நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... Time Waits For None ...


ஒரு சகோதரியின் அருமையை அறிய வேண்டுமா...? சகோதரி யாரும் இல்லாதவனிடம் கேட்டுப்பாருங்கள் ...

பத்து வருடங்களின் பெறுமதி தெரிய வேண்டுமா...? புதிதாக விவாகரத்து ஆனா தம்பதிகளிடம் கேட்டுப்பாருங்கள்...

ஒரு வருடத்தின் அருமையை உணர வேண்டுமா...? இறுதி சோதனையை தவறவிட்ட ஒரு மாணவனிடம் கேட்டுப்பாருங்கள்...

ஒன்பது மாதங்களின் பெறுமதியை உணர... சற்று முன் குழந்தையை பெற்றெடுத்த தாயிடம் கேட்டுப்பாருங்கள்...

ஒரு மாதத்தின் பெறுமதியை உணர வேண்டுமா...? உரிய காலத்திற்கு முன் குழந்தையை பெற்றெடுத்த தாயிடம் கேட்டுப்பாருங்கள்...

ஒரு கிழமையின் பெறுமதியை தெரிந்துகொள்ள... வாராந்த பத்திரிகை ஒன்றின் ஆசிரியரை கேட்டுப்பாருங்கள்...

ஒரு மணித்தியாலத்தின் அருமையை அறிய... பார்க்கத்துடிக்கும் காதலர்களை கேட்டுப்பாருங்கள்...

ஒரு நிமிடத்தின் அருமையை அறிய... பஸ்ஸையோ, புகையிரதத்தை அல்லது விமானத்தை தவறவிட்ட ஒரு பிரயாணியிடம் கேளுங்கள்...


ஒரு வினாடியின் பெறுமதியை தெரிந்துகொள்ள... பாரிய விபத்து ஒன்றிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய ஒருவரை கேட்டுப்பாருங்கள்...

ஒரு நொடியின் அருமையை தெரிய... ஒலிம்பிக் ஓட்டப்போடியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற ஒரு வீரனை கேட்டுப்பாருங்கள்...

நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... Time Waits For None ...


உங்களின் ஒவ்வொரு காணப்பொழுதையும் பெறுமதியாகப்பாருங்கள்...


உங்களிற்கு பிடித்தவர்களுடன் பகிரும்போது ஒவ்வொரு காணப்பொழுதும் பன்மடங்கு பெறுமதியாக படும் உங்களிற்கு...

4 comments:

  1. அருமையான கருத்தக்கள்! எங்கள் வீட்டில் முன்சுவரில் ஒரு மில்க்வைற் செய்தி இன்றைக்கும் இருக்கிறது! அதை பிரேம் போட்டு தூக்கி வைத்திருக்கிறோம்!

    நேரம் பெறுமதியானது!
    நேரம் பொன்னை விடப் பெரியது!
    பொன் கொடுத்தாலும் நேரம் திரும்பி வராது!

    ReplyDelete
  2. கருத்தக்கள் - கருத்துக்கள் என திருத்தி வாசிக்கவும்!

    ReplyDelete
  3. ஆமாம் ஒரு வருடத்தின் பெறுமதி பல மாணவர்களுக்கு புரியும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன