில் இசை...
பிரச்சனைகளை தீர்த்தல்
மேலைத்தேய கலாச்சாரம் - நீலம்
கீழைத்தேய கலாச்சாரம் - சிவப்பு
களவும் கற்றுமற ... தெரிந்ததை பகிர் காகம்போல ... உணவு, அறிவு &; எல்லாம் .... இருப்பாய் தமிழா நெருப்பாய்!!!! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்...
நிலையை உயர்த்து... நினைப்பை உயர்த்தாதே...!
1) நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.
2) அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் (LOOSE TALKS).
3) எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (DIPLOMACY), விட்டுக் கொடுங்கள்(COMPROMISE).
4) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (TOLERANCE).
5) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்(NARROW MINDEDNESS).
6) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (CARRYING TALES).
7) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (SUPERIORITY COMPLEX).
8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (OVER EXPECTATION).
9) எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். (RELATIVENESS)
10) கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள். (MERE BELIEVING)
11) உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (FLEXIBILITY).
12) அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (MIS-UNDERSTANDING).
14) மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (COURTESY).
15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்.
18) பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.
19) நிலையை உயர்த்து; நினைப்பை உயர்த்தாதே.
20) விட்டுக் கொடுப்பவன், கெட்டுப் போவதில்லை.
(நன்றி - நண்பன் ஹரூன்...)
நகரில் எத்தனை காகங்கள்...? அக்பரின் கேள்வியும்...பிர்பலின் புத்திசாலித்தனம்..
பேரரசு அக்கபர் தன் அவையில் உள்ளோரிடம் புதிர்கள் மற்றும் விடுகதைகளை கேட்டு மடக்குவார்... எப்போதும் அவர் எப்போதும் நூதனமான கேள்விகளையே கேட்டு மற்றவர்களை மடக்குவார். அவரின் கேள்விகளிற்கு பதிலளிக்கவேண்டுமானால் நிறைய ஜோசிக்கவேண்டியிருக்கும்...
அதே போல் ஒருநாள் அக்பர் தன் அவையோரிடம் ஒரு கேள்வியை கேட்டார்... அவரின் கேள்வியால் அவையோர் வாயடைத்துப்போனார்கள். அவர் அப்படி என்னதான் கேட்டார்...விடயளிப்போரை தேடி அக்க்பரின் தலை அவை சுற்றி வந்தது...அவையோரோ விடை தெரியாமல் தலை குனிந்து இருந்தனர்...
அந்த நேரம் பார்த்து பீர்பால் அவையுள் நுழைந்தார்...பீர்பால் மன்னரைபற்றி நன்கு அறிந்தவர் அவருக்கு நிலைமை விளங்கி விட்டது... பீர்பால் அக்பரை பார்த்து கேட்டார்..மன்னா கேள்வி என்ன என்று நான் அறியலாம..நானும் கொஞ்சம் முயன்று பார்கிரேனே...
அக்பர் கேட்டார்..."இந்த நகரத்திலே எத்தனை காக்கைகள் உள்ளன?..."
கொஞ்சம் கூட தாமதிக்காமல் பீர்பால் சொன்னார்.."மகராஜா இந்த நகரத்திலே ஐம்பதாயிரத்தி ஐநூற்றி எண்பத்தி ஒன்பது காகங்கள் உள்ளன.."
அக்பர் கேட்டார்.."அதை எப்படி உன்னால் துல்லியமாக கணிக்க முடிந்தது..இது சரியான பதில்தான...?"
பீர்பால் சொன்னார்.."ஆம் மன்னா இது சரியான கணக்குதான்..வேண்டுமானால் உங்கள் ஆட்களை விட்டு எண்ணச்சொல்லுங்கள்... நான் சொன்ன கணக்கைவிட அதிக காகங்கள் இந்த நகரத்திலே காணப்பட்டால் அவை வேறு இடங்களில் இருந்து தமது உறவினரை பார்க்க வந்த விருந்தாளிக்காகங்களாக இருக்கும் அப்படி இல்லாமல் நான் சொன்ன கணக்கைவிட குறைவான காகங்கள் இருந்தால் எமது நகர காகங்கள் சில / பல தமது உறவினரை பார்க்க வேறு இடங்களிற்கு போயிருக்கலாம்...
மன்னர் அக்பர், பிர்பலின் இந்த புத்திசாலித்தனமான பதிலால் மிகவும் சந்தோசப்பட்டார்...
MORAL : A witty answer will serve its purpose.
உடுரவணன் Colombo போய்ட்டாருங்கோ...மனைவிக்கோ உயிரு போய்ட்டுதுங்கோ....
உடுரவணன் அலுவலக விடயமாக தலைநகர் வந்தார்.. வந்து இறங்கியவுடன் தொலைபேசியில் தான் பத்திரமாக Colombo வந்த விடயத்தை மனைக்கு சொல்ல அழைத்தார். இனி நடந்தது உரையாடல் வடிவில்...
டிரிங் டிரிங் மறுமுனை தூக்கப்பட்டவுடன்...
உடுரவணன்: யார் பேசுறது...
(அழைப்பை எடுத்ததோ வீட்டு வேலைக்காரன்...)
வேலைக்காரன்: வீட்டு வேலைக்காரன் அய்யா...
உடுரவணன்: அம்மா எங்கே...?
வேலைக்காரன்: மாடியில் அய்யாவோட தூங்கிகிட்டிருக்காங்க அய்யா...
உடுராவணன்: என்ன...அய்யாவோடயா..? அட மடையா நான்தான்ட அம்மாவோட புருஷன்... இன்னைக்குத்தான் Colombo வந்தேன் அதுக்குள்ளய...?
வேலைக்காரன்: அய்யா நான் இப்ப என்ன செய்யட்டும்...?
உடுரவணன்: அலுமாரியை திறந்துபார் உள்ளே துப்பாக்கி ஓன்று இருக்கும் அதை எடுத்துக்கொண்டு போய் இருவரையும் சுட்டு விட்டு வந்து சொல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்...
கொஞ்ச நேர நிசப்த்தத்தின் பின் இரு வேட்டு சத்தங்கள் கேட்டது... அதன் பின்னர்...
வேலைக்காரன்: ஆம், சுட்டுவிட்டேன் அடுத்து என்ன செய்யட்டும்...
உடுராவணன்: வெரி குட்.. வீட்டின் பின்னுள்ள கதவைத்திறந்து இரண்டுபேரையும் பின்னாலுள்ள நீச்சல்தடாகத்துள் வீசு வேலை முடிந்தது..
வேலைக்காரன்: ஆனால் அய்யா இந்த வீட்டில் நீச்ச்ல்தடாகம் ஒன்றும் இல்லையே...
உடுராவணன்: என்ன...? நீச்சல்தடாகம் இல்லையா...???
வேலைக்காரன்: ஆம் அய்யா இங்கு அப்படி ஒன்றும் இல்லை...
உடுராவணன்: Sorry Wrong நம்பர்!!!!!!!!!
உடுராவணன் Microsoft ஐரோப்பிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக....
மைக்ரோசாப்ட் ஐரோப்பிய தலைமை நிறைவேற்று அதிகாரியை தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் தகுதியானவர்களை ஒரு walk in interview இற்கு அழைப்பு விடுத்தார்.... கிட்டத்தட்ட 5000 பேர் அந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர். அவர்களில் இலங்கை சேர்ந்த உடுரவணனும் அடக்கம்... வருகை தந்த அனைவரும் ஒரு பாரிய அரங்கத்தினுள் அமரவைக்கப்பட்டனர்.
நேர்முக தெரிவை நடத்த மைக்ரோசாப்ட் தலைமை நிறைவேற்று அதிகாரி பில்கேட்ஸ் அவர்களே நேராக களத்தில் இறங்க முடிவெடுத்தார். அரங்கத்தினுள் நுழைந்த பில்கேட்ஸ் தலை சுற்றிபோனார்... அவ்வளவு கூட்டம்.
முதலில் பில்கேட்ஸ் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி Java Programming மொழி இந்த பதவிக்கு மிக முக்கியமான ஒரு தேவை எனவே Java தெரியாத அன்பர்களை அரங்கை விட்டு வெளியேறுமாறு பணித்தார். கிட்டத்தட்ட 2000௦௦௦ பேர் அரங்கை விட்டு வெளியேறினார்கள். இதில் ஒரு முக்கியமான விடயம் எங்கள் உடுராவனனிட்கும் அந்த Programming மொழி தெரியாது இருப்பினும் அங்கு இருப்பதால் அவன் எதையும் இழக்கப்போவதில்லை இருந்துதான் பார்ப்போமே என்று நினைத்து தொடர்ந்து அங்கே இருக்க முடிவெடுத்தான்...
பில்கேட்ஸின் அடுத்த பணிப்பு...இங்கு மிச்சம் இருக்கும் வேட்பாளர்களில் 100க்கு மேற்பட்ட பணியாளர்களை முகாமை செய்வதில் அனுபவம் இல்லாதவர்களை வெளிச்செல்லக்கோரினார். அடுத்த 2000 பேர் அரங்கை விட்டு வெளியேறினர். இங்கும் எங்கள் உடுராவனனுக்கு பிரச்சனை இதுவரை யாரையும் முகாமை செய்வதில் அனுபவம் இல்லாத ஒரு கீழ்மட்ட நபர் எங்கள் உடுராவணன். எது எப்படியோ என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்ற மனநிலையில் தொடர்ந்து அங்கேயே இருக்க முடிவெடுத்தான்.
அடுத்து எஞ்சி இருப்பவர்களில் முகாமைத்துவ பட்டம் அற்றவர்களை வெளியேறும் படி பணித்தார் பில்கேட்ஸ். என்சியுள்ளவர்களில் 500 பேர் வரையில் அரங்கை விட்டு வெளியேறினர். எங்கள் உடுராவணன் 15 வயதிலேயே பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்ட ஒரு நபர்... எப்படியிருப்பினும் இருந்துதான் பார்ப்போமே என நினைத்து தொடர்ந்து அங்கேயே இருக்க முடிவு செய்தான் எங்கள் உடுரவணன்.
இறுதியாக பில்கேட்ஸ் சொன்னார் இங்கே மிச்சம் இருக்கும் போட்டியாளர்களில் Serbo-Croatian or Serbo-Croat மொழி தெரியாதவர்கள் தயவு செய்து வெளியே செல்லவும்... மிச்சம் இருந்தவர்களில் 498 பேர் அரங்கை விட்டு வெளியே சென்றனர். எஞ்சியதோ இருவர்.... அருண் அவனும் ஒரு இலங்கையன் தனக்குதானே சொல்லிக்கொண்டான்...எனக்கு Serbo-Croat ஒரு வார்த்தை கூட தெரியாது...எதற்கும் இருந்துதான் பார்ப்போமே...
நேர்முக தெரிவின் இறுதிக்கட்டம்...பில்கேட்ஸ் மேடையிலிருந்து இறங்கி எஞ்சியிருந்த இருவரிடமும் வந்து... வாழ்த்துக்கள் இங்கு வருகை தந்த அத்தனை பேரில் நான் எதிர்பார்க்கும் எல்லா திறமையும் உங்கள் இருவரிடம் மட்டுமே உள்ளது இருபினும் இந்த பதவிக்கு ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும்...எனவே நீங்கள் இருவரும் Serbo-Croat மொழியில் உரையாடுங்கள்... அதை கேட்டபின் உங்களில் யாரை தெரிவு செய்வது என்று நான் முடிவெடுப்பேன்...
கொஞ்ச நேரம் நிசப்தம்....
அதன் பின் நடந்த உரையாடலை எங்கள் உடுராவணன் மற்றும் அருனின் தாய்மொழியிலே தரவேண்டும்...
எந்தவித பதட்டமும் இல்லாமல் எங்கள் உடுராவணன் மற்ற வேட்பாளரை நோக்கி...Kohomada Machan ? / கொஹோமட மச்சான்? (எப்படி மச்சான்?)என்று சிங்களத்தில் வினவினான்...
இதை கேட்ட மற்ற வேட்பாளர் விடையளித்தான்... Ammatta Udu... Umbath Sinhalada ??...Me Yakata (Bill Gate) pissu machang ..... அம்மட்ட... உடு...உம்பத் சிங்களத? மே யகட்ட பிசு மச்சாங்... (அம்மா..சோறு... நீயும் சிங்களம...இந்தாளுக்கு பைத்தியம் மச்சான்) என சிங்களத்தில் சொன்னானே பாருங்கள்...
பஞ்சாப் சர்தார்ஜி = இலங்கை உடுராவணன்...(UDURAWANA)

சர்தார்ஜி ஜோக்ஸ்!..
சர்தார்ஜியின்மருத்துவம்...
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!
சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே...!!
சர்தார்ஜியும் Volks
Wagon காரும்...
ஒரு சர்தார் Wolks Vagon கார் ஒன்றை வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி. அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..
கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!
விமானப்பயணம் செய்யும் சர்தார்...
சர்தார் புனேயிலிருந்து சண்டிகர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார். மூன்று சீட் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அது ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பெண்மணி தன்னுடைய சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு கேட்கிறார்.
சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
பெண்மணி : (பணிப்பெண்ணிடம்) எனக்கு என் சீட்டை ஒதுக்கிக் கொடுங்க. இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.
பணிப்பெண் : சார் தயவுசெய்து இவுங்களுக்கு அந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல உட்காருங்க.
சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
விமான துணை கேப்டன் : சார் தயவுசெஞ்சி சீட்ட விட்டுக்கொடுங்க சார். கெஞ்சிக் கேக்கிறேன் சார்.
சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
கேப்டன் வருகிறார். நடந்த விபரங்களைக் கேட்கிறார். சர்தார்ஜியின் காதில் மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன சர்தார் தன்னுடைய சீட்டுக்கு மாறிக்கொள்கிறார்.
ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்ன சொன்னீர்கள் எனக் கேட்க, அவர் பதிலளிக்கிறார். "ஒன்னுமில்லை ஜெண்டில்மென்… நடுவுல இருக்கற சீட் மட்டும்தான் சண்டிகர் போகும். மற்ற சீட்கள் எல்லாம் குஜராத் போகும்னு சொன்னேன். அவ்வளவுதான்."
நண்பரை பார்க்க சென்ற சர்தார்...
நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர் சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு. அதனாலே தங்கிட்டு காலேல போ..
சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே திரும்பினார்..
நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'
சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான் என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!
மருமகன் சர்தார்......
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப் பரிசு.."
ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".
மூன்றாவது மருமகனோ oru சர்தார் அவருக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..
மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!
Reference : அங்கேயும்... இங்கேயுமாக... நெட்டில் சுட்டது..
இதை விட ஒரு அழகிய சிரிப்பை எங்காவது கண்டீர்களா...
இந்திய ரூபாய்க்கு புதிய குறியீடு
அமெரி்க்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளின் நாணயங்களின் வரிசையில், இந்திய ரூபாயின் குறியீடும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறும் வகையில் இந்திய ரூபாய்க்கு புதிய குறியீடு ஓன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. புதிய குறியீட்டை வடிவமைத்திருப்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், பிரபல ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மாணவருமான டி. உதயகுமார்
´´இந்தப் புதிய குறியீடு, இந்திய ரூபாயை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு மொழிகளில் ஒரே மாதிரியாகத் தெரியப்படுத்துவதற்கு வழிவகுக்கும். மேலும், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தோனேஷியா போன்ற பல நாடுகள் ரூபாய் அல்லது ரூபயா என்ற பெயரில் தங்கள் நாணயங்களை அழைக்கும் நிலையில், புதிய குறியீடு இந்திய ரூபாயின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்கும் உதவும்’’ புதிய குறியீடு, ரூபாய் நோட்டு அல்லது நாணயங்களில் அச்சிடப்படும், அடுத்த 6 மாதங்களில் இந்தியாவிலும், 18 முதல் 24 மாதங்களில் சர்வதேச அளவிலும் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடும்.
புதிய குறியீட்டை அச்சில் வெளியிடவும், கணினிப் பயன்பாட்டுக்கு உதவும் வகையில், கணினியின் விசைப்பலகையிலும், கணினி மென்பொருள்களிலும் இடம் பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்தப் புதிய குறியீட்டை வடிவமைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. உதயகுமார், பல்வேறு போட்டியாளர்களைத் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறார். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போட்டியில், கடைசியாக ஐந்து குறியீடுகளை நிபுணர் குழு தேர்வு செய்தது. அதில் இறுதியாக உதயகுமாரின் குறியீடு புதிய குறியீடாகத் தேர்வு பெற்றது. இதற்காக உதயகுமாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?
அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.
சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா…
கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.
கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச்’ வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.
இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது. எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களுக்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளிதில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச்’ வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள்!
படிப்பதா, வேலைக்கு போவதா? மூளை ஸ்கேனில் தெரிந்துவிடும்...
எது படிப்பது? என்ன பிசினஸ் செய்வது? எந்த கம்பெனியில் வேலைக்கு போவது என முடிவு செய்ய முடியாமல் திணறுகிறீர்களா? உடனே டாக்டரிடம் மூளையை ஸ்கேன் செய்யுங்கள். எதில் நீங்கள் கில்லாடிகள் என்று தெரிந்துவிடும்.
மூளை செயல்பாடுகள் குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை பேராசிரியர் ரிச்சர்ட் ஹயர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. 6 ஆயிரம் பேரின் மூளை அமைப்பு, அவர்களது அறிவாற்றல் ஆகியவை குறித்து அலசப்பட்டது.
இதில் தெரியவந்த தகவல் குறித்து ரிச்சர்ட் கூறியதாவது: மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் இருக்கும் ‘பிராட்மேன் ஏரியா’ என்ற இடத்தை பொருத்துதான் ஒருவரது அறிவாற்றல் அமைகிறது. எதையும் விரைவாக முடிவெடுக்கும் தன்மை, சட்டென புரிந்துகொள்ளுதல், நினைவாற்றல் ஆகியவை இப்பகுதியின் அடிப்படையிலேயே அமைகிறது. இந்த இடத்தில் வெள்ளை நிற, சாம்பல் நிறப் பகுதிகள் எந்தளவு உள்ளன, எந்த ஏரியாவில் அமைந்துள்ளன ஆகியவற்றுக்கும் நமது அறிவாற்றல் மற்றும் நாம் திறம்பட செயல்படும் துறைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளன.
6 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இது தெளிவாக தெரிகிறது. ஸ்கேன் செய்தால் இதுபற்றி தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு ரிச்சர்ட் கூறினார். ‘‘வெளிநாடு போகும் யோகம் உண்டா? கல்வி, தொழிலில் வளர்ச்சி பெற முடியுமா?
இங்கு மூளை சாஸ்திரம் பார்க்கப்படும்’’ என்று டாக்டர்கள் போர்டு போட்டுக் கொண்டு உட்காரலாம் போலிருக்கிறது.....
நன்றி : http://www.dinakaran.com
Super Singer Junior 02 - விஜய் TV
2009இல் ஆரம்பித்த இந்த Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர் 02 பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 பட்டத்தை அல்கா அஜித் தட்டிச் சென்றார். விஜய் டி.வி.,யில் ஒளிப்பராகி வந்த குட்டீசுக்கான பாட்டு போட்டி, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 இறுதி போட்டி 17 /06 /2010அன்று நடந்தது. இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருந்த அல்கா அஜித், ஷ்ரவன், ரோஷன், நித்யஸ்ரீ, ஸ்ரீகாந்த் ஆகியோர் அதிரடியாக களமிறங்கினர். சித்ரா, மால்குடி சுபா, மனோ, உன்னி மேனன், ஸ்ரீநிவாஸ், சுசித்ரா போன்ற பின்னணி பாடகர்களும், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், ஜேம்ஸ் வசந்தன்,. தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியாளரும் 2 பாடல்களை பாடினர். எஸ்.எம்.எஸ்., மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். 3.5 லட்சம் எஸ்.எம்.எஸ்., ஓட்டுகள் பதிவாகின. அல்கா அஜித் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றார். அவர் இறுதிப் போட்டியில் சிங்கார வேலனே வா வா, முன்பே வா அன்பே வா என்ற பாடல்களையும் பாடி அரங்கமே அதிர்ந்த வரவேற்பை பெற்றார். அல்கா 7 வயது முதலே பாட்டு பாடி வருகிறார். அவருக்கு 11 மொழிகளில் பாடல்களை பாடும் திறன் இருக்கிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளில் பாடியுள்ளார். யுனஸ்கோ தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
அல்க அஜித்திற்கு Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர் 02 என்ற பட்டம் மட்டுமல்லாது 25 லட்சம் ரூபா மதிப்புள்ள அழகிய வீடொன்றும் பரிசாக வழங்கப்பட்டது. ஷரவன் போட்டியில் இரண்டாவது இடத்தை தட்டிக்கொண்டார், அவரிற்கு பரிசாக வழங்கப்பட்டதோ "Stylish Car". ஆறுதல் பரிசுகளாக நித்யஸ்ரீ மற்றும் ரோஷனிட்கு தலா 02இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியின் பிரபல போட்டியாளராக ஸ்ரீகாந்த் தெரிவுசெய்யப்பட்டு 03 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. விசேட பரிசுகளாக பிரியங்கா மற்றும் ஸ்ரீநிஷாவிற்கு தலா 01 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.....
தொடரும் சந்தேகம்... நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரோ மொத்த வாக்குகளின் தொகை 3 .6 இலட்சம் (Wild Card சுற்றின் மொத்த வாக்குகளை விட குறைந்த தொகை ) என அறிவித்தவேளை இவ்விழாவிற்கு சிறப்பு அதிதியாக வருகை தந்து இறுதி முடிவுகளை தந்த கார்த்திக்கோ மொத்த வாக்குகளின் தொகை 13 இலட்சம் என அறிவித்தார்...
ஒவ்வொரு போட்டியாளருக்குமான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படாதது ஏன்? ஆறுதல் பரிசு வழங்கப்பட்டதன் நோக்கம் என்ன...என்னைபொறுத்தவரை ஆறுதல் பரிசு Wild Card சுற்றில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களிட்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்...
The confusion remains!
உங்கள் செல்லிடப்பேசி ஒரு நோய் காவியா...?
உங்களிடம் செல்லிடப்பெசியோன்று உள்ளதா...? (அனாவசியமான கேள்வி...இதைவிட உங்களிடம் ஒரு செல்லிடப்பேசி இல்லையெனில் இந்த பதிவை புறக்கணிக்கவும் என்று எழுதியிருந்தால் நன்றாக இருக்கும்...) கீழ் உள்ள இணைப்பை சொடுக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு உண்மையாக பதிலளியுங்கள்...
உங்கள் செல்லிடப்பேசி ஒரு நோய் காவியா இல்லையா என அப்புறம் முடிவெடுக்கலாம்.
என்னுடைய செல்லிடப்பேசியில் இருக்கும் கிருமிகளின் எண்ணிக்கை... கையில் எடுக்கவே அருவருப்பாக உள்ளது..உங்களது எப்படி?
