பிஸ்தா ஜோனும் பஸ் டிரைவர் மணியமும்...

பாடம் புகட்ட ஒரு கற்பனை கதை...


எங்கட மணியம் அண்ணன் சண்டை சச்சரவு எண்டால் கொஞ்சம் பின்னுக்குத்தான் நிற்பார்... ஏனெண்டால் நீங்க நினைக்கிறது போல எங்கட மணியம் அண்ணன் ஒன்றும் 6 அடி உயரும் 80kg பாரமும் இல்ல... ஆனா பஸ் ஓட்ரதில கில்லாடி...இத கண்டுதான் இவரை அரசாங்க போகுவரத்து சபைக்கு வேலைக்கு எடுத்தினம். ...







முதல் நாள் அதுவுமா எங்கட மணியம் அண்ணன் அவருக்கு கொடுக்கப்பட்ட பஸ் வண்டியை தரிப்பிடத்திலிருந்து அவர் போக வேண்டிய இடம் நோக்கி ஓட்ட ஆரம்பித்தார். எல்லாம் நல்ல படியாதான் போய் கொண்டு இருந்திச்சு. எங்கட மணியம் அண்ணனும் மிக அவதானமாக எல்லா தரிப்பிடங்களிலும் நிறுத்தி ஆட்களை ஏற்றி , இறக்கி சென்று கொண்டிருந்தார். சரியாக ஐந்தாவது தரிப்பிடம்... மணியம் அண்ணன் பஸ்ஸை ஸ்லொவ் பண்ணி தரிப்பிடம் பக்கமாக நிறுத்தினார்...அங்கு ஒரு வாட்ட சாட்டமான... உயரமான... பருமனான... கிட்ட தட்ட ஒரு ரெஸ்ட்லிங் வீரன் போல ஒருத்தன் பந்தாவா பஸுக்குல்ல ஏறினான்... எங்கட மணியம் அண்ணனிண்ட சோடி ... அவர்தான் பஸ் கண்டக்டர் .... எத்தனை தரம் டிக்கெட்...டிக்கெட்..என்று காட்டு கத்தல் கத்தியும் அவன் டிக்கெட் எடுக்கவில்லை. கண்டக்டரும் அப்பிடியும் இப்பிடியும் பார்த்து கடைசி எங்கட மணியம் அண்ணனிண்ட பக்கத்தில வந்து நின்றும் கத்தி பார்த்தார்...அப்பத்தான் எங்கட டிரைவர் மணியம் அண்ணனும் திரும்பி அவன ஒரு லுக்கு விட்டார், இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த எங்கட ரெஸ்ட்லிங் வீரன்..."பிஸ்தா ஜான் இந்த பஸ்ஸிலயெல்லாம் டிக்கெட் எடுக்க மாட்டான்...." என்று கொஞ்சம் கடுமையான குரலில் சொன்னான். இதை பார்த்த எங்கட டிரைவர் மணியம் அண்ணனிற்கு மூக்கு மேல கோபம்... இருந்தாலும் கதைக்க வேற பயம்...மெதுவா கண்டக்டரிட்ட சொன்னார்..."போன போகுது சனியன் இண்டைக்கு மட்டும் போய் தொலையட்டும் என்று...". அவனும் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும்... எங்கட டிரைவர் மணியம் அண்ணனை பார்த்து ஒரு முறைப்பு ஓன்று முறைச்சுப்போட்டு இறங்கி தன்ற பாட்டுக்கு நடந்து போய்டான். விட்டு ஒழிஞ்சது சனியன் என்று எங்கட மணியம் அண்ணனும் விட்டுபோட்டு போய்ட்டார். அடுத்த நாளும் அதே கதை.. அதுக்கு அடுத்த நாளும் அதே கதை...இப்படியே தினம் தினம் நடந்தது... அவன் ஏறுவன் "பிஸ்தா ஜான் இந்த பஸ்ஸிலயெல்லாம் டிக்கெட் எடுக்க மாட்டான் .." என்று சொல்லுவான்.. இடம் வந்தது இறங்கி போவன். இப்படி தினமும் நடக்கிறதா ஜோசித்து எங்கட டிரைவர் மணியம் அண்ணனிற்கு இரவில தூக்கமும் இல்ல. ஏற்கனவே எங்கட மணியம் அண்ணனிற்கு லூஸ் மணியம் போல உடம்பு வேற அதுவே பிஸ்தா ஜோனுக்கு பிளஸ் பாயிண்ட் ஆகி போச்சு. பொறுத்து பொறுத்து பார்த்து எங்கட மணியம் அண்ணனிற்கு ஏலாது என்று போய்ட்டு... ஒரு நாள் பொங்கி எழுந்தது சிங்கம்...உடனேயே பக்கத்துக்கு தெருவில் இருக்கிற ஜிம்மில போய் சேர்ந்தார் எங்கட மணியம் அண்ணன்...தினமும் உடல் பயிற்ச்சி அரோக்கியமான உணவு பழக்க வழக்கம் என்று வெகு விரைவில்... அதுவும் ஒரு சில கிழமைகளிலேயே எங்கட மணியம் அண்ணனும் ஒரு ரெஸ்ட்லிங் வீரன் போல உடம்ப தேத்தி சும்மா இரும்பு சுமோ கணக்கில இருந்தார்...(கிட்ட தட்ட எங்கட actor சூர்யா போல சிக்ஸ் பக்ஸ் உடம்பு போல) ....அந்த குறிப்பிட்ட நாளும் வழமை போல எங்கட மணியம் அண்ணன் தன்ற சோடி கண்டக்டரோட depot இல இருந்து பஸ்ஸ எடுத்துக்கொண்டு வழமையான பாதையிலேயே வந்தார்..எல்லாம் வழமை போல நடந்தது...அனால் அந்த ஒரு விடயம் மட்டும் வழமைக்கு மாறாக நடக்க போவது எங்கட மணியம் அண்ணனிட்கும் அவர படைச்ச அந்த கடவுளுக்கும் மட்டும் தெரிந்த விடயம்........அந்த பிஸ்தா ஜோனும் வழமையாக ஏறும் இடத்தில வைத்து பஸ்ஸில் ஏறினான்.......வழமை போல மணியம் அண்ணனிண்ட சோடி கண்டக்டர் டிக்கெட் ...டிக்கெட்...என்று காட்டு கத்தல் கத்தி கொண்டிருந்தார்... பிஸ்தா ஜோனும் வழமை போல..." இந்த பிஸ்தா ஜோன் இந்த பஸ்ஸிலயெல்லம் டிக்கெட் எடுக்க மாட்டான்...." என்று சொல்லி முடிக்கிறதிக்குள்ள... கிறீச்... பஸ்ஸ sudden brake போட்டு நிற்பாட்டி ஆவேசமாக எழும்பி பயணிகள் பக்கம் திரும்பி...சிங்கம் ஓன்று உறுமுவது போல "...அது என்ன நீ மட்டும் டிக்கெட் எடுக்காம..?..." என்று பிஸ்தா ஜோனை முழுங்கி விடுவதை போல பார்த்தார் எங்கட மணியம் அண்ணன் ...அப்ப பிஸ்தா ஜோன் ரொம்ப கூல சொன்னான் "....எனென்றால் ... இந்த பிஸ்தா ஜோனிடம் இந்த் மாதத்திற்கான பஸ் பாஸ் இன்னும் இருக்கு..." அப்ப பார்க்கவேணுமே எங்கட மணியம் அண்ணனிட முகத்தை...1000watts பல்பு fuse போனது போல இருந்திச்சு ... "" மணியன்ன ரைட்... பஸ் பின் தொங்கலில் இருந்து கண்டக்டரின் குரல் ஈனமாக கேட்டது...""


Management Lesson: "Be sure there is a problem in the first place before working hard to solve one." Don't make simple things complicated.

2 comments:

  1. //இந்த் மாதத்திற்கான பஸ் பாஸ் இன்னும் இருக்கு..//

    ஹா ஹா...
    நல்ல கதை..........

    ஒரு சின்ன வேண்டுகோள்,
    தொடர்ந்து எழுதாமல் பந்தி பந்தியாக எழுதினால் வாசிக்க இலகுவாக இருக்கும்...

    வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கோபி...
    நன்றி ஐயா நன்றி...இனி வரும் பதிவுகளில் மாற்றத்தை காணலாம்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன