சயனைடுக்கே (Cyanide) ஒரு prescription .....

ஒரு மாலை வேளை... நகரின் மத்தியில் உள்ள ஒரு பிரபலமான மருந்தகம்... கொஞ்சம் பர பரப்பு குறைந்து காணப்பட்டது... அவசர அவசரமாக ஒரு பெண்மணி கடையினுள் நுழைகிறாள்...

கொஞ்சம் தணிந்த குரலில்..எனக்கு இங்கு கொஞ்சம் சயனைட் கிடைக்குமா...???

கடைக்காரருக்கு தூக்கி வாரிப்போட்டது... இருப்பினும் தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பெண்மணியிடம் வினவினார்... ஏன் உங்களிற்கு சயனைட் தேவைப்படுகிறது...???

எனது கணவனை உடனடியாக கொல்லவேண்டும்...!!!! படாரென பதில் வந்தது அந்த பெண்மணியிடமிருந்து...

கடைக்காரருக்கு மீண்டும் ஒரு தர்மசங்கடமான நிலை... பணத்திற்காக இந்த பெண்ணுக்கு சயனைட் கொடுத்தால்... அவள் அதை தனது கணவனுக்கு கொடுத்து சாகடிப்பாள்... பின்னால் போலீஸ் விசாரணை வரும் போது கொலை குற்றத்துக்கு உதவி செய்ததற்கு தானும் உள்ளே போய் கம்பி என்ன வேண்டி வரும்... என யோசனை செய்துகொண்டிருக்கையில்... அந்த பெண்மணி குறுக்கறுத்து... நான் கேட்டது இங்கு கிடைக்குமா ...... ??? என கொஞ்சம் அதட்டலாகவே கேட்டால்....!!!

சட்டென யோசனையிலிருந்து மீண்ட கடைக்காரர்... சற்றே கடினமான குரலில் சொன்னார்... இங்க பாருங்க அம்மணி நாங்க சயனைட் எல்லாம் இங்க விக்கிறதில்லை... அது சரி ஏன் உங்கள் கணவரை கொலை செய்ய திட்டம் போடுகிறீர்கள்....???

இதை கேட்ட பெண்மணி...மெதுவாக தனது கைப்பையிலிருந்து ஒரு போட்டோவை வெளியே எடுத்து கடைக்காரரின் முன் போடுகிறாள்....

கண்கள் இருட்ட அந்த போட்டோவை பார்த்த கடைக்காரர்.....அப்படியா சங்கதி உங்களிடம் சயனைடுக்கான prescription இருப்பதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை ... என கேட்டபின் அமைதியாக ஒரு வில்லை சயனைட்டை எடுத்து பெண்மணியின் கைகளில் திணித்தார்...

அது சரி அந்த photoவில் இருந்தது என்ன....அந்த photo prescriptionஆகா மாறிய அதிசயம் என்ன.....

அந்த photoவில் குறிப்பிட்ட (மருந்தாக) கடைக்காரரின் மனைவி.... கடைக்கு வந்த பெண்மணியின் கணவனுடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மிக நெருக்கமாக அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது....

1 comment:

  1. ஹா ஹா.....
    எப்போதோ வாசித்த ஞாபகம் இருந்தாலும் இப்போதுதான் தமிழில் வாசிக்கிறேன்....
    அசத்தல்....

    பந்திகளிடையே இடைவெளிவிட்டு எழுதியது வாசிக்க இலகுவாக உள்ளது..
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன