பிரச்சனைகளை தீர்ப்பது எவ்வாறு...ஒரு சின்ன ஆராய்ச்சி...

இலகுவாக பிரச்சனைகளை தீர்க்க ஏழு வழிமுறைகள்....

1. பிரச்சனையை அடையாளம் காணுதல் : மிக முக்கியமான படிமுறை...என்ன பிரச்சனை, எங்கு பிரச்சனை என்று தெளிவாக தெரியாவிடின் எவ்வாறு பிரச்சனையை தீர்ப்பது.


2. அனைவரினதும் பங்களிப்பு: கலந்துரையாடலில் வெறுமனே தீர்மானம் எடுப்பவர்கள் மட்டும் இல்லாமல் பிரச்சனையுடன் தொடர்பு பட்டவர்கள் அல்லது பாதிக்கப்படக்கூடியவர்களையும் இணைத்தல்.

3. அனைவரினதும் இலகு பங்களிப்பிற்கான சூழலை உருவாக்குதல்: அனைவரையும், விசேடமாக கலகலப்பாக பேசாதவர்களையும் கலந்துகொள்ள உக்கப்படுத்துதல், கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் இடமளித்தல். Brain Stroming முறை மூலம் அனைவரினதும் பங்களிப்புக்கு வழி கோலால், இவ்வாறான செயல்பாடு மூலம் அனைவரினதும் பங்களிப்பினை ஊக்கப்படுத்த முடியும், கருத்துக்கள் அனைத்தும் ஆரம்பத்திலேயே ஆராயப்படவேண்டியதில்லை.

4. நடைமுறைக்கு சாத்தியமான ஆலோசனைகளை குழுவாக தெரிவு செய்தல்: இது ஒரு முக்கியமான செயல்பாடாகும், அந்தந்த நிறுவனத்திற்கோ அல்லது குடும்பத்திற்கு மட்டுமே எது எப்படி வேலை செய்யும் என தெரியும். நடைமுறைபடுத்தும் விடயமானது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க கூடியதாக அமைதல் அவசியம்.

5. இறுதி முடிவு: கை வசம் உள்ள மாற்றுவழிகளில் மிகப்பொருத்தமான ஒன்றினை தெரிவு செய்தல். யார் என்ன செய்வது , எப்படி செய்வது, யார் பொறுப்பினை ஏற்பது எவ்வாறு முகாமைத்துவம் செய்வது போன்ற விடயங்களை தெளிவு படுத்திய பின் திட்டத்தை அமுல் படுத்துதல்.

6. வளர்ச்சியை / அபிவிருத்தியை கண்காணித்தல்

7. வெற்றியினை கொண்டாடுதல்....

வழிபாட்டில் உங்களிற்கு நம்பிக்கை உண்டா....? வாழ்வின் கடினமான சூழ்நிலைகளில் வழிபட்ட அனுபவம் உண்டா....?

எது எப்படியோ படிமுறையின் ஆரம்பத்திலேயே நன்றாக வளிபட்டுக்கொள்வது சாலச்சிறந்தது...

அப்படியும் இல்லையெனில்... பிரச்சனைகளை தீர்க்கும் படிமுறையில் கடினமான சூல்நிலைகளிலாவது வழிபடுங்கள்....

Happy Problem Solving .....

நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... Time Waits For None ...


ஒரு சகோதரியின் அருமையை அறிய வேண்டுமா...? சகோதரி யாரும் இல்லாதவனிடம் கேட்டுப்பாருங்கள் ...

பத்து வருடங்களின் பெறுமதி தெரிய வேண்டுமா...? புதிதாக விவாகரத்து ஆனா தம்பதிகளிடம் கேட்டுப்பாருங்கள்...

ஒரு வருடத்தின் அருமையை உணர வேண்டுமா...? இறுதி சோதனையை தவறவிட்ட ஒரு மாணவனிடம் கேட்டுப்பாருங்கள்...

ஒன்பது மாதங்களின் பெறுமதியை உணர... சற்று முன் குழந்தையை பெற்றெடுத்த தாயிடம் கேட்டுப்பாருங்கள்...

ஒரு மாதத்தின் பெறுமதியை உணர வேண்டுமா...? உரிய காலத்திற்கு முன் குழந்தையை பெற்றெடுத்த தாயிடம் கேட்டுப்பாருங்கள்...

ஒரு கிழமையின் பெறுமதியை தெரிந்துகொள்ள... வாராந்த பத்திரிகை ஒன்றின் ஆசிரியரை கேட்டுப்பாருங்கள்...

ஒரு மணித்தியாலத்தின் அருமையை அறிய... பார்க்கத்துடிக்கும் காதலர்களை கேட்டுப்பாருங்கள்...

ஒரு நிமிடத்தின் அருமையை அறிய... பஸ்ஸையோ, புகையிரதத்தை அல்லது விமானத்தை தவறவிட்ட ஒரு பிரயாணியிடம் கேளுங்கள்...


ஒரு வினாடியின் பெறுமதியை தெரிந்துகொள்ள... பாரிய விபத்து ஒன்றிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய ஒருவரை கேட்டுப்பாருங்கள்...

ஒரு நொடியின் அருமையை தெரிய... ஒலிம்பிக் ஓட்டப்போடியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற ஒரு வீரனை கேட்டுப்பாருங்கள்...

நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... Time Waits For None ...


உங்களின் ஒவ்வொரு காணப்பொழுதையும் பெறுமதியாகப்பாருங்கள்...


உங்களிற்கு பிடித்தவர்களுடன் பகிரும்போது ஒவ்வொரு காணப்பொழுதும் பன்மடங்கு பெறுமதியாக படும் உங்களிற்கு...

இராமாயணமும் .... முகாமைத்துவமும் ... PART II

தற்கால முகாமைத்துவத்தில் SWOT (strength, weakness, opportunities and threats) ஆய்வு மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது.

இராமாயணத்தில் ஹனுமன்தான் இலங்காபுரிக்கு செல்லவேண்டும் என முடிவு செய்தது நல்ல ஒரு முகாமையாளனின் பண்பினை எடுத்துக்கட்டுகிறது. நல்ல ஒரு முகாமையாளன் ஆனவன் தன் கீழ் பணிபுரியும் ஆட்களின் ஒளிந்திருக்கும் திறமைகளையும், நல்ல பண்புகளையும் வெளிக்கொண்டுவரும் வகையில் செயல்படவேண்டும்.



இராமாயணத்தில் அறிய வேண்டிய இன்னுமொரு நல்ல படிப்பினை நல்ல மற்றும் கெட்ட முகாமையாளருக்குரிய பண்புகளாகும்.



பல்வேறுபட்ட இயல்புகளை கொண்ட மனித வளங்களை சரியாக ஒன்றிணைப்பதன் மூலம் குறிப்பிட்ட இலக்கையோ அல்லது நோக்கத்தையோ அடையும் நோக்கில் செய்யட்படுபவனே நல்ல ஒரு முகாமயாளன் ஆகமுடியும்.



இந்த வகையில் இராமாயணத்தில் சுக்கிரீவன் ராமனின் துணையுடன் தன்னை விட பல மடங்கு ஆற்றல் கொண்ட தன சகோதரனிடமிருந்து ராட்சியத்தை கைப்பற்றியது நல்ல ஒரு முகாமையாளனின் பண்பினை வெளிப்படுத்துகின்றது. குறிப்பிட்ட நோக்கத்தினை அடையும் நோக்கில் தந்திரோபாய உறவுகளை (strategic alliance ) வளர்த்துக்கொள்வது நல்ல முகாமையாளனின் ஒரு பண்பு, அது சுக்க்ரீவனிடம் காணப்படுகின்றது.



சுக்ரீவன் தன்னிடமிருந்த முகாமைத்துவ ஆற்றலை பயப்படுத்தி அங்கதனையும் தனது நோக்கத்தினை அடையும் நோக்கில் செயல்பட்டது நல்ல முகாமையாளனின் பண்பினை காடுகின்றது.

பகைவர்களை வெல்லவல்ல தோள் வலிமையையும், குற்றமற்ற தூய்மை நிலையையும் கொண்ட அங்கதான் தன்னிடம் அடைக்கலப்படுத்தப்பட்ட பின் இராமன் தன் உடைவாளை அளித்து ஏற்றுக் கொண்டான். இத்தகைய அடைக்கலச் சிறப்பால் இராமனது உடைவாளை ஏந்தும் சிறப்புப் பெற்றவன் அங்கதன் ஒருவனே - this is called Strategic Alliance


மீண்டும் பகுதி III இல் சந்திப்போம்...

இராமாயணமும் .... முகாமைத்துவமும் ... PART I

முகாமைத்துவம் என்றல் என்ன....???

எளிய முறையில் முகாமைத்துவத்தை கூறுவதாயின்... ஒரு நிறுவனத்தினதோ... அல்லது தனிப்பட்ட ஒருவரினது குறிப்பிட்ட இலக்கை அடையும் நோக்கில் மனித வலுவையும் ஏனைய காரணிகளையும் ஒன்றிணைத்து செயல்படுவதே முகாமைத்துவம் ஆகும்.

இன்னும் எளிய முறையில் சொல்வதேயானால் ஒரு இலக்கை அடையும் நோக்கில் செயல்படுதல் முகாமைத்துவம் ஆகும்.

பரந்தளவில் முகாமைத்துவத்தை நோக்கும் போது முகாமைத்துவமானது பின் வரும் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக காணப்படும்.


  1. திட்டமிடல் - Planning
  2. ஒழுங்கமைத்தல் - Organizing / Coordination
  3. வழிநடத்தல் - Leading
  4. கட்டுப்படுத்தல் - Controling

என நான்கு படிமுறைகளை / செயற்பாடுகளை கொண்டதாக அமையும் .

முகாமைத்துவ எண்ணக்கருக்களையும், அடிப்படி கோட்பாடுகளையும் விளக்க பல நூற்றுக்கணக்கான புத்தகங்களும், ஆக்கங்களும், வெளியீடுகளும், ஆராய்ச்சிகளும் காணப்படுகின்றன இவை அனைத்தும் முகமைதுவத்தில் காணப்படும் கோட்பாடுகளையும், எண்ணக்கருக்களையும் விளங்கப்படுதுவதுடன் அவற்றை நாளந்த செயட்படுகளில் பயன்படுத்துவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகளையும் விளக்குகின்றன.

இவை அனைத்தும் முகாமைத்துவத்தை ஒரு விஞ்ஞானமாக மட்டும் பார்க்காமல் அதை ஒரு கலையாகவே கருதுகின்றன .

இந்த முகாமைதுவக்கொள்கைகளை பயன்படுத்தி எவ்வாறு ஒரு நிறுவனத்தை கட்டி எழுப்புவது என பல ஆராய்ச்சி கட்டுரைகளிலும், பல சமகால சம்பவங்களை மேற்கோள் காட்டியும், உண்மை சம்பவங்கள், அனுபவங்களையும் மேற்கோள் காட்டி சொல்லப்படுகின்றது.

தற்கால மேற்குலக முகாமைத்துவ குருக்களின் தோன்றுதலுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இவ்வாறான முகாமைத்துவ கோட்பாடுகளின் நடைமுறைகளை எம்மவர்கள் மிக அழகாக விளக்கி சொல்லும் வகையில் பல இதிகாசங்களை புனைந்துள்ளனர். பழம்பெரும் எழுத்தாளர்களான வால்மீகி, துளசிதாஸ் போன்றோர் தமது இந்து இதிகாசங்கள் மூலம் இந்த முகாமைத்துவ கோட்பாடுகளை அழகாக விளக்கியுள்ளனர்.

எமது பலம் பெரும் இதிகாசங்களை படிப்பதன் மூலம் இந்த முகாமைத்துவ கோட்பாடுகள் அதில் எவ்வாறு விளக்கப்படுள்ளன என விரிவாக அறிந்துகொள்ள முடியும். இந்த இதிகாசங்களின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் எங்களுக்கு ஒவ்வொரு புதிய பாடங்களை புகட்டுவதோடு, எவ்வாறு முகாமைத்துவ கொள்கைகள் சூட்சுமமாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அழகாக விளக்கி கூறுகின்றன.

இரமாயனதிலிருந்து சில உதாரணங்கள்...

ஹனுமான் இலங்காபுரிக்கு செல்லும் பகுதியில் வால்மீகி தனது முகாமைத்துவ பாண்டித்தியத்தை அழகாக காடியுள்ளார்.

ஹனுமான் இலங்காபுரிக்கு செல்வதன் முக்கிய நோக்கம்
இலங்காபுரியில் சீதாதேவியை எங்கே சிறை வைத்துள்ளார்கள் என்று கண்டறிய வேண்டும் இராமபிரானின் செய்தியை சீதபிராட்டியிடம் சேர்க்கவேண்டும்

சீதாபிராட்டி இலங்காபுரியில் சிறை வைக்கப்பட்ட விடயம் ஊர்ஜிதப்படுத்தபட்டபின் ஹனுமான்

இலங்காபுரி செல்ல பணிக்கப்படுகின்றார். இதன் மூலம் ஹனுமானின் உண்மயான திறமை, பலம் வெளிக்காட்டப்படுகின்றது. எதிரியின் பாசறையினுள் செல்லும் தைரியமும் , பலமும் ஹனுமனுக்கே உள்ளது என்ற திறமையை அடையாளம் கண்டு அந்த பணியினை அவருக்கு ஒதுக்குகின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்ப்டட்ட பின் இலங்காபுரி வந்த ஹனுமான் முதலில் செய்த வேலை இலங்காபுரியின் நிலைமையை முற்றாக அலசி ஆராய்ந்தது. (Situation Analysis)

ஹனுமான் சகல சந்தர்ப்பங்களிலும் ஒரு சிறந்த முகாமையாளரகவே செயற்பட்டார்.

எதிரியின் பாசறையில் காணப்படும் பலம் (Strength), பலவீனம் (Weakness) என்பவற்றை ஆராய்ந்ததோடு. இலங்காபுரியில் காணப்படும் சாதக (Opportunities), பாதக (Threats) நிலைமைகளையும் ஆராய்ந்து செயற்பட்டார். (SWOT Analysis).

  1. இதுவே முகாமைத்துவத்தின் முக்கிய பண்புகளாக காணப்படுகின்றன;
  2. அடையவேண்டிய இலக்கை அடையாளம் கானல்...
  3. மனதளவில் தயார் நிலைக்கு உள்ளாதல்...
  4. சரியான திட்டமிடல்...
  5. எதிரியின் பலம், பலவீனத்தையும், தங்களின் சாதக, பாதகங்களையும் இனம்காணுதல்....
  6. செயற்பாட்டில் இறங்குதல்...

அப்புறம் என்ன வெற்றி உங்கள் பக்கம் தான்...

பகுதி II இல் மீண்டும் சிந்திப்போம் .......

எப்படி குழந்தை பிறக்கும் ????

இரு திருமணமான பெண்கள் பேசியதை ஒட்டுகேட்ட போது ....... மாட்டிய சில தகவல்கள்.....

முதலாமவள் :"ஏண்டி குழந்தை பிறக்கவில்லையே என்று டாக்டரிடம் போனியே என்னாச்சு?

இரண்டாமவள் :"நிறைய மருந்துகள் தந்தார்-ஆனால் பலனளிப்பதாகஇல்லை"

முதலாமவள் :"அப்படியானால் உனது கணவர் என்ன சொல்கிறார்"

இரண்டாமவள் :"டாக்டரை மாற்று என்கிறார்"

முதலாமவள் :"ஐய்யோ.. அப்ப டாக்டர் என்ன சொன்னார்?"

இரண்டாமவள் :"டாக்டர் புருசனை மாற்று என்கிறார்..நான் என்ன செய்ய???

சயனைடுக்கே (Cyanide) ஒரு prescription .....

ஒரு மாலை வேளை... நகரின் மத்தியில் உள்ள ஒரு பிரபலமான மருந்தகம்... கொஞ்சம் பர பரப்பு குறைந்து காணப்பட்டது... அவசர அவசரமாக ஒரு பெண்மணி கடையினுள் நுழைகிறாள்...

கொஞ்சம் தணிந்த குரலில்..எனக்கு இங்கு கொஞ்சம் சயனைட் கிடைக்குமா...???

கடைக்காரருக்கு தூக்கி வாரிப்போட்டது... இருப்பினும் தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பெண்மணியிடம் வினவினார்... ஏன் உங்களிற்கு சயனைட் தேவைப்படுகிறது...???

எனது கணவனை உடனடியாக கொல்லவேண்டும்...!!!! படாரென பதில் வந்தது அந்த பெண்மணியிடமிருந்து...

கடைக்காரருக்கு மீண்டும் ஒரு தர்மசங்கடமான நிலை... பணத்திற்காக இந்த பெண்ணுக்கு சயனைட் கொடுத்தால்... அவள் அதை தனது கணவனுக்கு கொடுத்து சாகடிப்பாள்... பின்னால் போலீஸ் விசாரணை வரும் போது கொலை குற்றத்துக்கு உதவி செய்ததற்கு தானும் உள்ளே போய் கம்பி என்ன வேண்டி வரும்... என யோசனை செய்துகொண்டிருக்கையில்... அந்த பெண்மணி குறுக்கறுத்து... நான் கேட்டது இங்கு கிடைக்குமா ...... ??? என கொஞ்சம் அதட்டலாகவே கேட்டால்....!!!

சட்டென யோசனையிலிருந்து மீண்ட கடைக்காரர்... சற்றே கடினமான குரலில் சொன்னார்... இங்க பாருங்க அம்மணி நாங்க சயனைட் எல்லாம் இங்க விக்கிறதில்லை... அது சரி ஏன் உங்கள் கணவரை கொலை செய்ய திட்டம் போடுகிறீர்கள்....???

இதை கேட்ட பெண்மணி...மெதுவாக தனது கைப்பையிலிருந்து ஒரு போட்டோவை வெளியே எடுத்து கடைக்காரரின் முன் போடுகிறாள்....

கண்கள் இருட்ட அந்த போட்டோவை பார்த்த கடைக்காரர்.....அப்படியா சங்கதி உங்களிடம் சயனைடுக்கான prescription இருப்பதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை ... என கேட்டபின் அமைதியாக ஒரு வில்லை சயனைட்டை எடுத்து பெண்மணியின் கைகளில் திணித்தார்...

அது சரி அந்த photoவில் இருந்தது என்ன....அந்த photo prescriptionஆகா மாறிய அதிசயம் என்ன.....

அந்த photoவில் குறிப்பிட்ட (மருந்தாக) கடைக்காரரின் மனைவி.... கடைக்கு வந்த பெண்மணியின் கணவனுடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மிக நெருக்கமாக அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது....

கோபம் அவசியமாக தேவைதானா???

கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை மற்றும் பதிலி செய்கைகள் காரணமாக உண்டாகிறது.
கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் விர்ரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

நீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றொன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.

கோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ-

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.
2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்
3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்
5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.
7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.
8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்
9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.
11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.
13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.
14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.
15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.
16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

கோபத்தை எப்படி அடக்குவது எப்படி என்பதை விளக்க ஒரு சின்ன கதை....

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் ஏறியிருந்த பெட்டியில் இரண்டு ஆங்கிலேயரும் ஏறியிருந்தனர்.
இரண்டு பேரும் விவேகானந்தரை வெறுப்போடு பார்த்தார்கள். இந்தியர்கள் என்றாலே அவர்களுக்கு இளக்காரம், ஏளனம்தான். அதுவும் துறவி என்றால் கேட்கவா வேண்டும். விவேகானந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என நினைத்து அவரைக்குறித்து அவர் காதுபடவே இழிவாகப் பேசினர்.

விவேகானந்தர் ஒரு வார்த்தையும் பதில் பேசவில்லை. சண்டையிடவில்லை. மௌனமாக அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தார்.
அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றது. விவேகானந்தர் ஸ்டேஷன் மாஸ்டரை அருகில் அழைத்து “குடிப்பதற்கு நல்ல நீர் கிடைக்குமா? என்ற ஆங்கிலத்தில் அழகாகக் கேட்டார்.
அவர் ஆங்கிலம் பேசியதைக் கேட்ட, இரண்டு ஆங்கிலேயர்களும் திடுக்கிட்டனர்.
“உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?” ஒருவர் வேகமாக விவேகானந்தரிடம் கேட்டார்.
“நன்கு எழுதவும் பேசவும் தெரியம்” ஆங்கிலத்திலேயே பதில் கூறினார் விவேகானந்தர்.
“அப்படியானால் நாங்கள் கடந்த அரைமணி நேரமாக உங்களைத் திட்டிக் கொண்டிருந்தோமே.. நீங்கள் ஏன் எங்களோடு சண்டையிடவில்லை?” என்றனர்.
அதற்கு விவேகானந்தர் பொறுமையாக விடை கூறினார். “நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல்முறையல்ல”
புத்திசாலித்தனமான பேச்சு சுவையாக இருக்கும்.

பிஸ்தா ஜோனும் பஸ் டிரைவர் மணியமும்...

பாடம் புகட்ட ஒரு கற்பனை கதை...


எங்கட மணியம் அண்ணன் சண்டை சச்சரவு எண்டால் கொஞ்சம் பின்னுக்குத்தான் நிற்பார்... ஏனெண்டால் நீங்க நினைக்கிறது போல எங்கட மணியம் அண்ணன் ஒன்றும் 6 அடி உயரும் 80kg பாரமும் இல்ல... ஆனா பஸ் ஓட்ரதில கில்லாடி...இத கண்டுதான் இவரை அரசாங்க போகுவரத்து சபைக்கு வேலைக்கு எடுத்தினம். ...







முதல் நாள் அதுவுமா எங்கட மணியம் அண்ணன் அவருக்கு கொடுக்கப்பட்ட பஸ் வண்டியை தரிப்பிடத்திலிருந்து அவர் போக வேண்டிய இடம் நோக்கி ஓட்ட ஆரம்பித்தார். எல்லாம் நல்ல படியாதான் போய் கொண்டு இருந்திச்சு. எங்கட மணியம் அண்ணனும் மிக அவதானமாக எல்லா தரிப்பிடங்களிலும் நிறுத்தி ஆட்களை ஏற்றி , இறக்கி சென்று கொண்டிருந்தார். சரியாக ஐந்தாவது தரிப்பிடம்... மணியம் அண்ணன் பஸ்ஸை ஸ்லொவ் பண்ணி தரிப்பிடம் பக்கமாக நிறுத்தினார்...அங்கு ஒரு வாட்ட சாட்டமான... உயரமான... பருமனான... கிட்ட தட்ட ஒரு ரெஸ்ட்லிங் வீரன் போல ஒருத்தன் பந்தாவா பஸுக்குல்ல ஏறினான்... எங்கட மணியம் அண்ணனிண்ட சோடி ... அவர்தான் பஸ் கண்டக்டர் .... எத்தனை தரம் டிக்கெட்...டிக்கெட்..என்று காட்டு கத்தல் கத்தியும் அவன் டிக்கெட் எடுக்கவில்லை. கண்டக்டரும் அப்பிடியும் இப்பிடியும் பார்த்து கடைசி எங்கட மணியம் அண்ணனிண்ட பக்கத்தில வந்து நின்றும் கத்தி பார்த்தார்...அப்பத்தான் எங்கட டிரைவர் மணியம் அண்ணனும் திரும்பி அவன ஒரு லுக்கு விட்டார், இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த எங்கட ரெஸ்ட்லிங் வீரன்..."பிஸ்தா ஜான் இந்த பஸ்ஸிலயெல்லாம் டிக்கெட் எடுக்க மாட்டான்...." என்று கொஞ்சம் கடுமையான குரலில் சொன்னான். இதை பார்த்த எங்கட டிரைவர் மணியம் அண்ணனிற்கு மூக்கு மேல கோபம்... இருந்தாலும் கதைக்க வேற பயம்...மெதுவா கண்டக்டரிட்ட சொன்னார்..."போன போகுது சனியன் இண்டைக்கு மட்டும் போய் தொலையட்டும் என்று...". அவனும் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும்... எங்கட டிரைவர் மணியம் அண்ணனை பார்த்து ஒரு முறைப்பு ஓன்று முறைச்சுப்போட்டு இறங்கி தன்ற பாட்டுக்கு நடந்து போய்டான். விட்டு ஒழிஞ்சது சனியன் என்று எங்கட மணியம் அண்ணனும் விட்டுபோட்டு போய்ட்டார். அடுத்த நாளும் அதே கதை.. அதுக்கு அடுத்த நாளும் அதே கதை...இப்படியே தினம் தினம் நடந்தது... அவன் ஏறுவன் "பிஸ்தா ஜான் இந்த பஸ்ஸிலயெல்லாம் டிக்கெட் எடுக்க மாட்டான் .." என்று சொல்லுவான்.. இடம் வந்தது இறங்கி போவன். இப்படி தினமும் நடக்கிறதா ஜோசித்து எங்கட டிரைவர் மணியம் அண்ணனிற்கு இரவில தூக்கமும் இல்ல. ஏற்கனவே எங்கட மணியம் அண்ணனிற்கு லூஸ் மணியம் போல உடம்பு வேற அதுவே பிஸ்தா ஜோனுக்கு பிளஸ் பாயிண்ட் ஆகி போச்சு. பொறுத்து பொறுத்து பார்த்து எங்கட மணியம் அண்ணனிற்கு ஏலாது என்று போய்ட்டு... ஒரு நாள் பொங்கி எழுந்தது சிங்கம்...உடனேயே பக்கத்துக்கு தெருவில் இருக்கிற ஜிம்மில போய் சேர்ந்தார் எங்கட மணியம் அண்ணன்...தினமும் உடல் பயிற்ச்சி அரோக்கியமான உணவு பழக்க வழக்கம் என்று வெகு விரைவில்... அதுவும் ஒரு சில கிழமைகளிலேயே எங்கட மணியம் அண்ணனும் ஒரு ரெஸ்ட்லிங் வீரன் போல உடம்ப தேத்தி சும்மா இரும்பு சுமோ கணக்கில இருந்தார்...(கிட்ட தட்ட எங்கட actor சூர்யா போல சிக்ஸ் பக்ஸ் உடம்பு போல) ....அந்த குறிப்பிட்ட நாளும் வழமை போல எங்கட மணியம் அண்ணன் தன்ற சோடி கண்டக்டரோட depot இல இருந்து பஸ்ஸ எடுத்துக்கொண்டு வழமையான பாதையிலேயே வந்தார்..எல்லாம் வழமை போல நடந்தது...அனால் அந்த ஒரு விடயம் மட்டும் வழமைக்கு மாறாக நடக்க போவது எங்கட மணியம் அண்ணனிட்கும் அவர படைச்ச அந்த கடவுளுக்கும் மட்டும் தெரிந்த விடயம்........அந்த பிஸ்தா ஜோனும் வழமையாக ஏறும் இடத்தில வைத்து பஸ்ஸில் ஏறினான்.......வழமை போல மணியம் அண்ணனிண்ட சோடி கண்டக்டர் டிக்கெட் ...டிக்கெட்...என்று காட்டு கத்தல் கத்தி கொண்டிருந்தார்... பிஸ்தா ஜோனும் வழமை போல..." இந்த பிஸ்தா ஜோன் இந்த பஸ்ஸிலயெல்லம் டிக்கெட் எடுக்க மாட்டான்...." என்று சொல்லி முடிக்கிறதிக்குள்ள... கிறீச்... பஸ்ஸ sudden brake போட்டு நிற்பாட்டி ஆவேசமாக எழும்பி பயணிகள் பக்கம் திரும்பி...சிங்கம் ஓன்று உறுமுவது போல "...அது என்ன நீ மட்டும் டிக்கெட் எடுக்காம..?..." என்று பிஸ்தா ஜோனை முழுங்கி விடுவதை போல பார்த்தார் எங்கட மணியம் அண்ணன் ...அப்ப பிஸ்தா ஜோன் ரொம்ப கூல சொன்னான் "....எனென்றால் ... இந்த பிஸ்தா ஜோனிடம் இந்த் மாதத்திற்கான பஸ் பாஸ் இன்னும் இருக்கு..." அப்ப பார்க்கவேணுமே எங்கட மணியம் அண்ணனிட முகத்தை...1000watts பல்பு fuse போனது போல இருந்திச்சு ... "" மணியன்ன ரைட்... பஸ் பின் தொங்கலில் இருந்து கண்டக்டரின் குரல் ஈனமாக கேட்டது...""


Management Lesson: "Be sure there is a problem in the first place before working hard to solve one." Don't make simple things complicated.