Created by Oatmeal
ஆதாரம் : http://theoatmeal.com/quiz/phone_germs
நன்றி...
எமது வாழ்நாளில் செய்யவேண்டிய 20 விடயங்கள்...
எமது வாழ் நாளில் நாம் அனைவரும் கட்டாயம் பூர்த்தி செய்யவேண்டிய 20 விடயங்கள்...பின்வருமாறு...
எல்லா விடயங்களும் இதே ஒழுங்கில் இருக்கவேண்டுமென்பது கட்டாயம் அல்ல எது எப்படியோ..எல்லாம் நடந்தால் சரி...
- சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்குங்கள்
- சொந்த வீடொன்றை கட்டிக்கொள்ளுங்கள்
- உங்கள் அன்பிட்குரியவரை தேடிக்கொள்ளுங்கள்
- குழந்தை ஒன்றை பெர்த்ருக்கொல்லுங்கள்
- உலகை அறிந்துகொள்ளுங்கள்
- கடல் பிரயாணம் அல்லது மலை ஏற்றம் செய்யுங்கள்
- நீங்கள் கற்பனை செய்த செயலை செய்து முடியுங்கள்
- செல்வந்தர் ஆகுங்கள்
- உங்கள் திறமையை கண்டறியுங்கள்
- உங்களின் தொழிலில் சிறப்பு தேர்ச்சியாடையுங்கள்
- நீங்கள் கற்பனை செய்த இடத்தில் வாழுங்கள்
- மற்றவர்களை மன்னியுங்கள்
- உங்கள் தனித்தன்மையை வளருங்கள்
- மற்றவர்களிற்கு உதவுங்கள்
- ஆரோக்கியமாக இருங்கள்
- சமுகத்திற்கு / பூமிக்கு நல்லது செய்யுங்கள்
- யாருடனாவது நண்பராகுங்கள்
- உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்
- உங்களை நீங்களே அறிந்து / விளங்கிக் கொள்ளுங்கள்
- எல்லாவற்றுக்கும் மேலாக சந்தோசமாக இருங்கள்...
எல்லா விடயங்களும் இதே ஒழுங்கில் இருக்கவேண்டுமென்பது கட்டாயம் அல்ல எது எப்படியோ..எல்லாம் நடந்தால் சரி...
எழுத்துக்கள் முக்கியமா...?
வழமையாக எம்மவர் கூறுவதுண்டு மருத்துவர்கள் எழுதுவதை படிக்க முடிவதில்லை என்று... ஏனெனில் எழுத்துக்கள் புரிவதில்லை அவர்களின் கையெழுத்து கிறுக்கலாக உள்ளதென பல முறைப்பாடுகள்... கீழே உள்ளதை உங்கள்ளல் படிக்க முடிகிறதா...ஆம் எனில் நீங்களும் விசேட பிறவிதான்...
if yuo can raed tihs, you hvae a sgtrane mnid, too. Can you raed tihs? Olny 55 plepoe out of 100 can.
i cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Azanmig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt! if you can raed tihs you hvae a sgtrane mnid.
உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம். 100 குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!

செல்லிடப்பேசிகளும் விமான விபத்துகளும்...
அன்பார்ந்த விமான பிரயாணிகளே...
விமானத்தில் உங்களது செல்லிடப்பேசிகளின் பாவனையை தவிருங்கள். உங்கள் செல்லிடப்பேசியில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சானது, விமானத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பில் இடையுறு விளைவிக்கலாம்...இந்த இடையூறு, விபத்தில் முடிவுறக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்... உங்கள் உயிர் உங்கள் கையில்....கீழே காணப்படும் படத்தை பெரிப்பித்து படியுங்கள்...
முக்கிய குறிப்பு: செல்லிடப்பேசி பாவனையை வைத்தியசாலை விசேடமாக சத்திரசிகிச்சை செய்யும் இடங்களிலும், கதிரியக்க தாக்கம் உள்ள இடங்களில் தவிர்ப்பது நல்லது...
Subscribe to:
Posts (Atom)